---
title: "ترجمة سورة الحجر - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/15/book/27819.md"
canonical: "https://quranpedia.net/surah/1/15/book/27819"
surah_id: "15"
book_id: "27819"
book_name: "الترجمة التاميلية - عمر شريف"
type: "translation"
---

# ترجمة سورة الحجر - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/15/book/27819)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة الحجر - الترجمة التاميلية - عمر شريف (التاميلية) — https://quranpedia.net/surah/1/15/book/27819*.

Translation of Surah الحجر from "الترجمة التاميلية - عمر شريف" in التاميلية.

### الآية 15:1

> الر ۚ تِلْكَ آيَاتُ الْكِتَابِ وَقُرْآنٍ مُبِينٍ [15:1]

அலிஃப் லாம் றா. (நபியே!) இவை, (முந்திய) வேதங்கள் இன்னும் தெளிவான (இந்த) குர்ஆனின் வசனங்களாகும்.

### الآية 15:2

> ﻿رُبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ [15:2]

நிராகரித்தவர்கள், தாங்கள் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே! என்று (மறுமையில்) பெரிதும் விரும்புவார்கள்.

### الآية 15:3

> ﻿ذَرْهُمْ يَأْكُلُوا وَيَتَمَتَّعُوا وَيُلْهِهِمُ الْأَمَلُ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ [15:3]

(நபியே!) அவர்களை விடுவீராக! அவர்கள் புசிக்கட்டும், இன்னும் அவர்கள் சுகம் அனுபவிக்கட்டும். அவர்களுடைய ஆசை அவர்களை மறக்கடிக்கட்டும். பின்னர் (அவர்கள் தங்களது கெட்ட முடிவை) அறிவார்கள்.

### الآية 15:4

> ﻿وَمَا أَهْلَكْنَا مِنْ قَرْيَةٍ إِلَّا وَلَهَا كِتَابٌ مَعْلُومٌ [15:4]

எவ்வூரையும் அதற்கு குறிப்பிட்ட தவணை இருந்தே தவிர நாம் (உடனே) அழிக்கவில்லை.

### الآية 15:5

> ﻿مَا تَسْبِقُ مِنْ أُمَّةٍ أَجَلَهَا وَمَا يَسْتَأْخِرُونَ [15:5]

எந்த சமுதாயமும் தங்கள் தவணையை முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்.

### الآية 15:6

> ﻿وَقَالُوا يَا أَيُّهَا الَّذِي نُزِّلَ عَلَيْهِ الذِّكْرُ إِنَّكَ لَمَجْنُونٌ [15:6]

(உம்மை நோக்கி) “ஓ அறிவுரை இறக்கப்பட்டவரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான்”என்று கூறுகின்றனர்.

### الآية 15:7

> ﻿لَوْ مَا تَأْتِينَا بِالْمَلَائِكَةِ إِنْ كُنْتَ مِنَ الصَّادِقِينَ [15:7]

“நீர் உண்மையாளர்களில் இருந்தால் நம்மிடம் வானவர்களை நீர் கொண்டு வரலாமே?” (என்று கேட்கின்றனர்)

### الآية 15:8

> ﻿مَا نُنَزِّلُ الْمَلَائِكَةَ إِلَّا بِالْحَقِّ وَمَا كَانُوا إِذًا مُنْظَرِينَ [15:8]

சத்தியத்தைக் கொண்டே தவிர வானவர்களை நாம் இறக்க மாட்டோம். (அப்படி இறக்கினால்) அப்போது அவர்கள் அவகாசமளிக்கப்படுபவர்களாக இருக்கமாட்டார்கள்.

### الآية 15:9

> ﻿إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ [15:9]

நிச்சயமாக நாம்தான் அறிவுரையை (உம்மீது) இறக்கினோம். இன்னும் நிச்சயமாக நாம் அதை பாதுகாப்பவர்கள் ஆவோம்.

### الآية 15:10

> ﻿وَلَقَدْ أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِي شِيَعِ الْأَوَّلِينَ [15:10]

(நபியே!) உமக்கு முன்னர் முன்னோர்களின் (பல) பிரிவுகளில் திட்ட வட்டமாக (பல தூதர்களை) அனுப்பினோம்.

### الآية 15:11

> ﻿وَمَا يَأْتِيهِمْ مِنْ رَسُولٍ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ [15:11]

அவர்களிடம் எந்த ஒரு (இறைத்) தூதரும் வருவதில்லை அவரை அவர்கள் பரிகசிப்பவர்களாக இருந்தே தவிர.

