67. அவன்தான் உங்களை (ஆரம்பத்தில்) மண்ணிலிருந்தும் பின்னர், இந்திரியத்துளியிலிருந்தும், பின்னர், கருவிலிருந்தும் படைத்தான். பிறகு, அவனே உங்களை ஒரு சிசுவாகவும் வெளிப்படுத்துகிறான். பின்னர், (படிப்படியாக) நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து, பின்னர் நீங்கள் முதியவர்களாக ஆகிறீர்கள். இதற்கு முன்னரும் உங்களில் பலர் இறந்து விடுகின்றனர். ஆயினும், (உங்களில் ஒவ்வொருவரும்) குறிப்பிட்ட தவணையை அடைந்தே தீருகிறீர்கள். இதை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!