86. அல்லாஹ் எப்படி ஒரு சமூகத்தினரை நேரான வழியில் செலுத்துவான். அவர்களோ, தங்களிடம் வந்த பல அத்தாட்சிகளின் மூலம் நிச்சயமாக (அல்லாஹ்வுடைய) தூதர் உண்மையானவர் என சாட்சியம் கூறி நம்பிக்கை கொண்டதன் பின்னரும் (அத்தூதரை) நிராகரிக்கின்றனர். அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார சமூகத்தினரை நேரான வழியில் செலுத்துவதில்லை.