### الآية 15:12

> ﻿كَذَٰلِكَ نَسْلُكُهُ فِي قُلُوبِ الْمُجْرِمِينَ [15:12]

(முன்னோர் செய்த) அவ்வாறே அ(ந்த நிராகரிப்பு தனத்)தை (இக்)குற்றவாளிகளின் உள்ளங்களிலும் புகுத்துகிறோம்.

### الآية 15:13

> ﻿لَا يُؤْمِنُونَ بِهِ ۖ وَقَدْ خَلَتْ سُنَّةُ الْأَوَّلِينَ [15:13]

(ஆகவே,) அவர்கள் இவரை நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். முன்னோரின் வழிமுறை சென்றுவிட்டது. (அவர்களைப் போலவே இவர்களும் அழிவர்.)

### الآية 15:14

> ﻿وَلَوْ فَتَحْنَا عَلَيْهِمْ بَابًا مِنَ السَّمَاءِ فَظَلُّوا فِيهِ يَعْرُجُونَ [15:14]

அவர்கள் மீது வானத்திலிருந்து ஒரு வாசலை நாம் திறந்து, அதில் பகலில் அவர்கள் ஏறுபவர்களாக ஆகினாலும்...

### الآية 15:15

> ﻿لَقَالُوا إِنَّمَا سُكِّرَتْ أَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَسْحُورُونَ [15:15]

அவர்கள் (நம்பிக்கை கொள்ளாமல்), “எங்கள் கண்கள் நிச்சயம் மயக்கப்பட்டு விட்டன; இல்லை, நாங்கள் சூனியம் செய்யப்பட்ட மக்கள்”என்றே கூறுவர்.

### الآية 15:16

> ﻿وَلَقَدْ جَعَلْنَا فِي السَّمَاءِ بُرُوجًا وَزَيَّنَّاهَا لِلنَّاظِرِينَ [15:16]

திட்டவட்டமாக வானத்தில் பெரிய நட்சத்திரங்களை அமைத்து, பார்ப்பவர்களுக்கு அவற்றை அலங்காரமாக்கினோம்.

### الآية 15:17

> ﻿وَحَفِظْنَاهَا مِنْ كُلِّ شَيْطَانٍ رَجِيمٍ [15:17]

விரட்டப்பட்ட எல்லா ஷைத்தான்களை விட்டு அதைப் பாதுகாத்தோம்.

### الآية 15:18

> ﻿إِلَّا مَنِ اسْتَرَقَ السَّمْعَ فَأَتْبَعَهُ شِهَابٌ مُبِينٌ [15:18]

எனினும், எவன் ஒட்டுக் கேட்பானோ, அவனை தெளிவானதோர் எரி நட்சத்திரம் பின் தொடரும்.

### الآية 15:19

> ﻿وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنْبَتْنَا فِيهَا مِنْ كُلِّ شَيْءٍ مَوْزُونٍ [15:19]

பூமியை நாம் விரித்தோம்; அதில் அசையாத மலைகளை நிறுவினோம்; அதில் (நிறுவையில்) நிறுக்கப்படும் எல்லாவற்றையும் முளைக்க வைத்தோம்.

### الآية 15:20

> ﻿وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ وَمَنْ لَسْتُمْ لَهُ بِرَازِقِينَ [15:20]

அதில் உங்களுக்கும், நீங்கள் உணவளிப்பவர்களாக இல்லாதவர்களுக்கும் (நாம்தான்) வாழ்வாதாரங்களை அமைத்தோம்.

### الآية 15:21

> ﻿وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا عِنْدَنَا خَزَائِنُهُ وَمَا نُنَزِّلُهُ إِلَّا بِقَدَرٍ مَعْلُومٍ [15:21]

எப்பொருளும் இல்லை அதன் பொக்கிஷங்கள் நம்மிடம் இருந்தே தவிர. குறிப்பிடப்பட்டதோர் அளவிலே தவிர அதை இறக்க மாட்டோம்.

### الآية 15:22

> ﻿وَأَرْسَلْنَا الرِّيَاحَ لَوَاقِحَ فَأَنْزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً فَأَسْقَيْنَاكُمُوهُ وَمَا أَنْتُمْ لَهُ بِخَازِنِينَ [15:22]

(மேகத்தை) கருக்கொள்ள வைக்கக்கூடிய காற்றுகளை அனுப்புகிறோம். அம்மேகத்திலிருந்து மழை நீரை இறக்கி, அதை உங்களுக்குப் புகட்டுகிறோம். அதை நீங்கள் சேகரிப்பவர்களாக இல்லை.

