---
title: "ترجمة سورة الدّخان - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/44/book/27819.md"
canonical: "https://quranpedia.net/surah/1/44/book/27819"
surah_id: "44"
book_id: "27819"
book_name: "الترجمة التاميلية - عمر شريف"
type: "translation"
---

# ترجمة سورة الدّخان - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/44/book/27819)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة الدّخان - الترجمة التاميلية - عمر شريف (التاميلية) — https://quranpedia.net/surah/1/44/book/27819*.

Translation of Surah الدّخان from "الترجمة التاميلية - عمر شريف" in التاميلية.

### الآية 44:1

> حم [44:1]

ஹா மீம்.

### الآية 44:2

> ﻿وَالْكِتَابِ الْمُبِينِ [44:2]

ெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக!

### الآية 44:3

> ﻿إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنْذِرِينَ [44:3]

நிச்சயமாக நாம் அருள்நிறைந்த ஓர் இரவில் இதை இறக்கினோம். நிச்சயமாக நாம் அச்சமூட்டி எச்சரிப்பவர்களாக இருந்தோம்.

### الآية 44:4

> ﻿فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ [44:4]

இதில்தான் ஞானமிக்க எல்லாக் காரியங்களும் முடிவு செய்யப்படுகின்றன.

### الآية 44:5

> ﻿أَمْرًا مِنْ عِنْدِنَا ۚ إِنَّا كُنَّا مُرْسِلِينَ [44:5]

நம்மிடமிருந்து வருகின்ற கட்டளையின்படி (முடிவு செய்யப்படுகின்றன). நிச்சயமாக நாம் (முஹம்மது அவர்களை) தூதராக அனுப்புகின்றவர்களாகவே இருந்தோம்.

### الآية 44:6

> ﻿رَحْمَةً مِنْ رَبِّكَ ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ [44:6]

(முஹம்மது ஆகிய உம்மை அவர்களுக்கு நபியாக அனுப்புவது அவர்களுக்கு) உமது இறைவனின் ஓர் அருளாகும். நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் அவான்.

### الآية 44:7

> ﻿رَبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ۖ إِنْ كُنْتُمْ مُوقِنِينَ [44:7]

அவன் வானங்கள் இன்னும் பூமி இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ள அனைத்தின் இறைவன் ஆவான். நீங்கள் (இதை) உறுதியாக நம்பக்கூடியவர்களாக இருந்தால் (அவன்தான் என்னை உங்களிடம் அனுப்பினான், இந்த வேதத்தை உங்களுக்கு இறக்கினான் என்பதையும் நம்பிக்கை கொள்ளுங்கள்).

### الآية 44:8

> ﻿لَا إِلَٰهَ إِلَّا هُوَ يُحْيِي وَيُمِيتُ ۖ رَبُّكُمْ وَرَبُّ آبَائِكُمُ الْأَوَّلِينَ [44:8]

வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர (வேறு யாரும்) அறவே இல்லை. அவன்தான் உயிர்ப்பிக்கின்றான்; மரணிக்க வைக்கின்றான். அவன்தான் உங்கள் இறைவனும் உங்கள் முன்னோர்களான மூதாதைகளின் இறைவனும் ஆவான்.

### الآية 44:9

> ﻿بَلْ هُمْ فِي شَكٍّ يَلْعَبُونَ [44:9]

மாறாக, அவர்கள் (இந்த வேதத்தை நம்பாமல்) சந்தேகத்தில் இருக்கின்றனர்; விளையாடுகின்றனர்.

### الآية 44:10

> ﻿فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ [44:10]

ஆகவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வருகின்ற நாளை எதிர்ப்பார்ப்பீராக!

### الآية 44:11

> ﻿يَغْشَى النَّاسَ ۖ هَٰذَا عَذَابٌ أَلِيمٌ [44:11]

அது மக்களை சூழ்ந்துகொள்ளும். இது வலி தரக்கூடிய வேதனையாகும்.

### الآية 44:12

> ﻿رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ [44:12]

எங்கள் இறைவா! எங்களை விட்டு வேதனையை அகற்றி விடுவாயாக! நிச்சயமாக நாங்கள் நம்பிக்கையாளர்கள் ஆவோம்.

