108. (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (தெய்வம் என) அழைக்கிறார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள். அதனால், அவர்கள் அறியாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு வகுப்பினருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக்கி வைத்திருக்கிறோம். பின்னர், அவர்கள் தங்கள் இறைவனிடமே செல்வார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்த செயலைப்பற்றி (அவற்றில் நன்மை எவை, தீமை எவை என்பதை) அவன் அவர்களுக்கு அறிவித்துவிடுவான்.