60. மூஸா தன் இனத்தாரு(டன் ‘தீஹ்' என்னும் பகுதிக்குச் சென்ற சமயத்தில் தண்ணீர் கிடைக்காமல் தாகத்தால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அவர்களுக்)குத் தண்ணீர் தேடியபோது (நாம் அவரை நோக்கி) “நீங்கள் உங்கள் தடியால் இக்கல்லை அடியுங்கள்'' எனக் கூறினோம். (அவர் அவ்வாறு அடித்ததும்) உடனே அதில் இருந்து பன்னிரண்டு ஊற்றுகள் உதித்தோடின. (அவருடைய பன்னிரண்டு பிரிவு) மக்கள் அனைவரும் தாங்கள் அருந்தும் தண்ணீர்த் துறையைத் தெளிவாக அறிந்து கொண்டார்கள். (அப்பொழுது நாம் அவர்களை நோக்கி “உங்களுக்கு) அல்லாஹ் கொடுத்த (‘மன்னு மற்றும் ஸல்வா' என்னும் உணவு பதார்த்தத்)திலிருந்து புசியுங்கள். (கல்லிலிருந்து உதித்தோடும் இந்நீரைப்) பருகுங்கள். ஆனால், பூமியில் கடுமையாக விஷமம் செய்துகொண்டு அலையாதீர்கள்'' (என்று கூறினோம்).


الصفحة التالية
Icon