41. (அதற்கு) ஜகரிய்யா ‘‘என் இறைவனே! இதற்கு எனக்கொரு அத்தாட்சி அளிப்பாயாக'' என்று கேட்டார். அதற்கு (இறைவன்) ‘‘உமக்கு அளிக்கப்படும் அத்தாட்சியாவது மூன்று நாள்கள் வரை ஜாடையாகவே தவிர நீர் மனிதர்களுடன் பேசமாட்டீர். (அந்நாள்களில்) நீர் உமது இறைவனை அதிகமாக நினைத்துக் கொண்டும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதிசெய்து கொண்டும் இருப்பீராக'' என்று கூறினான்.


الصفحة التالية
Icon