### الآية 15:23

> ﻿وَإِنَّا لَنَحْنُ نُحْيِي وَنُمِيتُ وَنَحْنُ الْوَارِثُونَ [15:23]

நிச்சயமாக நாம்தான் உயிர் கொடுக்கிறோம்; இன்னும் மரணிக்க வைக்கிறோம். நாமே (அனைத்திற்கும்) அனந்தரக்காரர்கள்!

### الآية 15:24

> ﻿وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِينَ مِنْكُمْ وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَأْخِرِينَ [15:24]

திட்டவட்டமாக உங்களில் முன் சென்றவர்களையும் அறிந்தோம்; (உங்களில்) பின் வருபவர்களையும் அறிந்தோம்.

### الآية 15:25

> ﻿وَإِنَّ رَبَّكَ هُوَ يَحْشُرُهُمْ ۚ إِنَّهُ حَكِيمٌ عَلِيمٌ [15:25]

(நபியே!) நிச்சயமாக உம் இறைவன்தான் இவர்களை (எல்லாம் மறுமையில்) ஒன்று திரட்டுவான். நிச்சயமாக அவன் மகா ஞானவான், நன்கறிந்தவன்.

### الآية 15:26

> ﻿وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ [15:26]

திட்டவட்டமாக பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து, (பின்னர் அது காய்ந்தால்) ‘கன் கன்’என்று சப்தம் வரக்கூடிய (அத்தகைய) களிமண்ணிலிருந்து மனிதனைப் படைத்தோம்.

### الآية 15:27

> ﻿وَالْجَانَّ خَلَقْنَاهُ مِنْ قَبْلُ مِنْ نَارِ السَّمُومِ [15:27]

(மனிதனைப் படைப்பதற்கு) முன்பே ஜின்களைக் கொடிய உஷ்ணமுள்ள நெருப்பிலிருந்து படைத்தோம்.

### الآية 15:28

> ﻿وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ [15:28]

“நிச்சயமாக நான், பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து, (பின்னர் அது காய்ந்தால்) ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடிய (அத்தகைய) களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்கப்போகிறேன்”என்று உம் இறைவன் வானவர்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூருவீராக!

### الآية 15:29

> ﻿فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ [15:29]

“நான் அவரை செம்மை செய்து, அவரி(ன் உடலி)ல் என் உயிரிலிருந்து ஊதினால் அவருக்கு (முன்) சிரம் பணிந்தவர்களாக விழுங்கள்”(என்று கட்டளையிட்டான்).

### الآية 15:30

> ﻿فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ [15:30]

(அவ்வாறே) வானவர்கள் எல்லோரும், அனைவரும் சிரம் பணிந்தார்கள்;

### الآية 15:31

> ﻿إِلَّا إِبْلِيسَ أَبَىٰ أَنْ يَكُونَ مَعَ السَّاجِدِينَ [15:31]

இப்லீஸைத் தவிர; (அவன்) சிரம் பணிந்தவர்களுடன் ஆகுவதற்கு மறுத்து விட்டான்.

### الآية 15:32

> ﻿قَالَ يَا إِبْلِيسُ مَا لَكَ أَلَّا تَكُونَ مَعَ السَّاجِدِينَ [15:32]

“இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடன் நீ(யும் சிரம் பணிந்தவனாக) ஆகாதிருக்க உனக்கென்ன நேர்ந்தது?” என்று (அல்லாஹ்) கூறினான்.

### الآية 15:33

> ﻿قَالَ لَمْ أَكُنْ لِأَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهُ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ [15:33]

“பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து, (பின்னர் அது காய்ந்தால்) ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடிய (அத்தகைய) களிமண்ணிலிருந்து நீ படைத்த ஒரு மனிதனுக்கு (நெருப்பிலிருந்து படைக்கப்பட்ட) நான் சிரம் பணிபவனாக இல்லை (அது என்னால் முடியாது)” என்று (இப்லீஸ்) கூறினான்.

### الآية 15:34

> ﻿قَالَ فَاخْرُجْ مِنْهَا فَإِنَّكَ رَجِيمٌ [15:34]

“இதிலிருந்து வெளியேறு. நிச்சயமாக நீ விரட்டப்பட்டவன்”

### الآية 15:35

> ﻿وَإِنَّ عَلَيْكَ اللَّعْنَةَ إِلَىٰ يَوْمِ الدِّينِ [15:35]

இன்னும் “நிச்சயமாக உன் மீது சாபம் கூலி (கொடுக்கப்படும்) நாள் வரை உண்டாகுக!” என்று (அல்லாஹ்) கூறினான்.

