---
title: "ترجمة سورة الحاقة - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/69/book/27819.md"
canonical: "https://quranpedia.net/surah/1/69/book/27819"
surah_id: "69"
book_id: "27819"
book_name: "الترجمة التاميلية - عمر شريف"
type: "translation"
---

# ترجمة سورة الحاقة - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/69/book/27819)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة الحاقة - الترجمة التاميلية - عمر شريف (التاميلية) — https://quranpedia.net/surah/1/69/book/27819*.

Translation of Surah الحاقة from "الترجمة التاميلية - عمر شريف" in التاميلية.

### الآية 69:1

> الْحَاقَّةُ [69:1]

(நிராகரிப்பாளர்களுக்கு) நிகழக்கூடிய வேதனையைப் பற்றி (அது எப்போது நிகழும் என்று) கேட்பவர் கேட்டார்.

### الآية 69:2

> ﻿مَا الْحَاقَّةُ [69:2]

உண்மையான நிகழ்வு என்றால் என்ன?

### الآية 69:3

> ﻿وَمَا أَدْرَاكَ مَا الْحَاقَّةُ [69:3]

உண்மையான நிகழ்வு என்றால் என்ன என்று உமக்கு எது அறிவித்தது!?

### الآية 69:4

> ﻿كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌ بِالْقَارِعَةِ [69:4]

சமூது மக்களும் ஆது மக்களும் (உள்ளங்களை) தட்டக்கூடிய மறுமை நாளை பொய்ப்பித்தனர்.

### الآية 69:5

> ﻿فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ [69:5]

ஆக, சமூது மக்கள் எல்லை மீறிய சப்தத்தைக் கொண்டு அழிக்கப்பட்டனர்.

### الآية 69:6

> ﻿وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ [69:6]

ஆக, ஆது மக்கள் கடுமையான குளிருடன் வீசக்கூடிய அதி வேகமான (கட்டுக்கடங்காத) ஒரு காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டார்கள்.

### الآية 69:7

> ﻿سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ [69:7]

அவன் அதை (-அந்த காற்றை) அவர்கள் மீது ஏழு இரவுகளும் எட்டு பகல்களும் தொடர்ச்சியாக (வீசக்கூடிய நிலையில்) கட்டுப்படுத்தி வைத்திருந்தான். அதில் மக்களை செத்து மடிந்தவர்களாக நீர் பார்ப்பீர், அவர்களோ (கரையான் தின்று) அழிந்துபோன பேரீத்த மரத்தின் அடிப்பகுதிகளைப் போல் (வீழ்ந்து கிடந்தனர்).

### الآية 69:8

> ﻿فَهَلْ تَرَىٰ لَهُمْ مِنْ بَاقِيَةٍ [69:8]

அவர்களில் உயிரோடு மீதம் இருப்பவர் யாரையும் நீர் பார்க்கிறீரா?

### الآية 69:9

> ﻿وَجَاءَ فِرْعَوْنُ وَمَنْ قَبْلَهُ وَالْمُؤْتَفِكَاتُ بِالْخَاطِئَةِ [69:9]

ஃபிர்அவ்னும் அவனுக்கு முன்னுள்ளவர்களும் தலைக்கீழாக புரட்டப்பட்ட ஊரார்களும் தீய செயல்களை செய்தனர்.

### الآية 69:10

> ﻿فَعَصَوْا رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةً رَابِيَةً [69:10]

அவர்கள் தங்கள் இறைவனின் தூதருக்கு மாறுசெய்தனர். ஆகவே, கடுமையான பிடியால் அவன் அவர்களைப் பிடித்தான்.

### الآية 69:11

> ﻿إِنَّا لَمَّا طَغَى الْمَاءُ حَمَلْنَاكُمْ فِي الْجَارِيَةِ [69:11]

தண்ணீர் மிக அதிகமாகிய போது நிச்சயமாக நாம் உங்களை (உங்கள் முன்னோரான நூஹுடன் நம்பிக்கை கொண்டோரை) கப்பலில் ஏற்றினோம்.

### الآية 69:12

> ﻿لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَتَعِيَهَا أُذُنٌ وَاعِيَةٌ [69:12]

அதை (-நம்பிக்கையாளர்கள் பாதுகாக்கப்பட்டு பாவிகள் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தை) உங்களுக்கு ஓர் உபதேசமாக ஆக்குவதற்காகவும் கவனித்து செவியுறுகின்ற செவிகள் அவற்றை கவனித்து புரிந்து கொள்வதற்காகவும் (நாம் உங்கள் முன்னோரை கப்பலில் ஏற்றி பாதுகாத்தோம். அப்படித்தான் உங்களையும் இந்த நிராகரிப்பாளர்களிடமிருந்து பாதுகாப்போம்).

