21. (அவரை வாங்கியவர்கள், அவரை எகிப்துக்குக் கொண்டு வந்து அந்நாட்டு அதிபதியிடம் விற்று விட்டனர்.) எகிப்தில் அவரை வாங்கியவர், தன் மனைவியை நோக்கி ‘‘நீ இவரை கண்ணியமாக வைத்துக்கொள்; அவரால் நாம் நன்மை அடையலாம்; அல்லது அவரை நாம் நம் (வளர்ப்பு) மகனாக்கிக் கொள்ளலாம்'' என்று கூறினார். யூஸுஃப் அவ்வூரில் ஆதிக்கம் செலுத்துவதற்காகவும் (முன்னர் அவர் கண்டது போன்ற) கனவுகளின் வியாக்கியானங்களை அவருக்குக் கற்பிப்பதற்காகவும் இவ்வாறு நாம் அவருக்கு வசதி செய்தோம். அல்லாஹ், தன் காரியத்தை நிறைவேற்றுவதில் (அனைவரையும்) மிகைத்தவன் ஆவான். ஆனால், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.