44. (நபியே!) இவை (அனைத்தும் நீர் அறியாத) மறைவான விஷயங்களாகும். இவற்றை நாம் உமக்கு வஹ்யின் மூலம் அறிவிக்கிறோம். மர்யமை (வளர்க்க) யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்று (அறிய) அவர்கள் தங்கள் எழுது கோல்களை (ஆற்றில்) எறிந்தபோதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப் பற்றி) அவர்கள் தர்க்கித்துக் கொண்டபோதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.