### الآية 44:13

> ﻿أَنَّىٰ لَهُمُ الذِّكْرَىٰ وَقَدْ جَاءَهُمْ رَسُولٌ مُبِينٌ [44:13]

(வேதனை வந்த பின்னர்) நல்லறிவு பெறுவது அவர்களுக்கு எப்படி (பலன் தரும்)? திட்டமாக அவர்களிடம் தெளிவான ஒரு தூதர் வந்தார்.

### الآية 44:14

> ﻿ثُمَّ تَوَلَّوْا عَنْهُ وَقَالُوا مُعَلَّمٌ مَجْنُونٌ [44:14]

பிறகு, அவர்கள் அவரை விட்டு விலகிவிட்டனர். இன்னும், அவர் (பிறரால் இந்த வேதத்தை) கற்பிக்கப்பட்டவர், பைத்தியக்காரர் என்று கூறினர்.

### الآية 44:15

> ﻿إِنَّا كَاشِفُو الْعَذَابِ قَلِيلًا ۚ إِنَّكُمْ عَائِدُونَ [44:15]

நிச்சயமாக நாம் இந்த வேதனையை கொஞ்சம் நீக்குவோம். (ஆனால்,) நிச்சயமாக நீங்கள் (உங்கள் வழிகேட்டுக்குத்தான்) திரும்புவீர்கள்.

### الآية 44:16

> ﻿يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرَىٰ إِنَّا مُنْتَقِمُونَ [44:16]

பெரிய தாக்குதலாக (அவர்களை) நாம் தாக்குகின்ற நாளில் (அவர்களிடம்) நிச்சயமாக நாம் பழி வாங்குவோம்.

### الآية 44:17

> ﻿۞ وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَجَاءَهُمْ رَسُولٌ كَرِيمٌ [44:17]

இவர்களுக்கு முன்னர் நாம் ஃபிர்அவ்னுடைய மக்களை திட்டவட்டமாக சோதித்தோம். அவர்களிடம் கண்ணியமான ஒரு தூதர் வந்தார்.

### الآية 44:18

> ﻿أَنْ أَدُّوا إِلَيَّ عِبَادَ اللَّهِ ۖ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ [44:18]

(அவர் கூறினார்:) “அல்லாஹ்வின் அடியார்களை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்! நிச்சயமாக நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) நம்பிக்கைக்குரிய தூதர் ஆவேன்.

### الآية 44:19

> ﻿وَأَنْ لَا تَعْلُوا عَلَى اللَّهِ ۖ إِنِّي آتِيكُمْ بِسُلْطَانٍ مُبِينٍ [44:19]

அல்லாஹ்விற்கு முன் அழிச்சாட்டியம் செய்யாதீர்கள். நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வருவேன்.

### الآية 44:20

> ﻿وَإِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُمْ أَنْ تَرْجُمُونِ [44:20]

நிச்சயமாக நான் எனது இறைவனிடம் இன்னும் உங்கள் இறைவனிடம் நீங்கள் என்னை கொல்வதில் இருந்து பாதுகாவல் தேடினேன்.

### الآية 44:21

> ﻿وَإِنْ لَمْ تُؤْمِنُوا لِي فَاعْتَزِلُونِ [44:21]

நீங்கள் என்னை நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் என்னை விட்டு விலகிவிடுங்கள்.”

### الآية 44:22

> ﻿فَدَعَا رَبَّهُ أَنَّ هَٰؤُلَاءِ قَوْمٌ مُجْرِمُونَ [44:22]

அவர் தனது இறைவனை அழைத்தார்: “நிச்சயமாக இவர்கள் குற்றம் செய்கின்ற மக்கள் ஆவார்கள்”.

### الآية 44:23

> ﻿فَأَسْرِ بِعِبَادِي لَيْلًا إِنَّكُمْ مُتَّبَعُونَ [44:23]

(இறைவன் கூறினான்:) “என் அடியார்களை இரவில் நீங்கள் அழைத்துச் செல்லுங்கள். நிச்சயமாக நீங்கள் (உங்கள் எதிரிகளால்) பின்தொடரப்படுவீர்கள்.