### الآية 69:13

> ﻿فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ [69:13]

சூரில் ஒரு முறை ஊதப்பட்டால்,

### الآية 69:14

> ﻿وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً [69:14]

பூமியும் மலைகளும் (காற்றில்) சுமக்கப்பட்டு இரண்டும் ஒரே அடியாக (ஒன்றோடொன்று) அடித்து நொறுக்கப்பட்டால்,

### الآية 69:15

> ﻿فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ [69:15]

அந்நாளில்தான் நிகழக்கூடிய (மறுமை) நாள் நிகழும்.

### الآية 69:16

> ﻿وَانْشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ [69:16]

வானம் (பல பிளவுகளாக) பிளந்து விடும். அது அந்நாளில் பலவீனப்பட்டுவிடும்.

### الآية 69:17

> ﻿وَالْمَلَكُ عَلَىٰ أَرْجَائِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ [69:17]

வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். அந்நாளில் தங்களுக்கு மேல் உள்ள உமது இறைவனின் அர்ஷை எட்டு வானவர்கள் சுமப்பார்கள்.

### الآية 69:18

> ﻿يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنْكُمْ خَافِيَةٌ [69:18]

அந்நாளில் நீங்கள் (உங்கள் இறைவன் முன்) சமர்ப்பிக்கப்படுவீர்கள். உங்களிடமிருந்து மறையக்கூடியது (-இரகசியங்கள்) எதுவும் (இறைவனுக்கு முன்னால்) மறைந்துவிடாது.

### الآية 69:19

> ﻿فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ [69:19]

ஆக, யார் தனது செயலேடு தனது வலது கரத்தில் கொடுக்கப்பட்டாரோ அவர் கூறுவார்: வாருங்கள்! (இதோ) எனது செயலேட்டை (எடுத்து)ப் படியுங்கள்!

### الآية 69:20

> ﻿إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ [69:20]

நிச்சயமாக நான் எனது விசாரணையை சந்திப்பேன் என்று நம்பினேன்.

### الآية 69:21

> ﻿فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ [69:21]

ஆகவே, அவர் மகிழ்ச்சியான வாழ்க்கையில் இருப்பார்,

### الآية 69:22

> ﻿فِي جَنَّةٍ عَالِيَةٍ [69:22]

(அவர்) உயர்ந்த சொர்க்கத்தில் இருப்பார்.

### الآية 69:23

> ﻿قُطُوفُهَا دَانِيَةٌ [69:23]

அதன் கனிகள் மிக சமீபமாக இருக்கும்.

### الآية 69:24

> ﻿كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ [69:24]

நீங்கள் கடந்த காலங்களில் (-நீங்கள் உலகத்தில் இருந்தபோது உங்கள் மறுமை வாழ்க்கைக்காக) முற்படுத்தியவற்றின் (-நன்மைகளின்) காரணமாக இன்பமாக உண்ணுங்கள்! பருகுங்கள்!

### الآية 69:25

> ﻿وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ [69:25]

ஆக, யார் தனது செயலேடு தனது இடது கையில் கொடுக்கப்பட்டாரோ அவர் கூறுவார், எனது செயலேடு எனக்கு கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதே!

### الآية 69:26

> ﻿وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ [69:26]

எனது விசாரணை என்னவாகும் என்று நான் அறியமாட்டேன்.

### الآية 69:27

> ﻿يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ [69:27]

அதுவே (-நான் உலகத்தில் மரணித்த எனது மரணமே எனது காரியத்தை) முடிக்கக்கூடியதாக இருந்திருக்க வேண்டுமே! (இந்த மறுமைக்கு நான் வராமல் இருந்திருக்க வேண்டுமே!)

### الآية 69:28

> ﻿مَا أَغْنَىٰ عَنِّي مَالِيَهْ ۜ [69:28]

எனது செல்வம் எனக்கு பலனளிக்கவில்லை!

### الآية 69:29

> ﻿هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ [69:29]

எனது ஆட்சி அதிகாரம் (-மறுமையை மறுத்து நான் கூறிவந்த எனது ஆதாரம்) என்னை விட்டு அழித்துவிட்டது.

### الآية 69:30

> ﻿خُذُوهُ فَغُلُّوهُ [69:30]

(அல்லாஹ் வானவர்களுக்கு கூறுவான்:) “அவனைப் பிடியுங்கள்! அவனை விலங்கிடுங்கள்!

### الآية 69:31

> ﻿ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ [69:31]

பிறகு, நரகத்தில் அவனை எரித்து பொசுக்குங்கள்!

### الآية 69:32

> ﻿ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ [69:32]

பிறகு, ஒரு சங்கிலியில் -அதன் முழம் எழுபது முழங்களாகும்- அவனைப் புகுத்துங்கள்! (நரக சங்கிலி அவனது பித்தட்டின் வழியாக புகுத்தப்பட்டு மூக்கின் வழியாக வெளியே கொண்டு வரப்படும்.)

