---
title: "ترجمة سورة القيامة - الترجمة التاميلية (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/75/book/1991.md"
canonical: "https://quranpedia.net/surah/1/75/book/1991"
surah_id: "75"
book_id: "1991"
book_name: "الترجمة التاميلية"
author: "عبد الحميد الباقوي"
type: "translation"
---

# ترجمة سورة القيامة - الترجمة التاميلية (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/75/book/1991)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة القيامة - الترجمة التاميلية (التاميلية) — https://quranpedia.net/surah/1/75/book/1991*.

Translation of Surah القيامة from "الترجمة التاميلية" in التاميلية.

### الآية 75:1

> لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ [75:1]

1\. மறுமை நாளின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.

### الآية 75:2

> ﻿وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ [75:2]

2\. (குற்றம் செய்தவனை) நிந்திக்கும் அவனுடைய மனசாட்சியின் மீதும் நான் சத்தியம் செய்கிறேன்.

### الآية 75:3

> ﻿أَيَحْسَبُ الْإِنْسَانُ أَلَّنْ نَجْمَعَ عِظَامَهُ [75:3]

3\. (இறந்து உக்கி மண்ணாய்ப் போன) அவனுடைய எலும்புகளை, நாம் ஒன்று சேர்க்கமாட்டோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டிருக்கிறானா?

### الآية 75:4

> ﻿بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَنْ نُسَوِّيَ بَنَانَهُ [75:4]

4\. அவ்வாறல்ல! அவனுடைய (சரீர) அமைப்பை (இறந்த பின்னரும் முன்னிருந்தபடி) சரிப்படுத்த நாம் ஆற்றலுடையோம்.

### الآية 75:5

> ﻿بَلْ يُرِيدُ الْإِنْسَانُ لِيَفْجُرَ أَمَامَهُ [75:5]

5\. எனினும், மனிதன் இறைவன் முன்பாகவே குற்றம் செய்யக் கருதுகிறான்.

### الآية 75:6

> ﻿يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ [75:6]

6\. (பரிகாசமாக) ‘‘மறுமை நாள் எப்பொழுது வரும்'' என்று கேட்கிறான்.

### الآية 75:7

> ﻿فَإِذَا بَرِقَ الْبَصَرُ [75:7]

7\. அது (வரும்) சமயம் பார்வை தட்டழிந்து விடும்,

### الآية 75:8

> ﻿وَخَسَفَ الْقَمَرُ [75:8]

8\. சந்திரனின் பிரகாசம் மங்கி விடும்,

### الآية 75:9

> ﻿وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ [75:9]

9\. (அதுநாள் வரை பிரிந்திருந்த) சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டு விடும்(போது),

### الآية 75:10

> ﻿يَقُولُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ [75:10]

10\. அந்நாளில் (தப்பித்துக்கொள்ள) “எங்கு ஓடுவது'' என்று மனிதன் கேட்பான்.

### الآية 75:11

> ﻿كَلَّا لَا وَزَرَ [75:11]

11\. ‘‘முடியவே முடியாது. தப்ப இடமில்லை'' (என்று கூறப்படும்).

### الآية 75:12

> ﻿إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ [75:12]

12\. (நபியே!) அந்நாளில் உமது இறைவனிடமே (அனைவரும்) நிற்க வேண்டியதிருக்கிறது.

### الآية 75:13

> ﻿يُنَبَّأُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ [75:13]

13\. மனிதன், முன் பின் செய்த பாவங்களைப் பற்றி அந்நாளில் அவனுக்கு அறிவுறுத்தப்படும்.

### الآية 75:14

> ﻿بَلِ الْإِنْسَانُ عَلَىٰ نَفْسِهِ بَصِيرَةٌ [75:14]

14\. தவிர, ஒவ்வொரு மனிதனும் தன் நிலைமையைத் தானாகவும் அறிந்துகொள்வான்.

### الآية 75:15

> ﻿وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُ [75:15]

15\. ஆகவே, அவன் (தன் குற்றங்களுக்கு) எவ்வளவு புகல்களைக் கூறிய போதிலும் (அது அங்கீகரிக்கப்படாது).