### الآية 44:24

> ﻿وَاتْرُكِ الْبَحْرَ رَهْوًا ۖ إِنَّهُمْ جُنْدٌ مُغْرَقُونَ [44:24]

கடலை (அது) அமைதியாக (இருக்கின்ற நிலையில் அப்படியே) விட்டு விடுங்கள்! நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுகின்ற ராணுவம் ஆவார்கள்.

### الآية 44:25

> ﻿كَمْ تَرَكُوا مِنْ جَنَّاتٍ وَعُيُونٍ [44:25]

அவர்கள் எத்தனையோ தோட்டங்களையும் ஊற்றுகளையும் விட்டுச்சென்றார்கள்.

### الآية 44:26

> ﻿وَزُرُوعٍ وَمَقَامٍ كَرِيمٍ [44:26]

இன்னும், விவசாய நிலங்களையும் கண்ணியமான இடங்களையும் (-மாட மாளிகைகளையும் விட்டுச்சென்றார்கள்).

### الآية 44:27

> ﻿وَنَعْمَةٍ كَانُوا فِيهَا فَاكِهِينَ [44:27]

இன்னும், அவர்கள் இன்புற்று (சொகுசாக வாழ்ந்து) கொண்டிருந்த வசதிகளையும் (விட்டுச்சென்றார்கள்).

### الآية 44:28

> ﻿كَذَٰلِكَ ۖ وَأَوْرَثْنَاهَا قَوْمًا آخَرِينَ [44:28]

இப்படித்தான் (உமது இறைவனின் தண்டனை வந்தால் பாவிகளின் நிலை இருக்கும்). இவற்றை (எல்லாம்) வேறு மக்களுக்கு நாம் சொந்தமாக்கினோம்.

### الآية 44:29

> ﻿فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَاءُ وَالْأَرْضُ وَمَا كَانُوا مُنْظَرِينَ [44:29]

அவர்கள் மீது வானமும் பூமியும் அழவில்லை. அவர்கள் தவணைத் தரப்படுபவர்களாகவும் இருக்கவில்லை.

### الآية 44:30

> ﻿وَلَقَدْ نَجَّيْنَا بَنِي إِسْرَائِيلَ مِنَ الْعَذَابِ الْمُهِينِ [44:30]

இஸ்ரவேலர்களை இழிவுபடுத்தும் வேதனையில் இருந்து திட்டவட்டமாக நாம் காப்பாற்றினோம்.

### الآية 44:31

> ﻿مِنْ فِرْعَوْنَ ۚ إِنَّهُ كَانَ عَالِيًا مِنَ الْمُسْرِفِينَ [44:31]

ஃபிர்அவ்னிடமிருந்து (அவர்களை நாம் காப்பாற்றினோம்). நிச்சயமாக அவன் அழிச்சாட்டியம் செய்பவனாக, வரம்புமீறிகளில் ஒருவனாக இருந்தான்.

### الآية 44:32

> ﻿وَلَقَدِ اخْتَرْنَاهُمْ عَلَىٰ عِلْمٍ عَلَى الْعَالَمِينَ [44:32]

(-இஸ்ரவேலர்களை அவர்களின் தகுதியை) அறிந்தே அகிலத்தாரை விட அவர்களை திட்டவட்டமாக நாம் தேர்ந்தெடுத்தோம்.

### الآية 44:33

> ﻿وَآتَيْنَاهُمْ مِنَ الْآيَاتِ مَا فِيهِ بَلَاءٌ مُبِينٌ [44:33]

அத்தாட்சிகளில் தெளிவான சோதனை உள்ளதை அவர்களுக்கு நாம் கொடுத்தோம்.

