ﮯ
surah.translation
.
ﰡ
யா சீன்.
அல்லாஹ் மக்களுக்கு (தன்) அருள்களில் இருந்து எதையும் திறந்தால் அதை தடுப்பவர் எவரும் இல்லை. அவன் எதையும் தடுத்து நிறுத்திவிட்டால் அவனுக்குப் பின் அதை விடுபவர் எவரும் இல்லை. அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான்.
மக்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வுடைய அருட்கொடையை நினைவு கூருங்கள். வானங்களில் இருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிக்கின்ற படைப்பாளன் (வேறு) யாரும் அல்லாஹ்வை அன்றி உண்டா? அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் அறவே இல்லை. ஆகவே, நீங்கள் எப்படி (அவனைவிட்டு) திருப்பப்படுகிறீர்கள்.
(நபியே!) அவர்கள் உம்மை பொய்ப்பித்தால், (அது புதிதல்ல.) உமக்கு முன்னரும் பல தூதர்கள் (இவர்களுக்கு முன்னுள்ளவர்களால்) பொய்ப்பிக்கப் பட்டுள்ளனர். அல்லாஹ்வின் பக்கமே எல்லாக் காரியங்களும் திருப்பப்படும்.
மக்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே! ஆகவே, உலக வாழ்க்கை உங்களை மயக்கிவிட வேண்டாம். ஏமாற்றக்கூடியவனும் (ஷைத்தானும்) அல்லாஹ்வின் விஷயத்தில் உங்களை மயக்கிவிட வேண்டாம்.
நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரி ஆவான். ஆகவே, அவனை எதிரியாகவே எடுத்துக்கொள்ளுங்கள்! அவன் தனது கூட்டத்தார்களை (கட்சிக்காரர்களை) அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்துவிட்டெரியும் நரகவாசிகளாக ஆகுவதற்காகத்தான்.
எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு. எவர்கள் நம்பிக்கைகொண்டு, நன்மைகளை செய்தார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.
எவர் ஒருவர், அவருக்கு தனது கெட்ட செயல் அலங்கரிக்கப்பட்டு அவர் அதை அழகாக கருதினாரோ (அவர் மீது நீர் கவலைப்படாதீர்.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுகின்றவரை வழிகெடுக்கின்றான். தான் நாடுகின்றவரை நேர்வழிபடுத்துகின்றான். ஆகவே, அவர்கள் மீதுள்ள கவலைகளால் உமது உயிர் போய்விட (-அழிந்துவிட) வேண்டாம். (நீர் கவலைப்படாதீர்.) நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவன் ஆவான்.
அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகின்றான். அவை மேகத்தை கிளப்புகின்றன. அ(ந்த மேகத்)தை வறண்டுபோன ஊருக்கு ஓட்டி வருகிறோம். அதன் மூலம் அந்த பூமியை அது வறண்டதற்கு பின்னர் நாம் உயிர்ப்பிக்கின்றோம். இப்படித்தான் (படைப்புகள் மறுமுறை) எழுப்பப்படுவதும் (நிகழும்).
யார் கண்ணியத்தை நாடுகின்றவராக இருப்பாரோ (அவர் அல்லாஹ்வைக் கொண்டு கண்ணியத்தை அடையட்டும். ஏனெனில்,) அல்லாஹ்விற்குத்தான் கண்ணியம் அனைத்தும் சொந்தமானது. அவன் பக்கம்தான் நல்ல சொற்கள் உயர்கின்றன. நல்ல செயல் அதை (மேலும்) உயர்த்துகிறது. தீமைகளுக்கு சூழ்ச்சி செய்பவர்கள் - அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி - அது அழிந்து போய்விடும்.
அல்லாஹ்தான் உங்களை மண்ணிலிருந்து, பிறகு, இந்திரியத்திலிருந்து படைத்தான். பிறகு, அவன் உங்களை ஜோடிகளாக ஆக்கினான். ஒரு பெண் கர்ப்பமாவதும் இல்லை, கர்ப்பம் தரிப்பதும் இல்லை அவன் அறிந்தே தவிர. நீண்ட வயது கொடுக்கப்பட்டவர் வயது கொடுக்கப்படுவதில்லை, இன்னும் அவருடைய வயதில் குறைக்கப்படுவதில்லை பதிவுப் புத்தகத்தில் இருந்தே தவிர. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு மிக எளிதானதே.
