---
title: "ترجمة سورة الدّخان - الترجمة التاميلية (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/44/book/1991.md"
canonical: "https://quranpedia.net/surah/1/44/book/1991"
surah_id: "44"
book_id: "1991"
book_name: "الترجمة التاميلية"
author: "عبد الحميد الباقوي"
type: "translation"
---

# ترجمة سورة الدّخان - الترجمة التاميلية (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/44/book/1991)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة الدّخان - الترجمة التاميلية (التاميلية) — https://quranpedia.net/surah/1/44/book/1991*.

Translation of Surah الدّخان from "الترجمة التاميلية" in التاميلية.

### الآية 44:1

> حم [44:1]

1, 2. ஹா மீம். தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!

### الآية 44:2

> ﻿وَالْكِتَابِ الْمُبِينِ [44:2]

1, 2. ஹா மீம். தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!

### الآية 44:3

> ﻿إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنْذِرِينَ [44:3]

3\. நிச்சயமாக இதை மிக்க பாக்கியமுள்ள (‘லைலத்துல் கத்ரு' என்ற) ஓர் இரவில் (முதல் முறையாக) இறக்கிவைத்தோம். நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம்.

### الآية 44:4

> ﻿فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ [44:4]

4\. உறுதியான எல்லா காரியங்களும் அதில்தான் நம் கட்டளையின்படி (தீர்மானிக்கப்பட்டு) பிரித்துக் கொடுக்கப்படுகின்றன.

### الآية 44:5

> ﻿أَمْرًا مِنْ عِنْدِنَا ۚ إِنَّا كُنَّا مُرْسِلِينَ [44:5]

5\. (நபியே!) நிச்சயமாக நாம் (உங்களை அவர்களிடம் நம் தூதராக) அனுப்புகிறோம்.

### الآية 44:6

> ﻿رَحْمَةً مِنْ رَبِّكَ ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ [44:6]

6\. (அது) உமது இறைவனின் அருளாகும். நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவனும், நன்கறிந்தவனும் ஆவான்.

### الآية 44:7

> ﻿رَبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ۖ إِنْ كُنْتُمْ مُوقِنِينَ [44:7]

7\. நீங்கள் (உண்மையை) உறுதி கொள்பவர்களாக இருந்தால் வானங்கள், பூமி, இன்னும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றின் சொந்தக்காரன் அவனே (என்பதை நம்புங்கள்).

### الآية 44:8

> ﻿لَا إِلَٰهَ إِلَّا هُوَ يُحْيِي وَيُمِيتُ ۖ رَبُّكُمْ وَرَبُّ آبَائِكُمُ الْأَوَّلِينَ [44:8]

8\. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. அவனே (படைப்புகளை) உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கவும் வைக்கிறான். அவனே உங்கள் இறைவனும் உங்கள் மூதாதைகளின் இறைவனுமாவான்.

### الآية 44:9

> ﻿بَلْ هُمْ فِي شَكٍّ يَلْعَبُونَ [44:9]

9\. எனினும், அவர்கள் (இவ்விஷயத்திலும் வீண்) சந்தேகத்தில்தான் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்!

### الآية 44:10

> ﻿فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ [44:10]

10\. (நபியே!) தெளிவானதொரு புகை, வானத்திலிருந்து வரும் நாளை எதிர்பார்த்திருப்பீராக.

### الآية 44:11

> ﻿يَغْشَى النَّاسَ ۖ هَٰذَا عَذَابٌ أَلِيمٌ [44:11]

11\. மனிதர்கள் அனைவரையும் அது சூழ்ந்து கொள்ளும். அது ஒரு துன்புறுத்தும் வேதனையாகும்.

### الآية 44:12

> ﻿رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ [44:12]

12\. (அந்நாளில் மனிதர்கள் இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! எங்களை விட்டும் இவ்வேதனையை நீக்கிவிடு. நிச்சயமாக நாங்கள் (உன்னை) நம்பிக்கை கொள்கிறோம்'' (என்று கூறுவார்கள்).

### الآية 44:13

> ﻿أَنَّىٰ لَهُمُ الذِّكْرَىٰ وَقَدْ جَاءَهُمْ رَسُولٌ مُبِينٌ [44:13]

13\. (அந்நேரத்தில் அவர்களின்) நல்லுணர்ச்சி எவ்வாறு அவர்களுக்குப் பயனளிக்கும்? நிச்சயமாக (நமது) தெளிவான தூதர் (இதற்கு முன்னர்) அவர்களிடம் வந்தே இருக்கிறார்.

