44. இதை அரபி அல்லாத (வேறு) மொழியில் உள்ள குர்ஆனாக இறக்கி வைத்திருந்தால், (இந்த மக்காவாசிகள்) இதனுடைய வசனங்கள் (நமது அரபி மொழியில்) விவரித்துக் கூறப்பட்டிருக்க வேண்டாமா? என்றும், இதுவோ அரபி அல்லாத (வேறு) மொழி (நாமோ அதை அறியாத அரபிகள்) என்றும் கூறுவார்கள். (நபியே!) கூறுவீராக: ‘‘இது (அவர்களுடைய அரபி மொழியில் இருப்பதுடன்) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நேரான வழியாகவும், (சந்தேக நோயுள்ள உள்ளங்களுக்கு) நல்லதொரு பரிகாரமாகவும் இருக்கிறது. எவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுடைய காதுகளுக்கு செவிடாகவும், அவர்களுடைய பார்வையை போக்கக் கூடியதாகவும் இருக்கிறது. அவர்கள் (உமது சமீபத்திலிருந்த போதிலும்) வெகு தொலை தூரத்திலிருந்து அழைக்கப்படுகிறார்கள் (போல் இருக்கின்றது).