### الآية 44:34

> ﻿إِنَّ هَٰؤُلَاءِ لَيَقُولُونَ [44:34]

நிச்சயமாக (உமது மக்களாகிய) இவர்கள் கூறுகின்றனர்:

### الآية 44:35

> ﻿إِنْ هِيَ إِلَّا مَوْتَتُنَا الْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُنْشَرِينَ [44:35]

"இது நமது முதல் மரணமே தவிர வேறு இல்லை. நாங்கள் (மரணித்த பின்னர் மீண்டும் உயிர்கொடுத்து) எழுப்பப்படுபவர்களாக இல்லை.

### الآية 44:36

> ﻿فَأْتُوا بِآبَائِنَا إِنْ كُنْتُمْ صَادِقِينَ [44:36]

(முஹம்மதே!) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்கள் மூதாதைகளை (உயிர்ப்பித்து)க் கொண்டு வாருங்கள்!

### الآية 44:37

> ﻿أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمُ تُبَّعٍ وَالَّذِينَ مِنْ قَبْلِهِمْ ۚ أَهْلَكْنَاهُمْ ۖ إِنَّهُمْ كَانُوا مُجْرِمِينَ [44:37]

இவர்கள் சிறந்தவர்களா அல்லது துப்பஃ உடைய மக்களா? இன்னும் இவர்களுக்கு முன்னுள்ளவர்களா? அவர்களை (எல்லாம்) நாம் அழித்துவிட்டோம். நிச்சயமாக அவர்கள் குற்றவாளிகளாக இருந்தனர்.

### الآية 44:38

> ﻿وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ [44:38]

வானங்களையும் பூமியையும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும் நாம் விளையாட்டாக படைக்கவில்லை.

### الآية 44:39

> ﻿مَا خَلَقْنَاهُمَا إِلَّا بِالْحَقِّ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ [44:39]

நாம் அவ்விரண்டையும் உண்மையான காரணத்திற்கே தவிர படைக்கவில்லை. என்றாலும் அவர்களில் அதிகமானவர்கள் (இதை) அறியமாட்டார்கள்.

### الآية 44:40

> ﻿إِنَّ يَوْمَ الْفَصْلِ مِيقَاتُهُمْ أَجْمَعِينَ [44:40]

நிச்சயமாக தீர்ப்பு நாள் இவர்கள் அனைவரின் (தண்டனைக்காக) நேரம் குறிக்கப்பட்ட நாளாகும்.

### الآية 44:41

> ﻿يَوْمَ لَا يُغْنِي مَوْلًى عَنْ مَوْلًى شَيْئًا وَلَا هُمْ يُنْصَرُونَ [44:41]

அந்நாளில் நண்பன் (உறவுக்காரன்) நண்பனை (உறவுக்காரனை) விட்டு (வேதனையில்) எதையும் தடுக்க மாட்டான். அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.

### الآية 44:42

> ﻿إِلَّا مَنْ رَحِمَ اللَّهُ ۚ إِنَّهُ هُوَ الْعَزِيزُ الرَّحِيمُ [44:42]

அல்லாஹ் எவர்கள் மீது கருணை புரிந்தானோ அவர்களைத் தவிர (யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது). நிச்சயமாக அவன்தான் மிகைத்தவன், மகா கருணையாளன்.

### الآية 44:43

> ﻿إِنَّ شَجَرَتَ الزَّقُّومِ [44:43]

நிச்சயமாக ஸக்கூம் மரம்,

### الآية 44:44

> ﻿طَعَامُ الْأَثِيمِ [44:44]

பாவிகளின் உணவாகும்.

### الآية 44:45

> ﻿كَالْمُهْلِ يَغْلِي فِي الْبُطُونِ [44:45]

அது உருக்கப்பட்ட செம்பைப் போல் இருக்கும். வயிறுகளில் அது கொதிக்கும்,

### الآية 44:46

> ﻿كَغَلْيِ الْحَمِيمِ [44:46]

கொதிக்கின்ற தண்ணீர் கொதிப்பதைப் போல்.

### الآية 44:47

> ﻿خُذُوهُ فَاعْتِلُوهُ إِلَىٰ سَوَاءِ الْجَحِيمِ [44:47]

அவனைப் பிடியுங்கள்! நரகத்தின் நடுவில் அவனை இழுத்து வாருங்கள்!

