---
title: "ترجمة سورة المدّثر - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/74/book/27819.md"
canonical: "https://quranpedia.net/surah/1/74/book/27819"
surah_id: "74"
book_id: "27819"
book_name: "الترجمة التاميلية - عمر شريف"
type: "translation"
---

# ترجمة سورة المدّثر - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/74/book/27819)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة المدّثر - الترجمة التاميلية - عمر شريف (التاميلية) — https://quranpedia.net/surah/1/74/book/27819*.

Translation of Surah المدّثر from "الترجمة التاميلية - عمر شريف" in التاميلية.

### الآية 74:1

> يَا أَيُّهَا الْمُدَّثِّرُ [74:1]

மறுமை நாளின் மீது சத்தியம் செய்கிறேன்!

### الآية 74:2

> ﻿قُمْ فَأَنْذِرْ [74:2]

எழுவீராக! எச்சரிப்பீராக!

### الآية 74:3

> ﻿وَرَبَّكَ فَكَبِّرْ [74:3]

உமது இறைவனை பெருமைப்படுத்துவீராக!

### الآية 74:4

> ﻿وَثِيَابَكَ فَطَهِّرْ [74:4]

உமது ஆடையை சுத்தப்படுத்துவீராக!

### الآية 74:5

> ﻿وَالرُّجْزَ فَاهْجُرْ [74:5]

சிலைகளை விட்டு விலகுவீராக!

### الآية 74:6

> ﻿وَلَا تَمْنُنْ تَسْتَكْثِرُ [74:6]

(உமது அமல்களை) நீர் பெரிதாக கருதி, (உமது இறைவனுக்கு முன்னால் உமது அமல்களை) சொல்லிக் காண்பிக்காதீர்!

### الآية 74:7

> ﻿وَلِرَبِّكَ فَاصْبِرْ [74:7]

உமது இறைவனுக்காக நீர் பொறுமையாக இருப்பீராக!

### الآية 74:8

> ﻿فَإِذَا نُقِرَ فِي النَّاقُورِ [74:8]

எக்காளத்தில் ஊதப்பட்டால்,

### الآية 74:9

> ﻿فَذَٰلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ [74:9]

அது அந்நாளில் மிக சிரமமான ஒரு நாள் ஆகும்.

### الآية 74:10

> ﻿عَلَى الْكَافِرِينَ غَيْرُ يَسِيرٍ [74:10]

அது நிராகரிப்பாளர்களுக்கு இலகுவானதல்ல.

### الآية 74:11

> ﻿ذَرْنِي وَمَنْ خَلَقْتُ وَحِيدًا [74:11]

என்னையும் நான் எவனை தனியாக (-அவனுக்கு எவ்வித செல்வமும் சந்ததியும் இல்லாதவனாக அவனது தாய் வயிற்றில்) படைத்தேனோ அவனையும் விட்டு விடுவீராக!

### الآية 74:12

> ﻿وَجَعَلْتُ لَهُ مَالًا مَمْدُودًا [74:12]

இன்னும், (அவன் பிறந்து ஆளான பிறகு) அவனுக்கு நான் விசாலமான செல்வத்தை ஏற்படுத்திக் கொடுத்தேன்.

### الآية 74:13

> ﻿وَبَنِينَ شُهُودًا [74:13]

இன்னும் (அவனுடன் எப்போதும்) ஆஜராகி இருக்கக்கூடிய ஆண் பிள்ளைகளை (நான் அவனுக்கு கொடுத்தேன்).

### الآية 74:14

> ﻿وَمَهَّدْتُ لَهُ تَمْهِيدًا [74:14]

அவனுக்கு மிகுந்த வசதிகளை ஏற்படுத்தினேன்.

### الآية 74:15

> ﻿ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ [74:15]

பிறகு, (அவனுக்கு இன்னும் பல வசதிகளை) நான் அதிகப்படுத்த வேண்டுமென்று அவன் ஆசைப்படுகின்றான்.