இரண்டு கடல்களும் சமமாகாது. இது (-இதன் பானம்) அதை குடிப்பதற்கு இலகுவான, மதுரமான, சுவையானதாகும். (மற்ற) இதுவோ மிகவும் கசப்பான உவர்ப்பானது. (இவை) எல்லாவற்றிலிருந்தும் நீங்கள் பசுமையான கறியை சாப்பிடுகிறீர்கள்; நீங்கள் அணிகின்ற ஆபரணங்களை (அவற்றிலிருந்து) உற்பத்தி செய்துகொள்கிறீர்கள். அவற்றில் (-அந்த கடல்களில்) கப்பல்களை (தண்ணீரை) கிழித்துச் செல்லக்கூடியதாக பார்க்கின்றீர், நீங்கள் அவனது அருள்களிலிருந்து (உங்களுக்கு விதிக்கப்பட்டதை) நீங்கள் தேடுவதற்காகவும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (அந்த கப்பல்களில் உங்களை பயணிக்க வைத்தான்).
இரவை பகலில் நுழைக்கின்றான்; பகலை இரவில் நுழைக்கின்றான். சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தினான். எல்லாம் குறிப்பிட்ட தவணையை நோக்கி ஓடுகின்றன. அவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ் ஆவான். அவனுக்கே ஆட்சி அனைத்தும் உரியது. அவனை அன்றி நீங்கள் அழைப்பவர்கள் (-நீங்கள் வணங்குகின்ற உங்கள் தெய்வங்கள்) ஒரு (கொட்டையின் மீதுள்ள) தொலிக்குக் கூட உரிமை பெற மாட்டார்கள்.
நீங்கள் அவர்களை அழைத்தாலும் அவர்கள் உங்கள் அழைப்பை செவிமடுக்க மாட்டார்கள். அவர்கள் செவிமடுத்தாலும் உங்களுக்கு பதில் தர மாட்டார்கள். மறுமை நாளில் நீங்கள் இணைவைத்ததை மறுத்து விடுவார்கள். ஆழ்ந்தறிபவன் (-அல்லாஹ்வைப்) போன்று உமக்கு (வேறு யாரும் இந்த சிலைகளைப் பற்றி உண்மை செய்திகளை) அறிவிக்க முடியாது.
மக்களே! நீங்கள்தான் அல்லாஹ்வின் பக்கம் தேவையுள்ளவர்கள். அல்லாஹ் - அவன்தான் முற்றிலும் நிறைவானவன், புகழுக்குரியவன் ஆவான்.
அவன் நாடினால் உங்களை அழித்து விடுவான். (வேறு) ஒரு புதிய படைப்பை அவன் கொண்டு வருவான்.
அது, அல்லாஹ்விற்கு சிரமமானதாக இல்லை.
பாவியான ஓர் ஆன்மா மற்றோர் (பாவியான) ஆன்மாவின் பாவத்தை சுமக்காது. பாவச்சுமையுடைய ஓர் ஆன்மா தனது சுமையின் பக்கம் (அதை சுமக்க வேறு ஓர் ஆன்மாவை) அழைத்தால், -அது (அழைக்கப்பட்ட ஆன்மா அதன்) உறவினராக இருந்தாலும் சரியே அதில் இருந்து (-அழைத்த அந்த ஆன்மாவின் பாவச்சுமையில் இருந்து) ஏதும் சுமக்கப்பட முடியாது. (நபியே!) நீர் எச்சரிப்பதெல்லாம் தங்கள் இறைவனை மறைவில் அஞ்சுகின்றவர்களைத் தான். அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள். யார் பரிசுத்தம் அடைகிறாரோ அவர் பரிசுத்தம் அடைவதெல்லாம் தனது நன்மைக்காகத்தான். இன்னும் அல்லாஹ்வின் பக்கம்தான் மீளுமிடம் இருக்கிறது.
குருடரும் பார்வையுடையவரும் சமமாக மாட்டார்.
இருள்களும் வெளிச்சமும் சமமாகாது. நிழலும் வெயிலும் சமமாகாது.
இருள்களும் வெளிச்சமும் சமமாகாது. நிழலும் வெயிலும் சமமாகாது.
உயிருள்ளவர்களும் இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுகின்றவரை செவியேற்க வைப்பான். மண்ணறையில் உள்ளவர்களை செவியேற்க வைப்பவராக நீர் இல்லை.
நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே தவிர வேறு இல்லை.
நிச்சயமாக நாம் உம்மை நற்செய்தி கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் சத்தியத்தைக் கொண்டு அனுப்பினோம். எந்த ஒரு சமுதாயமும் இல்லை அவர்களில் அச்சமூட்டி எச்சரிப்பவர் சென்றிருந்தே தவிர.
