29. ‘‘என் மக்களே! இன்றைய தினம் அதிகாரம் உங்கள் கையில்தான் இருக்கிறது. இத்தேசத்தில் (நீங்களே) ஆதிக்கம் வகிக்கிறீர்கள். ஆயினும், அல்லாஹ்வுடைய வேதனை நமக்கு வந்து விட்டால், (அதைத் தடுத்து) நமக்கு உதவி செய்பவன் யார்?'' (என்றும் கூறினார்). அதற்கு, ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி,) ‘‘நான் (சரி என்று) கண்டவற்றை தவிர (வேறொன்றையும்) நான் உங்களுக்கு அறிவிக்கவில்லை. நேரான வழியைத் தவிர மற்றெதனையும் நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை'' என்று கூறினான்.