### الآية 74:16

> ﻿كَلَّا ۖ إِنَّهُ كَانَ لِآيَاتِنَا عَنِيدًا [74:16]

அவ்வாறல்ல. நிச்சயமாக அவன் நமது வசனங்களுக்கு முரண்படக் கூடியவனாக (அவற்றை மறுப்பவனாக, அவற்றை மீறுபவனாக) இருந்தான்.

### الآية 74:17

> ﻿سَأُرْهِقُهُ صَعُودًا [74:17]

விரைவில் அவனை மிகப் பெரிய சிரமத்திற்கு நான் நிர்ப்பந்தித்து விடுவேன்.

### الآية 74:18

> ﻿إِنَّهُ فَكَّرَ وَقَدَّرَ [74:18]

நிச்சயமாக அவன் யோசித்தான். இன்னும் திட்டமிட்டான்.

### الآية 74:19

> ﻿فَقُتِلَ كَيْفَ قَدَّرَ [74:19]

அவன் எப்படி திட்டமிட்டான். அவன் அழியட்டும்.

### الآية 74:20

> ﻿ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَ [74:20]

பிறகு, அவன் எப்படி திட்டமிட்டான். அவன் அழியட்டும்.

### الآية 74:21

> ﻿ثُمَّ نَظَرَ [74:21]

பிறகு, அவன் தாமதித்தான்.

### الآية 74:22

> ﻿ثُمَّ عَبَسَ وَبَسَرَ [74:22]

பிறகு, முகம் சுளித்தான். இன்னும் கடுகடுத்தான்.

### الآية 74:23

> ﻿ثُمَّ أَدْبَرَ وَاسْتَكْبَرَ [74:23]

பிறகு, அவன் புறக்கணித்தான்; பெருமையடித்தான்.

### الآية 74:24

> ﻿فَقَالَ إِنْ هَٰذَا إِلَّا سِحْرٌ يُؤْثَرُ [74:24]

அவன் கூறினான்: இது (சூனியக்காரர்களிடமிருந்து) கற்றுக்கொள்ளப்பட்ட சூனியமே தவிர (வேறு) இல்லை.

### الآية 74:25

> ﻿إِنْ هَٰذَا إِلَّا قَوْلُ الْبَشَرِ [74:25]

இது மனிதர்களின் சொல்லே தவிர (வேறு) இல்லை.

### الآية 74:26

> ﻿سَأُصْلِيهِ سَقَرَ [74:26]

“சகர்”நரகத்தில் அவனை நான் விரைவில் பொசுக்குவேன்.

### الآية 74:27

> ﻿وَمَا أَدْرَاكَ مَا سَقَرُ [74:27]

சகர் என்றால் என்ன என்று உமக்குத் தெரியுமா?

### الآية 74:28

> ﻿لَا تُبْقِي وَلَا تَذَرُ [74:28]

அது (தன்னில் யாரையும்) வாழவைக்காது, (செத்துவிடுவதற்கும் யாரையும்) விட்டுவிடாது.

### الآية 74:29

> ﻿لَوَّاحَةٌ لِلْبَشَرِ [74:29]

அது தோல்களை கரித்துவிடும்.

### الآية 74:30

> ﻿عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ [74:30]

அதன் மீது பத்தொன்பது வானவர்கள் (காவலுக்கு) இருப்பார்கள்.

### الآية 74:31

> ﻿وَمَا جَعَلْنَا أَصْحَابَ النَّارِ إِلَّا مَلَائِكَةً ۙ وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةً لِلَّذِينَ كَفَرُوا لِيَسْتَيْقِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَيَزْدَادَ الَّذِينَ آمَنُوا إِيمَانًا ۙ وَلَا يَرْتَابَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْمُؤْمِنُونَ ۙ وَلِيَقُولَ الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ وَالْكَافِرُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَٰذَا مَثَلًا ۚ كَذَٰلِكَ يُضِلُّ اللَّهُ مَنْ يَشَاءُ وَيَهْدِي مَنْ يَشَاءُ ۚ وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ ۚ وَمَا هِيَ إِلَّا ذِكْرَىٰ لِلْبَشَرِ [74:31]

