45. மேலும், சிறுமைப்பட்டுத் தலை கவிழ்ந்தவர்களாகவும், (வேதனையைக்) கடைக் கண்ணால் பார்த்தவண்ணம் அவர்களை நரகத்தின் முன் கொண்டு வரப்படுவதையும் நீர் காண்பீர். மேலும், நம்பிக்கை கொண்டவர்கள் (அவர்களை நோக்கி) ‘‘எவர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் (இம்மையில்) நஷ்டத்தைத் தேடிக் கொண்டார்களோ அவர்கள் மறுமையில் நிச்சயமாக முற்றிலும் நஷ்டத்தை அடைந்தவர்கள்தான்'' என்று கூறுவார்கள். நிச்சயமாக (இத்தகைய) அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் தங்கிவிடுவார்கள் என்பதை நீர் அறிந்துகொள்வீராக.