இவர்கள் உம்மை பொய்ப்பித்தால், திட்டமாக இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் (தங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களை) பொய்ப்பித்துள்ளனர். அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் இன்னும் பிரகாசமான வேதங்களையும் அவர்கள் கொண்டு வந்தனர்.
பிறகு, நிராகரித்தவர்களை நான் தண்டித்தேன். எனது மாற்றம் (எனது தண்டனை) எப்படி இருந்தது?
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தில் இருந்து மழையை இறக்கினான். அதன் மூலம் பலதரப்பட்ட நிறங்களை உடைய கனிகளை நாம் உற்பத்தி செய்தோம். மலைகளில் வெண்மையான, சிவப்பான பாதைகள், (உடைய மலைகளும்) உள்ளன. அவற்றின் நிறங்கள் பலதரப்பட்டவையாக உள்ளன. இன்னும் கருப்பான மலைகளும் உள்ளன.
மக்களிலும் (ஏனைய) கால்நடைகளிலும் ஆடு மாடு ஒட்டகங்களிலும் இவ்வாறே (அவற்றின்) நிறங்கள் மாறுபட்டவை உள்ளன. அல்லாஹ்வை அவனது அடியார்களில் அஞ்சுவதெல்லாம் அறிஞர்கள்தான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா மன்னிப்பாளன் ஆவான்.
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகின்றார்களோ, இன்னும் தொழுகையை நிலைநிறுத்தி, நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தர்மம் செய்தார்களோ அவர்கள் அறவே அழிந்து போகாத வியாபாரத்தை ஆதரவு வைக்கின்றனர்.
அவன் (-அல்லாஹ்) அவர்களுக்கு அவர்களின் கூலிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கும் தனது அருளில் இருந்து மேலும் அவன் அவர்களுக்கு அதிகப்படுத்துவதற்கும் (அவர்கள் அந்த நல்லமல்களைச் செய்தார்கள்). நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன், நன்றியுடையவன் ஆவான்.
எதை உமக்கு நாம் வஹ்யி அறிவித்தோமோ அதாவது இந்த வேதம் அதுதான் சத்தியமானது. அது தனக்கு முன்னுள்ளதை உண்மைப்படுத்துகிறது. நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களை ஆழ்ந்தறிபவன், உற்று நோக்குபவன் ஆவான்.
பிறகு இந்த வேதத்தை நமது அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு கொடுத்தோம். அவர்களில் தனக்குத் தானே தீமை செய்தவரும் இருக்கின்றார். அவர்களில் நடுநிலையானவரும் இருக்கின்றார். இன்னும் அவர்களில் அல்லாஹ்வின் அனுமதிப்படி நன்மைகளில் முந்துகின்றவரும் இருக்கின்றார். இதுதான் மாபெரும் சிறப்பாகும்.
“அத்ன்” சொர்க்கங்கள் - அவர்கள் அவற்றில் நுழைவார்கள்; அவற்றில் தங்கத்தினாலான காப்புகளிலிருந்தும் (-வளையல்களிலிருந்தும்) முத்து (ஆபரணங்களு)ம் அவர்கள் அணிவிக்கப்படுவார்கள். இன்னும் அவர்களின் ஆடைகள் அவற்றில் பட்டுத் துணியாகும்.
அவர்கள் கூறுவார்கள்: எங்களை விட்டு கவலையைப் போக்கிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும். நிச்சயமாக எங்கள் இறைவன் மகா மன்னிப்பாளன், நன்றியுடையவன் ஆவான்.
அவன் தனது அருளினால் எங்களை நிரந்தர இல்லத்தில் தங்க வைத்தான். அதில் எங்களுக்கு சோர்வும் ஏற்படாது. அதில் எங்களுக்கு களைப்பும் ஏற்படாது.
நிராகரித்தவர்கள் அவர்களுக்கு நரக நெருப்புதான் உண்டு. அவர்களுக்கு (மரணம் நிகழும் என) தீர்ப்பளிக்கப்படாது. ஆகவே, அவர்கள் மரணிக்க மாட்டார்கள். அதன் தண்டனை அவர்களை விட்டும் இலேசாக்கப்படாது. இப்படித்தான் எல்லா நிராகரிப்பாளர்களுக்கும் நாம் கூலிகொடுப்போம்.
அவர்கள் அதில் கதறுவார்கள்: “எங்கள் இறைவா எங்களை வெளியேற்று! நாங்கள் செய்து கொண்டிருந்தது அல்லாமல் வேறு நல்ல அமல்களை செய்வோம்.” அறிவுரை பெறுபவர் அறிவுரை பெறுகின்ற (காலம்)வரை நாம் உங்களுக்கு (உலகத்தில்) வாழ்க்கையளிக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்தார். ஆகவே, (இந்த வேதனையை) சுவையுங்கள்! அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவரும் இல்லை.