### الآية 44:14

> ﻿ثُمَّ تَوَلَّوْا عَنْهُ وَقَالُوا مُعَلَّمٌ مَجْنُونٌ [44:14]

14\. எனினும், அவர்கள் அவரைப் புறக்கணித்து, (அவரைப்பற்றி ‘‘இவர்) எவராலோ கற்பிக்கப்பட்ட ஒரு பைத்தியக்காரர்தான்'' என்று கூறினர்.

### الآية 44:15

> ﻿إِنَّا كَاشِفُو الْعَذَابِ قَلِيلًا ۚ إِنَّكُمْ عَائِدُونَ [44:15]

15\. (மெய்யாகவே நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்கள் என்று) அவ்வேதனையை மேலும் சிறிது காலத்திற்கு நீக்கிவைத்தோம். (எனினும்) நிச்சயமாக (நீங்கள் பாவம்) செய்யவே மீளுகிறீர்கள்.

### الآية 44:16

> ﻿يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرَىٰ إِنَّا مُنْتَقِمُونَ [44:16]

16\. மிக்க பலமாக (அவர்களை) நாம் பிடிக்கும் அந்நாளில் நிச்சயமாக (அவர்களிடம்) பழிவாங்கியே தீருவோம்.

### الآية 44:17

> ﻿۞ وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَجَاءَهُمْ رَسُولٌ كَرِيمٌ [44:17]

17\. இவர்களுக்கு முன்னரும், ஃபிர்அவ்னுடைய மக்களை நிச்சயமாக நாம் சோதித்தோம். அவர்களிடம் கண்ணியமான (நம்) தூதர் ஒருவர் வந்தார்.

### الآية 44:18

> ﻿أَنْ أَدُّوا إِلَيَّ عِبَادَ اللَّهِ ۖ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ [44:18]

18\. ‘‘அல்லாஹ்வின் அடியார்(களாகிய இஸ்ராயீலின் சந்ததி)களை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். நிச்சயமாக நான் (இறைவனிடமிருந்து) உங்களிடம் வந்துள்ள நம்பிக்கையான தூதர் ஆவேன்.

### الآية 44:19

> ﻿وَأَنْ لَا تَعْلُوا عَلَى اللَّهِ ۖ إِنِّي آتِيكُمْ بِسُلْطَانٍ مُبِينٍ [44:19]

19\. அல்லாஹ்வுக்கு (முன் ஆணவம் கொள்ளாதீர்கள், அவனுக்கு) நீங்கள் மாறு செய்யாதீர்கள். நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான ஓர் அத்தாட்சியைக் கொண்டுவந்திருக்கிறேன்'' என்று அவர் கூறினார். (அதற்கவர்கள் ‘‘நாங்கள் உங்களை கல்லெறிந்து கொன்று விடுவோம்'' என்று கூறினார்கள்.)

### الآية 44:20

> ﻿وَإِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُمْ أَنْ تَرْجُمُونِ [44:20]

20\. (அதற்கு மூஸா) ‘‘என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்வதை விட்டும் எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்றார்.

### الآية 44:21

> ﻿وَإِنْ لَمْ تُؤْمِنُوا لِي فَاعْتَزِلُونِ [44:21]

21\. ‘‘நீங்கள் என்னை நம்பாவிடில் என்னைவிட்டு விலகிக் கொள்ளுங்கள்'' (என்றும் கூறி),

### الآية 44:22

> ﻿فَدَعَا رَبَّهُ أَنَّ هَٰؤُلَاءِ قَوْمٌ مُجْرِمُونَ [44:22]

22\. தன் இறைவனை அழைத்து ‘‘நிச்சயமாக இவர்கள் பாவம் செய்யும் மக்களாகவே இருக்கிறார்கள்'' என்று கூறினார்.

### الآية 44:23

> ﻿فَأَسْرِ بِعِبَادِي لَيْلًا إِنَّكُمْ مُتَّبَعُونَ [44:23]

23\. (அதற்கு இறைவன்) ‘‘நீர் (இஸ்ரவேலர்களாகிய) என் அடியார்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக சென்று விடுங்கள். எனினும், நிச்சயமாக (அவர்கள்) உங்களைப் பின்தொடர்ந்து வருவார்கள்.

