77. (நபியே!) பொறுமையுடன் (உறுதியாக) இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது. அவர்களை நாம் பயமுறுத்துகின்ற வேதனைகளில் சிலவற்றை (உமது வாழ்நாளில்) நாம் உமக்குக் காண்பித்தாலும் சரி, அல்லது, (அவை வருவதற்கு முன்னதாகவே) நாம் உம்மைக் கைப்பற்றி (நீர் இறந்து) விட்டாலும் சரி, நிச்சயமாக அவர்கள் நம்மிடமே கொண்டு வரப்படுவார்கள்.