78. பின்னர், உதயமான (பளிச்சென்று நன்கு ஒளிரும்) சூரியனைக் கண்டபொழுது ‘‘இது மிகப்பெரியதாயிருக்கிறது. இது என் இறைவன் (ஆகுமா?)'' எனக் கேட்டு, அதுவும் அஸ்தமித்து மறையவே, அவர் (தம் மக்களை நோக்கி), ‘‘என் மக்களே! நீங்கள் (இறைவனுக்கு) இணையாக்கும் (இவை) ஒவ்வொன்றிலிருந்தும் நிச்சயமாக நான் வெறுத்து விலகிக்கொண்டேன்'' என்று கூறிவிட்டு,