0:00
0:00

(தீயோரின் உயிர்களைக்) கடுமையாகப் பறிப்பவர்கள் மீது சத்தியமாக!
மகத்தான செய்தியைப் பற்றி(யா?)!
அதில் அவர்கள் (உண்மைக்கு) முரண்பட்டவர்கள்.
அவ்வாறல்ல (அவர்கள் அதை விரைவில்) அறிவார்கள்.
பிறகு(ம் கூறுகிறேன்), அவ்வாறல்ல. (உண்மையை விரைவில்) அறிவார்கள்.
பூமியை விரிப்பாக நாம் ஆக்கவில்லையா?
மலைகளை முளைக்கோல்களாக (நாம் ஆக்கவில்லையா?)
இன்னும் உங்களை ஜோடிகளாகப் படைத்தோம்.
இன்னும் உங்கள் நித்திரையை (உங்களுக்கு) ஓய்வாக ஆக்கினோம்.
இன்னும் இரவை ஆடையாக ஆக்கினோம்.
இன்னும் பகலை வாழ்வா(தாரம் தேடுவதற்கா)க ஆக்கினோம்.
இன்னும் உங்களுக்கு மேல் பலமான ஏழு வானங்களை அமைத்தோம்.
இன்னும் பிரகாசிக்கக்கூடிய விளக்கை (முதல் வானத்தில்) ஆக்கினோம்.
கார்மேகங்களிலிருந்து தொடர்ச்சியாக பொழியக்கூடிய (மழை) நீரை இறக்கினோம்.
அதன் மூலம் தானியத்தையும் தாவரத்தையும் தோட்டங்களையும் நாம் உற்பத்தி செய்வதற்காக (மழையை இறக்கினோம்).
இன்னும், அடர்த்தியான தோட்டங்களை (நாம் உற்பத்தி செய்வதற்காக மழையை இறக்கினோம்).
நிச்சயமாக தீர்ப்பு நாள் (நேரம்) குறிப்பிடப்பட்ட காலமாக இருக்கிறது.
ஆகவே, ‘சூர்’ ல் ஊதப்படுகின்ற நாளில், (அன்று நீங்கள் பல) கூட்டங்களாக வருவீர்கள்.
இன்னும் வானம் திறக்கப்படும். அது, (பல) வழிகளாக மாறிவிடும்.
இன்னும் மலைகள் அகற்றப்பட்டு (பார்ப்போருக்கு) அது கானல் நீராக மாறிவிடும்.
நிச்சயமாக நரகம் எதிர்பார்க்கக்கூடியதாக இருக்கிறது,
வரம்பு மீறியவர்களை (எதிர்பார்க்கக்கூடியதாகவும் அவர்களின்), தங்குமிடமாக(வும் நரகம்) இருக்கிறது.
அதில் (அவர்கள்) நீண்ட காலங்கள் தங்கக்கூடியவர்களாக (இருப்பார்கள்).
ஒரு குளிர்ச்சியை(யும்) (நல்ல) ஒரு பானத்தை(யும்), அதில் அவர்கள் சுவைக்க மாட்டார்கள்,
கொதி நீரை(யும்), சீழ் சலத்தை(யும்) தவிர.
(அவர்களின் செயல்களுக்குத்) தகுந்த கூலியாக (கூலி கொடுக்கப்படுவார்கள்).
நிச்சயமாக அவர்கள் (மறுமையில் செயல்கள்) விசாரிக்கப்படுவதை ஆதரவு வைக்காதவர்களாக இருந்தார்கள்.
இன்னும் நம் வசனங்களை அதிகமாகப் பொய்ப்பித்தார்கள்.
இன்னும் (அவர்களின் செயல்கள்) எல்லாவற்றையும் எழுதி அவற்றைப் பதிவு செய்தோம்.
ஆகவே, (வேதனையை) சுவையுங்கள், வேதனையைத் தவிர (வேறெதையும்) உங்களுக்கு அதிகப்படுத்தவே மாட்டோம்.
அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு நிச்சயமாக வெற்றி(யும்) உண்டு.
தோட்டங்களும் திராட்சைகளும் (அவர்களுக்கு) உண்டு.
இன்னும் சம வயதுடைய, மார்பு நிமிர்ந்த கன்னிகளும் உண்டு.
இன்னும் (மது) நிரம்பிய கிண்ணமும் (அவர்களுக்கு) உண்டு.
அதில் வீண் பேச்சை(யும்), (ஒருவர் மற்றவரைப்) பொய்ப்பிப்பதை(யும்) செவியுற மாட்டார்கள்.
உம் இறைவனிடமிருந்து கூலியாக, கணக்கிடப்பட்ட (போதுமான) கொடையாக (இவற்றை அவர்கள் வழங்கப்படுவார்கள்).
(அவன்) வானங்கள், இன்னும் பூமி, இன்னும் அவ்விரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின் அதிபதி, பேரருளாளன் (ஆவான்). அவனிடம் (அனுமதியின்றி) பேசுவதற்கு (அந்நாளில் மக்கள்) உரிமை பெறமாட்டார்கள்.
ஜிப்ரீலும், மலக்குகளும் வரிசையாக நிற்கின்ற நாளில் பேரருளாளன் (அல்லாஹ்) எவருக்கு அனுமதித்தானோ அவரைத் தவிர (மற்றவர்கள்) பேசமாட்டார்கள். (அனுமதிக்கப்பட்டவர்) சரியானதையே கூறுவார்.
அதுதான் உண்மையான நாள். (அது நிகழ்ந்தே தீரும்.) ஆகவே, யார் (நற்பாக்கியத்தை) நாடுவாரோ (அவர்) தம் இறைவனருகில் தங்குமிடத்தை ஆக்கிக்கொள்வார்.
மனிதன் தனது இரு கரங்கள் முற்படுத்தியவற்றைப் பார்க்கின்ற நாளில் (நிகழ இருக்கின்ற) சமீபமான ஒரு வேதனையைப் பற்றி நிச்சயமாக நாம் உங்களை எச்சரித்தோம். இன்னும் (அந்நாளில்) நிராகரிப்பாளன் நான் மண்ணாக ஆகவேண்டுமே என்று கூறுவான்.
السورة التالية
Icon