93. இஸ்ரவேலர்களுக்கு தவ்றாத் அருளப்படுவதற்கு முன்னர் எல்லா உணவும் ஆகுமானதாகவே இருந்தது. எனினும், இஸ்ராயீல் தனக்கு விலக்கிக் கொண்டவற்றைத் தவிர. (ஆகவே, இதற்கு மாறாகக் கூறும் யூதர்களை நோக்கி நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் தவ்றாத்தைக் கொண்டு வந்து ஓதிக் காண்பியுங்கள்.''