நரகத்தின் காவலாளிகளை வானவர்களாகவே தவிர (வேறு யாரையும்) நாம் ஆக்கவில்லை. நிராகரித்தவர்களுக்கு ஒரு குழப்பமாகவே தவிர அவர்களின் எண்ணிக்கையை நாம் ஆக்கவில்லை. வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதை) உறுதி கொள்ளவேண்டும் என்பதற்காகவும், நம்பிக்கை கொண்டவர்கள் நம்பிக்கையால் அதிகரிப்பதற்காகவும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும் நம்பிக்கையாளர்களும் சந்தேகிக்காமல் இருப்பதற்காகவும் தங்கள் உள்ளங்களில் நோயுள்ளவர்களும் நிராகரிப்பாளர்களும் இதன் மூலம் அல்லாஹ் என்ன உதாரணத்தை நாடுகின்றான் என்று கூறுவதற்காகவும் (அவர்களின் எண்ணிக்கையை நாம் பத்தொன்பதாக ஆக்கினோம்). இவ்வாறுதான், அல்லாஹ் தான் நாடுகின்றவர்களை வழிகெடுக்கின்றான்; தான் நாடுகின்றவர்களை நேர்வழி செலுத்துகின்றான். உமது இறைவனின் இராணுவங்களை அவனைத் தவிர (யாரும்) அறிய மாட்டார்கள். இது (-நரகம்) மனிதர்களுக்கு ஒரு நினைவூட்டலே தவிர (வேறு) இல்லை.

### الآية 74:32

> ﻿كَلَّا وَالْقَمَرِ [74:32]

அவ்வாறல்ல. சந்திரன் மீது சத்தியமாக!

### الآية 74:33

> ﻿وَاللَّيْلِ إِذْ أَدْبَرَ [74:33]

இரவின் மீது சத்தியமாக, அது முடியும் போது!

### الآية 74:34

> ﻿وَالصُّبْحِ إِذَا أَسْفَرَ [74:34]

அதிகாலை மீது சத்தியமாக, அது ஒளி வீசும் போது!

### الآية 74:35

> ﻿إِنَّهَا لَإِحْدَى الْكُبَرِ [74:35]

நிச்சயமாக அது (-நரகம்) மிகப் பெரிய விஷயங்களில் ஒன்றாகும்.

### الآية 74:36

> ﻿نَذِيرًا لِلْبَشَرِ [74:36]

அது (-நரகம்) மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்யக்கூடியதாகும்.

### الآية 74:37

> ﻿لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ [74:37]

உங்களில் யார் (வழிபாட்டில்) முன்னேறுவதற்கு நாடினாரோ அவருக்கு அல்லது (நன்மையில்) பின் தங்கி (பாவத்தில் இருந்து) விடுவதற்கு நாடினாரோ அவருக்கு (இந்த நரகம் எச்சரிக்கை செய்யக்கூடியதாக இருக்கும்).

### الآية 74:38

> ﻿كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ [74:38]

ஒவ்வொரு ஆன்மாவும் தான் செய்ததற்காக பிடிக்கப்படும். (-விசாரிக்கப் பட்டு செயலுக்கு தகுந்த கூலி அதற்கு கொடுக்கப்படும்)

### الآية 74:39

> ﻿إِلَّا أَصْحَابَ الْيَمِينِ [74:39]

வலது பக்கம் உள்ளவர்களைத் தவிர. (அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள்.)

### الآية 74:40

> ﻿فِي جَنَّاتٍ يَتَسَاءَلُونَ [74:40]

அவர்கள் சொர்க்கங்களில் தங்களுக்குள் கேட்டுக் கொள்வார்கள்,

### الآية 74:41

> ﻿عَنِ الْمُجْرِمِينَ [74:41]

பாவிகளைப் பற்றி.

### الآية 74:42

> ﻿مَا سَلَكَكُمْ فِي سَقَرَ [74:42]

(பாவிகளே) உங்களை சகர் நரகத்தில் நுழைத்தது எது?

