---
title: "ترجمة سورة العاديات - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/100/book/27819.md"
canonical: "https://quranpedia.net/surah/1/100/book/27819"
surah_id: "100"
book_id: "27819"
book_name: "الترجمة التاميلية - عمر شريف"
type: "translation"
---

# ترجمة سورة العاديات - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/100/book/27819)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة العاديات - الترجمة التاميلية - عمر شريف (التاميلية) — https://quranpedia.net/surah/1/100/book/27819*.

Translation of Surah العاديات from "الترجمة التاميلية - عمر شريف" in التاميلية.

### الآية 100:1

> وَالْعَادِيَاتِ ضَبْحًا [100:1]

திடுக்கத்தில் ஆழ்த்தக் கூடியது.

### الآية 100:2

> ﻿فَالْمُورِيَاتِ قَدْحًا [100:2]

இன்னும் தீப்பொறிகளை மூட்டுகின்ற குதிரைகள் மீது சத்தியமாக,

### الآية 100:3

> ﻿فَالْمُغِيرَاتِ صُبْحًا [100:3]

இன்னும் அதிகாலையில் (எதிரிகள் மீது) பாய்கின்ற குதிரைகள் மீது சத்தியமாக,

### الآية 100:4

> ﻿فَأَثَرْنَ بِهِ نَقْعًا [100:4]

இன்னும் அதி(காலையி)ல் புழுதியைக் கிளப்பின.

### الآية 100:5

> ﻿فَوَسَطْنَ بِهِ جَمْعًا [100:5]

இன்னும் அதி(காலையி)ல் (எதிரிகளின்) கூட்டத்திற்கு நடுவில் நுழைந்தன.

### الآية 100:6

> ﻿إِنَّ الْإِنْسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ [100:6]

நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவன் ஆவான்.

### الآية 100:7

> ﻿وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ [100:7]

நிச்சயமாக அவன் அதற்கு சாட்சி ஆவான்.

### الآية 100:8

> ﻿وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ [100:8]

நிச்சயமாக அவன் செல்வத்தை நேசிப்பதில் கடினமானவன் ஆவான்.

### الآية 100:9

> ﻿۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ [100:9]

புதைகுழிகளில் உள்ளவர்கள் எழுப்பப்படும்போது (தன் நிலைமை என்னவாகும் என்பதை மனிதன்) அறியவேண்டாமா?

### الآية 100:10

> ﻿وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ [100:10]

இன்னும், நெஞ்சங்களில் உள்ளவை பிரித்தறியப்படும்போது (தன் நிலைமை என்னவாகும் என்பதை மனிதன் அறியவேண்டாமா)?

### الآية 100:11

> ﻿إِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَئِذٍ لَخَبِيرٌ [100:11]

நிச்சயமாக அவர்களுடைய இறைவன் அந்நாளில் அவர்களை ஆழ்ந்தறிபவன் ஆவான்.

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/100.md)
- [كل تفاسير سورة العاديات
](https://quranpedia.net/surah-tafsir/100.md)
- [ترجمات سورة العاديات
](https://quranpedia.net/translations/100.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية - عمر شريف](https://quranpedia.net/book/27819.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/100/book/27819) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
