5. (இவ்வாறே) இவர்களுக்கு முன்னர் நூஹ்வுடைய மக்களும், அவர்களுக்குப் பின் வந்த ஒவ்வொரு கூட்டத்தினரும் (நம் வசனங்களைப் பொய்யாக்கித்) தங்களிடம் வந்த தூதர்களிடம் குற்றம் கண்டு பிடிக்கவே கருதினார்கள். சத்தியத்தை அழித்து விடுவதற்காகப் பொய்யான விஷயங்களைக் கொண்டு (அவர்களுடன்) தர்க்கித்தார்கள். ஆதலால், அவர்களை நாம் (வேதனையைக் கொண்டு) பிடித்துக் கொண்டோம். ஆகவே, (அவர்களுக்கு) எனது தண்டனை எப்படி இருந்தது? (என்பதைக் கவனிப்பீராக!)