25. (நபியே!) சந்தேகமற்ற ஒரு (விசாரணை) நாளில் நாம் அவர்களை ஒன்று சேர்த்து (அவர்களுடைய) ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதன் செயலுக்குத் தக்க பலன் முழுமையாக அளிக்கப்பட்டால் (அவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்? அவர்கள் (தங்கள் பிரதிபலனை அடைவதில்) சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.