27. (நபியே!) ஆதமுடைய (ஹாபீல், காபீல் என்னும்) இரு மகன்களின் உண்மைச் செய்திகளை நீர் அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பீராக. இருவரும் ‘‘குர்பானி' (பலி) கொடுத்தபோது, அவ்விருவரில் ஒருத்தருடைய (குர்பானி யான)து ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவருடையது ஏற்கப்படவில்லை. ஆதலால், ‘‘நிச்சயம் நான் உன்னைக் கொன்றுவிடுவேன்'' என்றார். உடனே (குர்பானி ஏற்றுக் கொள்ளப்பட்ட நல்லவர்) ‘‘அல்லாஹ் (குர்பானியை) ஏற்றுக் கொள்வதெல்லாம் இறையச்சமுள்ளவர்களிடமிருந்துதான்'' என்று பதில் கூறினார்.