### الآية 44:24

> ﻿وَاتْرُكِ الْبَحْرَ رَهْوًا ۖ إِنَّهُمْ جُنْدٌ مُغْرَقُونَ [44:24]

24\. (நீங்கள் செல்வதற்காகப் பிளந்த) கடலை வறண்டுபோன அதே நிலையில் விட்டு விட்டு (நீங்கள் கடலைக் கடந்து) விடுங்கள். நிச்சயமாக அவர்களுடைய படைகள் அனைத்தும் கடலில் மூழ்கடிக்கப்பட்டு விடும்'' (என்று கூறி, அவ்வாறே மூழ்கடித்தான்.)

### الآية 44:25

> ﻿كَمْ تَرَكُوا مِنْ جَنَّاتٍ وَعُيُونٍ [44:25]

25\. (அவர்கள்) எத்தனையோ சோலைகளையும், நீரருவிகளையும் விட்டுச் சென்றனர்.

### الآية 44:26

> ﻿وَزُرُوعٍ وَمَقَامٍ كَرِيمٍ [44:26]

26\. இன்னும் எவ்வளவோ விவசாயங்களையும், மேலான வீடுகளையும் (விட்டுச் சென்றனர்).

### الآية 44:27

> ﻿وَنَعْمَةٍ كَانُوا فِيهَا فَاكِهِينَ [44:27]

27\. அவர்கள் இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்த எத்தனையோ சுகம் தரும் பொருள்களையும் (விட்டுச் சென்றனர்).

### الآية 44:28

> ﻿كَذَٰلِكَ ۖ وَأَوْرَثْنَاهَا قَوْمًا آخَرِينَ [44:28]

28\. இவ்வாறே (நடைபெற்றது). அவற்றையெல்லாம் அவர்கள் அல்லாத வேறு மக்களுக்குச் சொந்தமாக்கி வைத்தோம்.

### الآية 44:29

> ﻿فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَاءُ وَالْأَرْضُ وَمَا كَانُوا مُنْظَرِينَ [44:29]

29\. (அழிந்துபோன) அவர்களைப் பற்றி, வானமோ பூமியோ (ஒன்றுமே துக்கித்து) அழவில்லை! (தப்பித்துக் கொள்ளவும்) அவர்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட வில்லை.

### الآية 44:30

> ﻿وَلَقَدْ نَجَّيْنَا بَنِي إِسْرَائِيلَ مِنَ الْعَذَابِ الْمُهِينِ [44:30]

30\. (இவ்வாறே) இழிவு தரும் வேதனையில் இருந்து இஸ்ராயீலின் சந்ததிகளை பாதுகாத்துக் கொண்டோம்.

### الآية 44:31

> ﻿مِنْ فِرْعَوْنَ ۚ إِنَّهُ كَانَ عَالِيًا مِنَ الْمُسْرِفِينَ [44:31]

31\. ஃபிர்அவ்னிடமிருந்து (அவர்களைப் பாதுகாத்தோம்). நிச்சயமாக அவன் வரம்பு மீறிகளில் ஓர் ஆணவம் கொண்டவனாக இருந்தான்.

### الآية 44:32

> ﻿وَلَقَدِ اخْتَرْنَاهُمْ عَلَىٰ عِلْمٍ عَلَى الْعَالَمِينَ [44:32]

32\. (இவ்வாறு ஃபிர்அவ்னை மூழ்கடித்த பின்னர்) இஸ்ராயீலுடைய சந்ததிகளின் தன்மையை அறிந்தே உலகத்தார் அனைவரிலும் அவர்களைத் தேர்ந்தெடுத்தோம்.

### الآية 44:33

> ﻿وَآتَيْنَاهُمْ مِنَ الْآيَاتِ مَا فِيهِ بَلَاءٌ مُبِينٌ [44:33]

33\. இன்னும், அவர்களுக்கு (மன்னு ஸல்வா போன்ற) பல அத்தாட்சிகளையும் நாம் கொடுத்தோம். அவற்றில், அவர்களுக்குப் பெரும் சோதனை இருந்தது.