### الآية 69:33

> ﻿إِنَّهُ كَانَ لَا يُؤْمِنُ بِاللَّهِ الْعَظِيمِ [69:33]

நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாதவனாக இருந்தான்.

### الآية 69:34

> ﻿وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ [69:34]

இன்னும் ஏழைகளின் உணவிற்கு (-வாழ்வாதாரத்திற்கு பிறரை) தூண்டாதவனாக இருந்தான்.

### الآية 69:35

> ﻿فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ [69:35]

ஆகவே, இன்று அவனுக்கு இங்கு (உதவி செய்கின்ற) நெருக்கமான நண்பர் யாரும் இருக்க மாட்டார்.

### الآية 69:36

> ﻿وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ [69:36]

இன்னும் (அவனுக்கு) உணவும் இருக்காது, சீழ் சலங்களைத் தவிர.

### الآية 69:37

> ﻿لَا يَأْكُلُهُ إِلَّا الْخَاطِئُونَ [69:37]

பாவிகளைத் தவிர (மற்றவர்கள்) அதை சாப்பிட மாட்டார்கள்.

### الآية 69:38

> ﻿فَلَا أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ [69:38]

(இறை வேதத்தை பொய்ப்பிக்கின்றவர்களே!) நீங்கள் பார்க்கின்றவற்றின் மீது(ம்) நான் சத்தியம் செய்கிறேன்!

### الآية 69:39

> ﻿وَمَا لَا تُبْصِرُونَ [69:39]

இன்னும், நீங்கள் பார்க்காதவற்றின் மீது(ம் நான் சத்தியம் செய்கிறேன்!)

### الآية 69:40

> ﻿إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ [69:40]

நிச்சயமாக இது கண்ணியமான தூதருடைய (-அவர் மூலமாக ஓதப்படுகின்ற) வேத வாக்காகும்.

### الآية 69:41

> ﻿وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ۚ قَلِيلًا مَا تُؤْمِنُونَ [69:41]

இது கவிஞரின் வாக்கல்ல. நீங்கள் மிகக் குறைவாகவே நம்பிக்கை கொள்கிறீர்கள்.

### الآية 69:42

> ﻿وَلَا بِقَوْلِ كَاهِنٍ ۚ قَلِيلًا مَا تَذَكَّرُونَ [69:42]

இன்னும், இது ஜோசியக்காரனின் வாக்குமல்ல. மிகக் குறைவாகவே நீங்கள் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.

### الآية 69:43

> ﻿تَنْزِيلٌ مِنْ رَبِّ الْعَالَمِينَ [69:43]

இது அகிலங்களின் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதம் ஆகும்.

### الآية 69:44

> ﻿وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ [69:44]

அவர் நம்மீது (நாம் சொல்லாத) சில பேச்சுகளை இட்டுக்கட்டி பேசினால்

### الآية 69:45

> ﻿لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ [69:45]

நாம் அவரை பலமாக பிடித்திருப்போம்.

### الآية 69:46

> ﻿ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ [69:46]

பிறகு, அவரின் நாடி நரம்பை நாம் வெட்டி இருப்போம்.

### الآية 69:47

> ﻿فَمَا مِنْكُمْ مِنْ أَحَدٍ عَنْهُ حَاجِزِينَ [69:47]

உங்களில் இருந்து எவரும் அவரை விட்டும் (நமது பிடியை) தடுப்பவர்கள் இல்லை.

### الآية 69:48

> ﻿وَإِنَّهُ لَتَذْكِرَةٌ لِلْمُتَّقِينَ [69:48]

நிச்சயமாக இது இறையச்சமுள்ளவர்களுக்கு ஓர் அறிவுரையாகும்.

### الآية 69:49

> ﻿وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنْكُمْ مُكَذِّبِينَ [69:49]

நிச்சயமாக உங்களில் (இந்த வேதத்தை) பொய்ப்பிப்பவர்கள் உள்ளனர் என்பதை நிச்சயமாக நாம் நன்கறிவோம்.

### الآية 69:50

> ﻿وَإِنَّهُ لَحَسْرَةٌ عَلَى الْكَافِرِينَ [69:50]

நிச்சயமாக இது நிராகரிப்பாளர்களுக்கு துக்கமானதுதான்.

### الآية 69:51

> ﻿وَإِنَّهُ لَحَقُّ الْيَقِينِ [69:51]

நிச்சயமாக இது மிக உறுதியான உண்மையாகும்.

### الآية 69:52

> ﻿فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ [69:52]

ஆகவே, மகத்தான உமது இறைவனின் பெயரை துதிப்பீராக!

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/69.md)
- [كل تفاسير سورة الحاقة
](https://quranpedia.net/surah-tafsir/69.md)
- [ترجمات سورة الحاقة
](https://quranpedia.net/translations/69.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية - عمر شريف](https://quranpedia.net/book/27819.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/69/book/27819) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
