60. (மனிதர்களே!) இரவில் (நீங்கள் நித்திரை செய்யும் பொழுது) அவன்தான் (உங்கள் உணர்ச்சியை நீக்கி) உங்களை இறந்தவர்களுக்குச் சமமாக்குகிறான். நீங்கள் பகலில் செய்பவற்றையும் அவன் நன்கறிகிறான். (உங்களுக்குக்) குறிப்பிட்ட காலம் பூர்த்தி ஆவதற்காக இதற்குப் பின்னர் (உணர்ச்சியை உண்டு பண்ணி) உங்களை எழுப்புகிறான். பின்னர், நீங்கள் அவனிடம்தான் திரும்பப்போவீர்கள். நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருந்தவற்றை (அங்கு) உங்களுக்கு அவன் அறிவிப்பான்.