### الآية 15:36

> ﻿قَالَ رَبِّ فَأَنْظِرْنِي إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ [15:36]

“என் இறைவா! (இறந்தவர்கள்) எழுப்பப்படும் நாள் (வரும்) வரை எனக்கு அவகாசமளி”என்று (இப்லீஸ்) கூறினான்.

### الآية 15:37

> ﻿قَالَ فَإِنَّكَ مِنَ الْمُنْظَرِينَ [15:37]

(அல்லாஹ்) கூறினான்: “நிச்சயமாக நீ அவகாசமளிக்கப்பட்டவர்களில் உள்ளவன்,

### الآية 15:38

> ﻿إِلَىٰ يَوْمِ الْوَقْتِ الْمَعْلُومِ [15:38]

(நிச்சயமாக நீ தீர்ப்புக்காக) குறிப்பிடப்பட்ட நேரத்தின் நாள் (வருகின்ற) வரை."

### الآية 15:39

> ﻿قَالَ رَبِّ بِمَا أَغْوَيْتَنِي لَأُزَيِّنَنَّ لَهُمْ فِي الْأَرْضِ وَلَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ [15:39]

“என் இறைவா! என்னை நீ வழிகெடுத்ததன் காரணமாக பூமியில் நிச்சயமாக (அசிங்கமான செயல்களை) அவர்களுக்கு அலங்கரிப்பேன்; இன்னும் நிச்சயமாக அவர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன்”என்று (இப்லீஸ்) கூறினான்.

### الآية 15:40

> ﻿إِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ [15:40]

அவர்களில் (மனத்தூய்மைப் பெற்ற) பரிசுத்தமான உன் அடியார்களைத் தவிர”(அவர்களை நான் வழிகெடுக்க முடியாது.)

### الآية 15:41

> ﻿قَالَ هَٰذَا صِرَاطٌ عَلَيَّ مُسْتَقِيمٌ [15:41]

“இது என் பக்கம் (சேர்ப்பிக்கும்) நேரான வழியாகும்”என்று (இறைவன்) கூறினான்.

### الآية 15:42

> ﻿إِنَّ عِبَادِي لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَانٌ إِلَّا مَنِ اتَّبَعَكَ مِنَ الْغَاوِينَ [15:42]

நிச்சயமாக என் அடியார்கள், உனக்கு அவர்கள் மீது அதிகாரம் இல்லை. உன்னைப் பின்பற்றுகின்ற வழிகெட்டவர்களைத் தவிர. (அவர்களைத்தான் உன்னால் வழிகெடுக்க முடியும்.)

### الآية 15:43

> ﻿وَإِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ [15:43]

நிச்சயமாக நரகம் அவர்கள் அனைவரின் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.

### الآية 15:44

> ﻿لَهَا سَبْعَةُ أَبْوَابٍ لِكُلِّ بَابٍ مِنْهُمْ جُزْءٌ مَقْسُومٌ [15:44]

அதற்கு ஏழு வாசல்கள் உண்டு. ஒவ்வொரு வாசலுக்கும் அவர்களில் (தனியாக) பிரிக்கப்பட்ட (ஒதுக்கப்பட்ட) ஒரு பிரிவினர் உண்டு.

### الآية 15:45

> ﻿إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ [15:45]

நிச்சயமாக, அல்லாஹ்வை அஞ்சியவர்கள் சொர்க்கங்களிலும் (அவற்றில் உள்ள) நீரருவிகளிலும் இருப்பார்கள்.

### الآية 15:46

> ﻿ادْخُلُوهَا بِسَلَامٍ آمِنِينَ [15:46]

“நீங்கள் சலாம் (என்ற முகமன்) உடன் அச்சமற்றவர்களாக அதில் நுழையுங்கள்”(என்று கூறப்படும்).

### الآية 15:47

> ﻿وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِمْ مِنْ غِلٍّ إِخْوَانًا عَلَىٰ سُرُرٍ مُتَقَابِلِينَ [15:47]

அவர்களுடைய நெஞ்சங்களில் இருந்த குரோதத்தை நாம் நீக்கிவிடுவோம். (அவர்கள் அங்கு) சகோதரர்களாக, ஒருவர் ஒருவரை முகம் நோக்கியவர்களாக கட்டில்கள் மீது (சாய்ந்து) இருப்பார்கள்.

