83. அவர்களு(க்காக அனுப்பப்பட்ட நம்மு)டைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டுவந்த சமயத்தில் (அதை அவர்கள் பரிகாசம் செய்து நிராகரித்துவிட்டு, இவ்வுலக வாழ்க்கைச் சம்பந்தமாகத்) தங்களிடமுள்ள கல்வி (திறமைகளைப்) பற்றிப் பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள். எனினும், (இறுதியில்) அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தது அவர்களைச் சூழ்ந்து கொண்டது.