### الآية 44:34

> ﻿إِنَّ هَٰؤُلَاءِ لَيَقُولُونَ [44:34]

34\. (எனினும்,) நிச்சயமாக (நிராகரிப்பாளர்களாகிய) இவர்கள் கூறுகிறார்கள்:

### الآية 44:35

> ﻿إِنْ هِيَ إِلَّا مَوْتَتُنَا الْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُنْشَرِينَ [44:35]

35\. ‘‘இவ்வுலகில் நாம் மரிக்கும் இம்மரணத்தைத் தவிர வேறொன்றும் இல்லை. (மரணித்த பின்னர்,) நாம் உயிர் கொடுத்து எழுப்பப்பட மாட்டோம்''

### الآية 44:36

> ﻿فَأْتُوا بِآبَائِنَا إِنْ كُنْتُمْ صَادِقِينَ [44:36]

36\. (மேலும், நம்பிக்கையாளர்களை நோக்கி,) ‘‘நீங்கள் கூறுவது உண்மையாயின், (இறந்து போன) எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள்'' (என்றனர்).

### الآية 44:37

> ﻿أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمُ تُبَّعٍ وَالَّذِينَ مِنْ قَبْلِهِمْ ۚ أَهْلَكْنَاهُمْ ۖ إِنَّهُمْ كَانُوا مُجْرِمِينَ [44:37]

37\. (நபியே!) இவர்கள் மேலானவர்களா? அல்லது ‘துப்பஉ' என்னும் மக்களும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களும் மேலானவர்களா? அவர்களை (எல்லாம்) நாம் அழித்துவிட்டோம். ஏனென்றால், நிச்சயமாக அவர்களும் பாவம் செய்பவர்களாகவே இருந்தனர்.

### الآية 44:38

> ﻿وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ [44:38]

38\. வானங்களையும், பூமியையும், அதற்கு மத்தியில் உள்ளவற்றையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.

### الآية 44:39

> ﻿مَا خَلَقْنَاهُمَا إِلَّا بِالْحَقِّ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ [44:39]

39\. நிச்சயமாக தக்க காரணத்திற்காகவே தவிர, இவற்றை நாம் படைக்கவில்லை. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதை அறிந்துகொள்வதில்லை.

### الآية 44:40

> ﻿إِنَّ يَوْمَ الْفَصْلِ مِيقَاتُهُمْ أَجْمَعِينَ [44:40]

40\. நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்தான் அவர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும்.

### الآية 44:41

> ﻿يَوْمَ لَا يُغْنِي مَوْلًى عَنْ مَوْلًى شَيْئًا وَلَا هُمْ يُنْصَرُونَ [44:41]

41\. அந்நாளில், ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எத்தகைய உதவியும் புரிந்து பயனளிக்க மாட்டான். அவனுக்கும் எவருடைய உதவியும் கிடைக்காது.

### الآية 44:42

> ﻿إِلَّا مَنْ رَحِمَ اللَّهُ ۚ إِنَّهُ هُوَ الْعَزِيزُ الرَّحِيمُ [44:42]

42\. ஆயினும், எவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தானோ (அவர்களுக்கு எல்லா உதவியும் கிடைக்கும்). நிச்சயமாக அவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் மகா கருணையுடையவனும் ஆவான்.

### الآية 44:43

> ﻿إِنَّ شَجَرَتَ الزَّقُّومِ [44:43]

43\. நிச்சயமாக (நரகத்திலிருக்கும்)கள்ளி மரம்தான்

### الآية 44:44

> ﻿طَعَامُ الْأَثِيمِ [44:44]

44\. பாவியின் உணவு.

### الآية 44:45

> ﻿كَالْمُهْلِ يَغْلِي فِي الْبُطُونِ [44:45]

45\. (அது) உருகிய செம்பைப்போல் அவனுடைய வயிற்றில் கொதிக்கும்.

### الآية 44:46

> ﻿كَغَلْيِ الْحَمِيمِ [44:46]

46\. சூடான தண்ணீர் கொதிப்பதைப் போல் (அது கொதித்துப் பொங்கி வரும்).

### الآية 44:47

> ﻿خُذُوهُ فَاعْتِلُوهُ إِلَىٰ سَوَاءِ الْجَحِيمِ [44:47]

47\. ‘‘அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு நரகத்தின் மத்தியில் செல்லுங்கள்.