### الآية 15:48

> ﻿لَا يَمَسُّهُمْ فِيهَا نَصَبٌ وَمَا هُمْ مِنْهَا بِمُخْرَجِينَ [15:48]

அவர்களுக்கு அதில் சிரமம் ஏற்படாது. அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களாக இல்லை.

### الآية 15:49

> ﻿۞ نَبِّئْ عِبَادِي أَنِّي أَنَا الْغَفُورُ الرَّحِيمُ [15:49]

(நபியே!) என் அடியார்களுக்கு அறிவிப்பீராக! “நிச்சயமாக நான்தான் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.

### الآية 15:50

> ﻿وَأَنَّ عَذَابِي هُوَ الْعَذَابُ الْأَلِيمُ [15:50]

“இன்னும் நிச்சயமாக என் வேதனைதான் துன்புறுத்தக்கூடிய வேதனை!”

### الآية 15:51

> ﻿وَنَبِّئْهُمْ عَنْ ضَيْفِ إِبْرَاهِيمَ [15:51]

(நபியே!) இப்றாஹீமுடைய விருந்தாளிகள் பற்றி அவர்களுக்கு அறிவிப்பீராக.

### الآية 15:52

> ﻿إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلَامًا قَالَ إِنَّا مِنْكُمْ وَجِلُونَ [15:52]

அவர்கள் அவரிடம் நுழைந்த சமயத்தை நினைவு கூருங்கள். “ஸலாம்” (ஈடேற்றம் உண்டாகுக!) என்று (முகமன்) கூறினர். அவர் ‘‘நிச்சயமாக நாங்கள் உங்களைப் பற்றி பயமுள்ளவர்கள்”என்று கூறினார்.

### الآية 15:53

> ﻿قَالُوا لَا تَوْجَلْ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَامٍ عَلِيمٍ [15:53]

“பயப்படாதீர். நிச்சயமாக நாம் உமக்கு அறிஞரான ஒரு மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகிறோம்”என்று கூறினார்கள்.

### الآية 15:54

> ﻿قَالَ أَبَشَّرْتُمُونِي عَلَىٰ أَنْ مَسَّنِيَ الْكِبَرُ فَبِمَ تُبَشِّرُونَ [15:54]

“எனக்கு முதுமை ஏற்பட்டிருக்க எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? எதைக் கொண்டு நற்செய்தி கூறுகிறீர்கள்?” என்று கூறினார்.

### الآية 15:55

> ﻿قَالُوا بَشَّرْنَاكَ بِالْحَقِّ فَلَا تَكُنْ مِنَ الْقَانِطِينَ [15:55]

நாங்கள் உமக்கு உண்மை(யான செய்தி)யைக் கொண்டு(தான்) நற்செய்தி கூறினோம். ஆகவே, அவநம்பிக்கையாளர்களில் ஆகிவிடாதீர்”என்று கூறினார்கள்.

### الآية 15:56

> ﻿قَالَ وَمَنْ يَقْنَطُ مِنْ رَحْمَةِ رَبِّهِ إِلَّا الضَّالُّونَ [15:56]

“வழிகெட்டவர்களைத் தவிர தன் இறைவனின் அருளிலிருந்து யார் அவநம்பிக்கை கொள்வார்?” என்று (இப்றாஹீம்) கூறினார்.

### الآية 15:57

> ﻿قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا الْمُرْسَلُونَ [15:57]

“(வானவத்) தூதர்களே! உங்கள் காரியமென்ன?” என்று கூறினார்.

### الآية 15:58

> ﻿قَالُوا إِنَّا أُرْسِلْنَا إِلَىٰ قَوْمٍ مُجْرِمِينَ [15:58]

“குற்றம் புரிகின்ற மக்களின் பக்கம் நிச்சயமாக நாங்கள் அனுப்பப்பட்டோம்”என்று கூறினார்கள்.

### الآية 15:59

> ﻿إِلَّا آلَ لُوطٍ إِنَّا لَمُنَجُّوهُمْ أَجْمَعِينَ [15:59]

“(எனினும்,) லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர. (மற்றவர்களை அழிப்போம்.) நிச்சயமாக நாங்கள் அவர்கள் அனைவரையும் பாதுகாப்பவர்கள்தான்.