### الآية 44:48

> ﻿ثُمَّ صُبُّوا فَوْقَ رَأْسِهِ مِنْ عَذَابِ الْحَمِيمِ [44:48]

பிறகு, அவனது தலைக்கு மேல் கொதிக்கின்ற நீரை ஊற்றி தண்டனை கொடுங்கள்.

### الآية 44:49

> ﻿ذُقْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْكَرِيمُ [44:49]

நீ (இந்த வேதனைகளை) சுவை! நிச்சயமாக நீதான் கண்ணியமானவன் மதிப்பிற்குரியவன்.

### الآية 44:50

> ﻿إِنَّ هَٰذَا مَا كُنْتُمْ بِهِ تَمْتَرُونَ [44:50]

நிச்சயமாக நீங்கள் சந்தேகிப்பவர்களாக இருந்தது இதுதான்.

### الآية 44:51

> ﻿إِنَّ الْمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٍ [44:51]

நிச்சயமாக இறையச்சமுள்ளவர்கள் பாதுகாப்பான இடத்தில் இருப்பார்கள்.

### الآية 44:52

> ﻿فِي جَنَّاتٍ وَعُيُونٍ [44:52]

சொர்க்கங்களில், ஊற்றுகளி(ன் அருகி)ல் இருப்பார்கள்.

### الآية 44:53

> ﻿يَلْبَسُونَ مِنْ سُنْدُسٍ وَإِسْتَبْرَقٍ مُتَقَابِلِينَ [44:53]

அவர்கள் மென்மையான, இன்னும் தடிப்பமான பட்டு ஆடைகளை அணிவார்கள்; ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக இருப்பார்கள்.

### الآية 44:54

> ﻿كَذَٰلِكَ وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عِينٍ [44:54]

இவ்வாறுதான், இன்னும் நாம் அவர்களுக்கு கண்ணழகிகளான வெண்மையான கண்ணிகளை மணமுடித்து வைப்போம்.

### الآية 44:55

> ﻿يَدْعُونَ فِيهَا بِكُلِّ فَاكِهَةٍ آمِنِينَ [44:55]

அதில் அவர்கள் நிம்மதியானவர்களாக (-பாதுகாப்புப் பெற்றவர்களாக) எல்லாப் பழங்களையும் (அவர்கள் உண்பதற்கு அவர்களின் பணியாளர்களிடம்) கேட்பார்கள்.

### الآية 44:56

> ﻿لَا يَذُوقُونَ فِيهَا الْمَوْتَ إِلَّا الْمَوْتَةَ الْأُولَىٰ ۖ وَوَقَاهُمْ عَذَابَ الْجَحِيمِ [44:56]

அதில் மரணத்தை அவர்கள் சுவைக்க மாட்டார்கள், (உலகத்தில் அவர்கள் மரணித்த) முதல் மரணத்தைத் தவிர (வேறு மரணம் சொர்க்கத்தில் இருக்காது). நரகத்தின் வேதனையை விட்டும் அவன் அவர்களைப் பாதுகாத்தான்.

### الآية 44:57

> ﻿فَضْلًا مِنْ رَبِّكَ ۚ ذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ [44:57]

உமது இறைவனின் அருளினால் (அவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள்). இதுதான் மகத்தான வெற்றியாகும்.

### الآية 44:58

> ﻿فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ [44:58]

அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதை (-இந்த குர்ஆனை கற்பதை) உமது (அரபி) மொழியில் நாம் இலேசாக்கினோம்.

### الآية 44:59

> ﻿فَارْتَقِبْ إِنَّهُمْ مُرْتَقِبُونَ [44:59]

ஆகவே, நீர் எதிர்பார்த்திருப்பீராக! நிச்சயமாக அவர்களும் எதிர்பார்க்கின்றார்கள்.

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/44.md)
- [كل تفاسير سورة الدّخان
](https://quranpedia.net/surah-tafsir/44.md)
- [ترجمات سورة الدّخان
](https://quranpedia.net/translations/44.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية - عمر شريف](https://quranpedia.net/book/27819.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/44/book/27819) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
