104. உங்கள் இறைவனிடமிருந்து (சத்தியத்திற்குரிய பல) ஆதாரங்கள் உங்களிடம் வந்திருக்கின்றன. எவன் (அவற்றைக் கவனித்து) பார்க்கிறானோ (அது) அவனுக்கே நன்று. எவன் (அவற்றைப் பார்க்காது) கண்ணை மூடிக்கொள்கிறானோ (அது) அவனுக்கே கேடாகும். (நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘நான் உங்களைக் காப்பவன் அல்ல'' (என்று கூறிவிடுவீராக).