நிச்சயமாக அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள மறைவானவற்றை நன்கறிந்தவன் ஆவான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
அவன்தான் உங்களை பூமியில் பிரதிநிதிகளாக ஆக்கினான். எவர் நிராகரிப்பாரோ அவருடைய நிராகரிப்பு அவருக்குத்தான் தீங்காகும். நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் நிராகரிப்பு அவர்களின் இறைவனிடம் கோபத்தைத் தவிர (வேறு எதையும்) அதிகப்படுத்தாது. நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் நிராகரிப்பு நஷ்டத்தைத் தவிர (வேறு எதையும்) அதிகப்படுத்தாது.
(நபியே!) கூறுவீராக! அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைக்கின்ற உங்கள் இணை தெய்வங்களைப் பற்றி அறிவியுங்கள்! பூமியில் அவை எதைப் படைத்தன என்று எனக்கு காண்பியுங்கள். அல்லது வானங்களில் அவர்களுக்கு ஏதும் பங்கு உண்டா? அல்லது அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தை கொடுத்து, அவர்கள் அது விஷயத்தில் தெளிவான சான்றின் மீது இருக்கின்றார்களா?! மாறாக, அநியாயக்காரர்கள் அவர்களில் சிலர் சிலருக்கு ஏமாற்றத்தைத் தவிர (உண்மையை) வாக்களிப்பதில்லை.
நிச்சயமாக அல்லாஹ் வானங்களையும் பூமியையும் அவை இரண்டும் (அவற்றின் இடங்களை விட்டு) நீங்கிவிடாமல் தடுத்து வைத்திருக்கின்றான். அவை இரண்டும் நீங்கிவிட்டால் அவனுக்குப் பின்னர் எவர் ஒருவரும் அவ்விரண்டையும் தடுத்து வைக்க முடியாது. நிச்சயமாக அவன் மகா சகிப்பாளனாக மகா மன்னிப்பாளனாக இருக்கின்றான்.
அவர்கள் மிக உறுதியாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தனர்: “அவர்களிடம் ஓர் எச்சரிப்பாளர் வந்தால், சமுதாயங்களில் (நேர்வழிபெற்ற) ஒரு சமுதாயத்தை விட மிக அதிகம் நேர்வழி பெற்றவர்களாக நிச்சயமாக அவர்கள் இருந்திருப்பார்கள்” என்று. அவர்களிடம் ஓர் எச்சரிப்பாளர் வந்த போது அது அவர்களுக்கு (சத்தியத்தை விட்டு) விலகிச் செல்வதைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை.
பூமியில் பெருமையடிப்பதையும் தீய சூழ்ச்சி செய்வதையும் தவிர வேறு எதையும் அதிகப்படுத்தவில்லை. தீய சூழ்ச்சி அதை செய்தவர்களைத் தவிர சூழ்ந்துகொள்ளாது. முன் சென்றோரின் வழிமுறையைத் தவிர (வேறு எதையும்) இவர்கள் எதிர்பார்க்கின்றனரா? அல்லாஹ்வின் வழிமுறையில் அறவே மாற்றத்தை நீர் காணமாட்டீர். இன்னும் அல்லாஹ்வின் வழிமுறையில் நீர் எவ்வித திருப்பத்தையும் காணமாட்டீர்.
அவர்கள் பூமியில் பயணித்து, அவர்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று பார்க்கவில்லையா! அவர்கள் இவர்களை விட பலத்தால் கடுமையானவர்களாக இருந்தனர். அல்லாஹ் -வானங்களில், பூமியில் உள்ள எதுவும் அவனை பலவீனப்படுத்தக்கூடியதாக இருக்கவில்லை. நிச்சயமாக அவன் நன்கறிந்தவனாக, பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
அல்லாஹ் மக்களை அவர்கள் செய்ததற்காக தண்டிப்பதாக இருந்தால் அதன் மேற்பரப்பில் (-பூமியின் மேல்) எந்த உயிரினத்தையும் அவன் விட்டிருக்க மாட்டான். எனினும் ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை அவன் பிற்படுத்தி வைக்கின்றான். அவர்களுடைய தவணை வந்துவிட்டால் (அவர்கள் அவனது தண்டனையை விட்டும் தப்பிக்க முடியாது. ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களை உற்றுநோக்கியவனாக இருக்கின்றான்.பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...