58. மேலும், (உங்கள் மூதாதையர்களை நோக்கி) “நீங்கள் இந்த நகருக்கு சென்று அதில் உங்களுக்கு விருப்பமான இடத்தில் (விருப்பமானவற்றைத்) தாராளமாகப் புசியுங்கள்; அதன் வாயிலில் (நுழையும்பொழுது) தலை குனிந்து செல்லுங்கள்; ‘ஹித்ததுன்' (எங்கள் பாவச்சுமை நீங்குக!) எனவும் கூறுங்கள். உங்கள் குற்றங்களை நாம் மன்னித்து விடுவோம். நன்மை செய்தவர்களுக்கு (அதன் கூலியை) அதிகப்படுத்தியும் கொடுப்போம்'' எனக் கூறியிருந்தோம்.