### الآية 74:43

> ﻿قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ [74:43]

அவர்கள் (-பாவிகள்) கூறுவார்கள்: “தொழுகையாளிகளில் நாங்கள் இருக்கவில்லை.

### الآية 74:44

> ﻿وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ [74:44]

இன்னும் ஏழைகளுக்கு உணவளிப்பவர்களாக நாங்கள் இருக்கவில்லை.

### الآية 74:45

> ﻿وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ [74:45]

வீணான காரியங்களில் ஈடுபடுவோருடன் சேர்ந்து நாங்கள் வீணான காரியங்களில் ஈடுபடுபவர்களாக இருந்தோம்.

### الآية 74:46

> ﻿وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ [74:46]

கூலி (கொடுக்கப்படும்) நாளை பொய்ப்பிப்பவர்களாக நாங்கள் இருந்தோம்.

### الآية 74:47

> ﻿حَتَّىٰ أَتَانَا الْيَقِينُ [74:47]

இறுதியாக, எங்களுக்கு மரணம் வந்தது.

### الآية 74:48

> ﻿فَمَا تَنْفَعُهُمْ شَفَاعَةُ الشَّافِعِينَ [74:48]

பரிந்துரை செய்பவர்களின் பரிந்துரை அவர்களுக்கு பலனளிக்காது.

### الآية 74:49

> ﻿فَمَا لَهُمْ عَنِ التَّذْكِرَةِ مُعْرِضِينَ [74:49]

அவர்களுக்கு என்ன ஆனது, இந்த அறிவுரையை விட்டு புறக்கணித்து செல்கிறார்கள்?

### الآية 74:50

> ﻿كَأَنَّهُمْ حُمُرٌ مُسْتَنْفِرَةٌ [74:50]

பயந்துபோன கழுதைகளைப் போல் அவர்கள் இருக்கின்றனர்.

### الآية 74:51

> ﻿فَرَّتْ مِنْ قَسْوَرَةٍ [74:51]

அவை சிங்கத்தைப் பார்த்து விரண்டோடுகின்றன.

### الآية 74:52

> ﻿بَلْ يُرِيدُ كُلُّ امْرِئٍ مِنْهُمْ أَنْ يُؤْتَىٰ صُحُفًا مُنَشَّرَةً [74:52]

மாறாக, அவர்களில் ஒவ்வொரு மனிதனும் விரிக்கப்பட்ட ஏடுகள் தனக்கு தரப்பட வேண்டும் என்று நாடுகின்றனர்.

### الآية 74:53

> ﻿كَلَّا ۖ بَلْ لَا يَخَافُونَ الْآخِرَةَ [74:53]

அவ்வாறல்ல. (-அவ்வாறு கொடுக்கப்பட்டாலும் அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.) மாறாக, அவர்கள் மறுமையை பயப்படுவதில்லை. (ஆகவேதான், அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.)

### الآية 74:54

> ﻿كَلَّا إِنَّهُ تَذْكِرَةٌ [74:54]

அவ்வாறல்ல. (-இது சூனியமோ மனிதர்களின் கூற்றோ அல்ல. மாறாக,) நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்.

### الآية 74:55

> ﻿فَمَنْ شَاءَ ذَكَرَهُ [74:55]

யார் நாடுகின்றாரோ அவர் இதன் மூலம் உபதேசம் பெறுவார்.

### الآية 74:56

> ﻿وَمَا يَذْكُرُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ ۚ هُوَ أَهْلُ التَّقْوَىٰ وَأَهْلُ الْمَغْفِرَةِ [74:56]

அல்லாஹ் நாடினால் தவிர அவர்கள் உபதேசம் பெறமாட்டார்கள். அவன்தான் (படைப்புகள் அவனை) அஞ்சுவதற்கும் (படைப்புகளை அவன்) மன்னிப்பதற்கும் மிகத் தகுதியானவன்.

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/74.md)
- [كل تفاسير سورة المدّثر
](https://quranpedia.net/surah-tafsir/74.md)
- [ترجمات سورة المدّثر
](https://quranpedia.net/translations/74.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية - عمر شريف](https://quranpedia.net/book/27819.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/74/book/27819) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