### الآية 44:48

> ﻿ثُمَّ صُبُّوا فَوْقَ رَأْسِهِ مِنْ عَذَابِ الْحَمِيمِ [44:48]

48\. பிறகு, அவனுடைய தலைக்குமேல் கொதித்(துக் காய்ந்)த தண்ணீரை ஊற்றி நோவினை செய்யுங்கள்'' (என்று கூறப்படுவதுடன், அவனை நோக்கி ஏளனமாக,)

### الآية 44:49

> ﻿ذُقْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْكَرِيمُ [44:49]

49\. ‘‘நிச்சயமாக நீ மிக்க கண்ணியமும் மரியாதையும் உடையவன். ஆதலால், நீ (இவ்வேதனையைச் சிறிது) சுவைத்துப் பார்'' (என்றும் கூறப்படும்)

### الآية 44:50

> ﻿إِنَّ هَٰذَا مَا كُنْتُمْ بِهِ تَمْتَرُونَ [44:50]

50\. நிச்சயமாக இதுதான் நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தவை.

### الآية 44:51

> ﻿إِنَّ الْمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٍ [44:51]

51\. இறையச்சமுடையவர்களோ, நிச்சயமாக அச்சமற்ற இடத்தில்,

### الآية 44:52

> ﻿فِي جَنَّاتٍ وَعُيُونٍ [44:52]

52\. அதுவும் சொர்க்கச் சோலைகளில், ஊற்றுகளின் சமீபமாக,

### الآية 44:53

> ﻿يَلْبَسُونَ مِنْ سُنْدُسٍ وَإِسْتَبْرَقٍ مُتَقَابِلِينَ [44:53]

53\. மெல்லியதும் மொத்தமானதும் (ஆக, அவர்கள் விரும்பிய) பட்டாடைகளை அணிந்து, ஒருவரை ஒருவர் முகம் நோக்கி (உட்கார்ந்து மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டு) இருப்பார்கள்.

### الآية 44:54

> ﻿كَذَٰلِكَ وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عِينٍ [44:54]

54\. இவ்வாறே (சந்தேகமின்றி நடைபெறும்). மேலும், ‘ஹூருல் ஈன்' (என்னும் கண்ணழகிகளாகிய கன்னி)களையும் நாம் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம்.

### الآية 44:55

> ﻿يَدْعُونَ فِيهَا بِكُلِّ فَاكِهَةٍ آمِنِينَ [44:55]

55\. அச்சமற்றவர்களாக (அவர்கள் விரும்பிய) கனிவர்க்கங்கள் அனைத்தையும், அங்கு கேட்டு (வாங்கிப் புசித்து) கொண்டும் இருப்பார்கள்.

### الآية 44:56

> ﻿لَا يَذُوقُونَ فِيهَا الْمَوْتَ إِلَّا الْمَوْتَةَ الْأُولَىٰ ۖ وَوَقَاهُمْ عَذَابَ الْجَحِيمِ [44:56]

56\. முந்திய மரணத்தைத் தவிர, அதில் அவர்கள் வேறு ஒரு மரணத்தையும் அனுபவிக்க மாட்டார்கள். (அதாவது: மரணிக்காது என்றென்றும் வாழ்வார்கள்.) இன்னும், அவர்களை நரக வேதனையிலிருந்து, (இறைவன்) காப்பாற்றினான்.

### الآية 44:57

> ﻿فَضْلًا مِنْ رَبِّكَ ۚ ذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ [44:57]

57\. (நபியே! இது) உமது இறைவனின் அருளாகும். இதுதான் மகத்தான பெரும் வெற்றியுமாகும்.

### الآية 44:58

> ﻿فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ [44:58]

58\. (நபியே!) அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இவ்வேதத்தை நாம் உமது மொழியில் (இறக்கி அதை) எளிதாக்கி வைத்தோம்.

### الآية 44:59

> ﻿فَارْتَقِبْ إِنَّهُمْ مُرْتَقِبُونَ [44:59]

59\. (இதைக் கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறவில்லையெனில், அவர்களுக்கு வரக்கூடிய தீங்கை) நீர் எதிர்பார்த்திருப்பீராக. நிச்சயமாக அவர்களும் எதிர்பார்த்தே இருப்பார்கள்.

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/44.md)
- [كل تفاسير سورة الدّخان
](https://quranpedia.net/surah-tafsir/44.md)
- [ترجمات سورة الدّخان
](https://quranpedia.net/translations/44.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية](https://quranpedia.net/book/1991.md)
- [المؤلف: عبد الحميد الباقوي](https://quranpedia.net/person/1766.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/44/book/1991) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
