---
title: "ترجمة سورة التكاثر - الترجمة التاميلية (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/102/book/1991.md"
canonical: "https://quranpedia.net/surah/1/102/book/1991"
surah_id: "102"
book_id: "1991"
book_name: "الترجمة التاميلية"
author: "عبد الحميد الباقوي"
type: "translation"
---

# ترجمة سورة التكاثر - الترجمة التاميلية (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/102/book/1991)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة التكاثر - الترجمة التاميلية (التاميلية) — https://quranpedia.net/surah/1/102/book/1991*.

Translation of Surah التكاثر from "الترجمة التاميلية" in التاميلية.

### الآية 102:1

> أَلْهَاكُمُ التَّكَاثُرُ [102:1]

1, 2. நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கும் வரை (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கி விட்டது (திருப்பிவிட்டது).

### الآية 102:2

> ﻿حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ [102:2]

1, 2. நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கும் வரை (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கி விட்டது (திருப்பிவிட்டது).

### الآية 102:3

> ﻿كَلَّا سَوْفَ تَعْلَمُونَ [102:3]

3\. நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவை என்ன என்பதை) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.

### الآية 102:4

> ﻿ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ [102:4]

4\. பின்னர், நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவற்றின் பலன்களையும்) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.

### الآية 102:5

> ﻿كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ [102:5]

5\. நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அதன் பலனைச்) சந்தேகமற உறுதியாக நீங்கள் அறிவீர்களாயின்,

### الآية 102:6

> ﻿لَتَرَوُنَّ الْجَحِيمَ [102:6]

6\. நிச்சயமாக நரகத்தையே நீங்கள் (உங்கள் கண்முன்) காண்பீர்கள்.

### الآية 102:7

> ﻿ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ [102:7]

7\. பிறகு, சந்தேகமற மெய்யாகவே அதை நீங்கள் உங்கள் கண்களால் கண்டுகொள்வீர்கள்.

### الآية 102:8

> ﻿ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ [102:8]

8\. (உங்களுக்கு இறைவன் புரிந்த) அருளை (நீங்கள் எவ்வழியில் செலவு செய்தீர்கள் என்பதை)ப் பற்றியும், பின்னர் அந்நாளில் நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/102.md)
- [كل تفاسير سورة التكاثر
](https://quranpedia.net/surah-tafsir/102.md)
- [ترجمات سورة التكاثر
](https://quranpedia.net/translations/102.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية](https://quranpedia.net/book/1991.md)
- [المؤلف: عبد الحميد الباقوي](https://quranpedia.net/person/1766.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/102/book/1991) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