### الآية 15:60

> ﻿إِلَّا امْرَأَتَهُ قَدَّرْنَا ۙ إِنَّهَا لَمِنَ الْغَابِرِينَ [15:60]

(எனினும்,) அவருடைய மனைவியைத் தவிர. நிச்சயமாக அவள் (அந்தப் பாவிகளுடன் தண்டனையில்) தங்கிவிடுபவர்களில் உள்ளவள்தான் என்று முடிவு செய்தோம்”(என்று இறைவன் கூறியதாகக் கூறினார்கள்).

### الآية 15:61

> ﻿فَلَمَّا جَاءَ آلَ لُوطٍ الْمُرْسَلُونَ [15:61]

(வானவத்) தூதர்கள் லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்தபோது,

### الآية 15:62

> ﻿قَالَ إِنَّكُمْ قَوْمٌ مُنْكَرُونَ [15:62]

“நிச்சயமாக நீங்கள் அறியப்படாத கூட்டமாகும்!” என்று அவர் கூறினார்.

### الآية 15:63

> ﻿قَالُوا بَلْ جِئْنَاكَ بِمَا كَانُوا فِيهِ يَمْتَرُونَ [15:63]

“மாறாக! (உம் மக்களாகிய) இவர்கள் சந்தேகித்துக் கொண்டிருந்ததை உம்மிடம் கொண்டு வந்துள்ளோம்”என்று கூறினர்.

### الآية 15:64

> ﻿وَأَتَيْنَاكَ بِالْحَقِّ وَإِنَّا لَصَادِقُونَ [15:64]

உம்மிடம் உண்மையைக் கொண்டு வந்துள்ளோம். நிச்சயமாக நாம் உண்மையாளர்கள்தான்.

### الآية 15:65

> ﻿فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍ مِنَ اللَّيْلِ وَاتَّبِعْ أَدْبَارَهُمْ وَلَا يَلْتَفِتْ مِنْكُمْ أَحَدٌ وَامْضُوا حَيْثُ تُؤْمَرُونَ [15:65]

ஆகவே, (இன்றைய) இரவின் ஒரு பகுதியில் உம் குடும்பத்தினருடன் செல்வீராக; மேலும் அவர்களுக்குப் பின்னால் (அவர்களை) பின்பற்றுவீராக; உங்களில் ஒருவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம்; இன்னும் நீங்கள் ஏவப்பட்ட இடத்திற்கு (இதே நிலையில்) செல்லுங்கள்.”

### الآية 15:66

> ﻿وَقَضَيْنَا إِلَيْهِ ذَٰلِكَ الْأَمْرَ أَنَّ دَابِرَ هَٰؤُلَاءِ مَقْطُوعٌ مُصْبِحِينَ [15:66]

நிச்சயமாக இவர்களின் வேர், (இவர்கள் பொழுது) விடிந்தவர்களாக இருக்கும்போது துண்டிக்கப்படும் என்று அக்காரியத்தை அவருக்கு முடிவு செய்தோம்.

### الآية 15:67

> ﻿وَجَاءَ أَهْلُ الْمَدِينَةِ يَسْتَبْشِرُونَ [15:67]

அந்நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்தவர்களாக வந்தார்கள்.

### الآية 15:68

> ﻿قَالَ إِنَّ هَٰؤُلَاءِ ضَيْفِي فَلَا تَفْضَحُونِ [15:68]

“நிச்சயமாக இவர்கள் என் விருந்தினர். ஆகவே, என்னை அவமானப்படுத்தாதீர்கள்.”

### الآية 15:69

> ﻿وَاتَّقُوا اللَّهَ وَلَا تُخْزُونِ [15:69]

“அல்லாஹ்வை அஞ்சுங்கள்; என்னை இழிவு படுத்தாதீர்கள்”

### الآية 15:70

> ﻿قَالُوا أَوَلَمْ نَنْهَكَ عَنِ الْعَالَمِينَ [15:70]

“உலக மக்களை (விருந்தளிக்க அழைப்பதை) விட்டு நாம் உம்மைத் தடுக்கவில்லையா?” என்று கூறினர்.

### الآية 15:71

> ﻿قَالَ هَٰؤُلَاءِ بَنَاتِي إِنْ كُنْتُمْ فَاعِلِينَ [15:71]

“(இதோ!) இவர்கள் என் பெண் மக்கள். நீங்கள் (நான் ஏவுவதை) செய்பவர்களாக இருந்தால் (இவர்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்)” என்று கூறினார்.

### الآية 15:72

> ﻿لَعَمْرُكَ إِنَّهُمْ لَفِي سَكْرَتِهِمْ يَعْمَهُونَ [15:72]

(நபியே!) உம் வாழ்வின் சத்தியம்! நிச்சயமாக இவர்கள்(-சிலைவணங்கிகள்) தங்கள் மயக்கத்தில் (வழிகேட்டில் கடுமையாக) தடுமாறுகின்றனர்.

