91. நிச்சயமாக எவர்கள் நிராகரித்து (அந்நிராகரிப்பிலிருந்து மீளாது) நிராகரித்த வண்ணமே இறந்தும் விடுகின்றனரோ அவர்களில் ஒருவனுக்கு இப்பூமி நிறைய தங்கம் இருந்து, அதைத் (தன் குற்றத்தை மன்னிப்பதற்குத்) தனக்கு ஈடாக அவன் கொடுத்த போதிலும் (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு. இவர்களுக்கு உதவி செய்பவர்கள் (அங்கு) ஒருவரும் இருக்கமாட்டார்!