---
title: "ترجمة سورة القارعة - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/101/book/27819.md"
canonical: "https://quranpedia.net/surah/1/101/book/27819"
surah_id: "101"
book_id: "27819"
book_name: "الترجمة التاميلية - عمر شريف"
type: "translation"
---

# ترجمة سورة القارعة - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/101/book/27819)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة القارعة - الترجمة التاميلية - عمر شريف (التاميلية) — https://quranpedia.net/surah/1/101/book/27819*.

Translation of Surah القارعة from "الترجمة التاميلية - عمر شريف" in التاميلية.

### الآية 101:1

> الْقَارِعَةُ [101:1]

(செல்வம், சொத்து, பதவியில்) அதிகத்தைக் கொண்டு பெருமையடித்தல் (அவற்றை அடைவதில்) உங்களை ஈடுபடுத்தியது, (-அது உங்களை அல்லாஹ்வை மறக்கச் செய்தது,)

### الآية 101:2

> ﻿مَا الْقَارِعَةُ [101:2]

திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது என்ன?

### الآية 101:3

> ﻿وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ [101:3]

(நபியே!) இன்னும் திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

### الآية 101:4

> ﻿يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ [101:4]

(அந்)நாளில் மக்கள் பரப்பப்பட்ட ஈசல்களைப் போன்று ஆகுவார்கள்.

### الآية 101:5

> ﻿وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ [101:5]

இன்னும் அந்நாளில் மலைகள் சாயம் ஏற்றப்பட்ட முடியைப்போன்று ஆகும்.

### الآية 101:6

> ﻿فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ [101:6]

ஆக, யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் கனத்தனவோ,

### الآية 101:7

> ﻿فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ [101:7]

அவர் திருப்தியான (சொர்க்க) வாழ்க்கையில் இருப்பார்.

### الآية 101:8

> ﻿وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ [101:8]

யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் இலேசாகி விட்டனவோ,

### الآية 101:9

> ﻿فَأُمُّهُ هَاوِيَةٌ [101:9]

அவருடைய தங்குமிடம் "ஹாவியா' (எனும் நரகம்)தான்

### الآية 101:10

> ﻿وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ [101:10]

(நபியே!) அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

### الآية 101:11

> ﻿نَارٌ حَامِيَةٌ [101:11]

(அது) கடுமையாக எரியும் நெருப்பாகும்.

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/101.md)
- [كل تفاسير سورة القارعة
](https://quranpedia.net/surah-tafsir/101.md)
- [ترجمات سورة القارعة
](https://quranpedia.net/translations/101.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية - عمر شريف](https://quranpedia.net/book/27819.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/101/book/27819) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