### الآية 15:73

> ﻿فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِينَ [15:73]

ஆகவே, (அவர்கள் காலையில் சூரிய) வெளிச்சமடைந்தவர்களாக இருக்கும்போது அவர்களை இடிமுழக்கம் பிடித்தது.

### الآية 15:74

> ﻿فَجَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِنْ سِجِّيلٍ [15:74]

அவர்கள் மீது களிமண்ணின் கல்லை (மழையாக)ப் பொழிந்தோம்; அதன் மேல் புறத்தை அதன் கீழ்புறமாக (தலைகீழாக) ஆக்கினோம்.

### الآية 15:75

> ﻿إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِلْمُتَوَسِّمِينَ [15:75]

நிச்சயமாக இதில் நுண்ணறிவாளர்களுக்கு அத்தாட்சிகள் (பல) இருக்கின்றன.

### الآية 15:76

> ﻿وَإِنَّهَا لَبِسَبِيلٍ مُقِيمٍ [15:76]

நிச்சயமாக அது (அவர்கள் சென்று வருகின்ற) நிலையான, (தெளிவான) பாதையில்தான் (அழியாமல் இன்றும்) இருக்கிறது.

### الآية 15:77

> ﻿إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِلْمُؤْمِنِينَ [15:77]

நிச்சயமாக அதில் நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.

### الآية 15:78

> ﻿وَإِنْ كَانَ أَصْحَابُ الْأَيْكَةِ لَظَالِمِينَ [15:78]

நிச்சயமாக (ஷுஐபுடைய மக்களாகிய) தோப்புடையவர்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தார்கள்.

### الآية 15:79

> ﻿فَانْتَقَمْنَا مِنْهُمْ وَإِنَّهُمَا لَبِإِمَامٍ مُبِينٍ [15:79]

ஆகவே, அவர்களை பழி வாங்கினோம். அவ்விரண்டு (ஊர்களு)ம் தெளிவான வழியில்தான் உள்ளன.

### الآية 15:80

> ﻿وَلَقَدْ كَذَّبَ أَصْحَابُ الْحِجْرِ الْمُرْسَلِينَ [15:80]

‘ஹிஜ்ர்’வாசிகள் தூதர்களைத் திட்டவட்டமாக பொய்ப்பித்தார்கள்.

### الآية 15:81

> ﻿وَآتَيْنَاهُمْ آيَاتِنَا فَكَانُوا عَنْهَا مُعْرِضِينَ [15:81]

அவர்களுக்கு நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம். அவற்றைப் புறக்கணித்தவர்களாக (அவர்கள்) இருந்தனர்.

### الآية 15:82

> ﻿وَكَانُوا يَنْحِتُونَ مِنَ الْجِبَالِ بُيُوتًا آمِنِينَ [15:82]

அச்சமற்றவர்களாக, மலைகளில் வீடுகளைக் குடைந்து (வாழ்ந்து) கொண்டிருந்தனர்.

### الآية 15:83

> ﻿فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُصْبِحِينَ [15:83]

(அவர்கள்) பொழுது விடிந்தவர்களாக இருக்க அவர்களை சப்தம் பிடித்தது.

### الآية 15:84

> ﻿فَمَا أَغْنَىٰ عَنْهُمْ مَا كَانُوا يَكْسِبُونَ [15:84]

அவர்கள் (தங்களை பாதுகாக்க) செய்து கொண்டிருந்தவை (எதுவும்) அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையை) தடுக்கவில்லை.

### الآية 15:85

> ﻿وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا إِلَّا بِالْحَقِّ ۗ وَإِنَّ السَّاعَةَ لَآتِيَةٌ ۖ فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِيلَ [15:85]

வானங்களையும் பூமியையும், அவை இரண்டிற்கு மத்திலுள்ளவற்றையும் உண்மையான நோக்கத்திற்கே தவிர நாம் படைக்கவில்லை. நிச்சயம் (குறிப்பிட்ட) மறுமை வரக்கூடியதே! ஆகவே, அழகிய புறக்கணிப்பாக (அவர்களை) புறக்கணிப்பீராக.

### الآية 15:86

> ﻿إِنَّ رَبَّكَ هُوَ الْخَلَّاقُ الْعَلِيمُ [15:86]

நிச்சயமாக உம் இறைவன்தான் மகா படைப்பாளன், நன்கறிந்தவன்.

