92. (நபியே!) இது நாம் உம் மீது இறக்கிய மிக்க பாக்கியமுடைய ஒரு வேதமாகும்.இது தனக்கு முன்னுள்ள (அவர்களுடைய வேதத்)தையும் உண்மைப் படுத்துகிறது. ஆகவே,நீர் (இதைக் கொண்டு தாய்நாட்டினராகிய) மக்காவாசிகளுக்கும், அதைச் சுற்றி உள்ளவர்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இவ்வேதத்தையும் (அவசியம்) நம்புவார்கள். அவர்கள் தவறாது தொழுதும் வருவார்கள்.