121. (நம்பிக்கையாளர்களே! அறுக்கும்போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாத வற்றை நீங்கள் புசிக்காதீர்கள். நிச்சயமாக அது பெரும் பாவமாகும். (இதில்) உங்களுடன் தர்க்கிக்குமாறு நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களைத் தூண்டுகின்றனர். நீங்கள் அவர்களுக்கு கீழ்ப்படிந்தால் நிச்சயமாக நீங்கள் (அவர்களைப் போல்) இணைவைத்து வணங்குபவர்கள்தான்!