### الآية 15:87

> ﻿وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ [15:87]

(நபியே!) மீண்டும் மீண்டும் ஓதப்படும் வசனங்களில் ஏழு வசனங்களையும், மகத்துவமிக்க குர்ஆனையும் திட்டவட்டமாக உமக்குக் கொடுத்தோம்.

### الآية 15:88

> ﻿لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَىٰ مَا مَتَّعْنَا بِهِ أَزْوَاجًا مِنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَاخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِينَ [15:88]

இவர்களில் சில வகையினர்களுக்கு (இவ்வுலகில்) நாம் எதைக் கொண்டு சுகமளித்தோமோ அதன் பக்கம் உம் இரு கண்களையும் கண்டிப்பாக நீட்டாதீர் (அவற்றை ஆசைப்படாதீர்); அவர்கள் மீது கவலைப்படாதீர். நம்பிக்கையாளர்களுக்கு உம் புஜத்தை தாழ்த்துவீராக! (மென்மையாக பணிவுடன் இருப்பீராக!).

### الآية 15:89

> ﻿وَقُلْ إِنِّي أَنَا النَّذِيرُ الْمُبِينُ [15:89]

“நிச்சயமாக நான்தான் தெளிவான எச்சரிப்பாளன்”என்று கூறுவீராக.

### الآية 15:90

> ﻿كَمَا أَنْزَلْنَا عَلَى الْمُقْتَسِمِينَ [15:90]

(வேதத்தை) பிரித்தவர்கள் மீது நாம் (வேதனையை) இறக்கியது போன்றே... (இந்நிராகரிப்பாளர்கள் மீது வேதனையை இறக்கி வைப்போம்.)

### الآية 15:91

> ﻿الَّذِينَ جَعَلُوا الْقُرْآنَ عِضِينَ [15:91]

அவர்கள் குர்ஆனைப் பல வகைகளாக ஆக்கினார்கள்.

### الآية 15:92

> ﻿فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ [15:92]

(ஆகவே) உம் இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக அவர்கள் அனைவரையும் விசாரிப்போம்,

### الآية 15:93

> ﻿عَمَّا كَانُوا يَعْمَلُونَ [15:93]

அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி.

### الآية 15:94

> ﻿فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَأَعْرِضْ عَنِ الْمُشْرِكِينَ [15:94]

ஆகவே, எதை நீர் ஏவப்படுகிறீரோ அதை தெளிவுடன் பகிரங்கப்படுத்துவீராக. மேலும், இணைவைப்பவர்களைப் புறக்கணிப்பீராக.

### الآية 15:95

> ﻿إِنَّا كَفَيْنَاكَ الْمُسْتَهْزِئِينَ [15:95]

பரிகசிப்பவர்களிடமிருந்து நிச்சயமாக நாம் உம்மைப் பாதுகாப்போம்.

### الآية 15:96

> ﻿الَّذِينَ يَجْعَلُونَ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ ۚ فَسَوْفَ يَعْلَمُونَ [15:96]

இவர்கள் அல்லாஹ்வுடன் வணங்கப்படும் மற்றொரு தெய்வத்தை ஆக்குகிறார்கள். (தங்கள் முடிவை) விரைவில் அறிவார்கள்.

### الآية 15:97

> ﻿وَلَقَدْ نَعْلَمُ أَنَّكَ يَضِيقُ صَدْرُكَ بِمَا يَقُولُونَ [15:97]

(நபியே!) நிச்சயமாக நீர் (உம்மைப் பற்றி) அவர்கள் (தரக் குறைவாக) கூறுவதால் உம் நெஞ்சம் நெருக்கடிக்குள்ளாகிறது என்பதை திட்டவட்டமாக அறிவோம்.

### الآية 15:98

> ﻿فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِنَ السَّاجِدِينَ [15:98]

ஆகவே, உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! (அவனுக்குச்) சிரம் பணிபவர்களில் ஆகிவிடுவீராக;

### الآية 15:99

> ﻿وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ [15:99]

உங்களுக்கு ‘யகீன்’(நம்பிக்கை எனும் மரணம்) வரும் வரை உம் இறைவனை வணங்குவீராக!

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/15.md)
- [كل تفاسير سورة الحجر
](https://quranpedia.net/surah-tafsir/15.md)
- [ترجمات سورة الحجر
](https://quranpedia.net/translations/15.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية - عمر شريف](https://quranpedia.net/book/27819.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/15/book/27819) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