### الآية 75:16

> ﻿لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ [75:16]

16\. (நபியே! வஹ்யி மூலம் ஜிப்ரயீல் ஓதிக்காண்பிக்கும் வசனங்கள் தவறி விடுமோ என்று பயந்து, அவர் ஓதி முடிப்பதற்கு முன்னர்) நீர் அவசரப்பட்டு அதை ஓத உமது நாவை அசைக்காதீர்.

### الآية 75:17

> ﻿إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ [75:17]

17\. ஏனென்றால், அதை ஒன்று சேர்த்து (நீர்) ஓதும்படி செய்வது நிச்சயமாக நம்மீதுள்ள கடமையாகும்.

### الآية 75:18

> ﻿فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ [75:18]

18\. ஆகவே, (ஜிப்ரயீல் மூலம்) அதை நாம் (உமக்கு) ஓதிக்காண்பித்தால், (அவர் ஓதி முடித்த பின்னர்) அவ்வாறே அதை நீர் பின்தொடர்ந்து ஓதுவீராக.

### الآية 75:19

> ﻿ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ [75:19]

19\. பின்னர், அதை விவரித்துக் கூறுவதும் நம்மீதுள்ள கடமையாகும்.

### الآية 75:20

> ﻿كَلَّا بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ [75:20]

20\. எனினும் (மனிதர்களே!) நீங்கள் (அவசரமான) உலக வாழ்க்கையைத்தான் விரும்புகிறீர்கள்.

### الآية 75:21

> ﻿وَتَذَرُونَ الْآخِرَةَ [75:21]

21\. (ஆதலால்தான், இம்மையை விரும்பி) மறுமையை நீங்கள் விட்டு விடுகிறீர்கள்.

### الآية 75:22

> ﻿وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ [75:22]

22\. அந்நாளில் சில(ருடைய) முகங்கள் மிக்க ஒளிவுடன் மகிழ்ச்சியுடையவையாக இருக்கும்.

### الآية 75:23

> ﻿إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ [75:23]

23\. (அவை) தங்கள் இறைவனை நோக்கிய வண்ணமாக இருக்கும்.

### الآية 75:24

> ﻿وَوُجُوهٌ يَوْمَئِذٍ بَاسِرَةٌ [75:24]

24\. வேறு சில(ருடைய) முகங்களோ அந்நாளில் (துக்கத்தால்) வாடியவையாக இருக்கும்.

### الآية 75:25

> ﻿تَظُنُّ أَنْ يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ [75:25]

25\. (பாவச் சுமையின் காரணமாகத்) தங்கள் இடுப்பு முறிந்துவிடுமோ என்று எண்ணி(ப் பயந்து) கொண்டிருப்பார்கள்.

### الآية 75:26

> ﻿كَلَّا إِذَا بَلَغَتِ التَّرَاقِيَ [75:26]

26\. எனினும், (எவனேனும் நோய்வாய்ப்பட்டு, அவனின்) உயிர் தொண்டைக் குழியை அடைந்துவிட்டால்,

### الآية 75:27

> ﻿وَقِيلَ مَنْ ۜ رَاقٍ [75:27]

27\. (அவனுக்குச் சமீபத்தில் இருப்பவர்கள் அவனைச் சுகமாக்க) மந்திரிப்பவன் யார்? (எங்கிருக்கிறான்?) என்று கேட்கின்றனர்.

### الآية 75:28

> ﻿وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ [75:28]

28\. எனினும், அவனோ நிச்சயமாக இதுதான் (தன்) பிரிவினை என்பதை (உறுதியாக) அறிந்துகொள்கிறான்.

### الآية 75:29

> ﻿وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ [75:29]

29\. (அவனுடைய) கெண்டைக்கால், கெண்டைக் காலோடு பின்னிக் கொள்ளும்.

### الآية 75:30

> ﻿إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ [75:30]

30\. அச்சமயம், அவன் (காரியம் முடிவு பெற்று) உமது இறைவன் பக்கம் ஓட்டப்பட்டு விடுகிறான்.

### الآية 75:31

> ﻿فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ [75:31]

31\. (அவனோ அல்லாஹ்வுடைய வசனங்களை) உண்மையாக்கவுமில்லை; தொழவுமில்லை.

### الآية 75:32

> ﻿وَلَٰكِنْ كَذَّبَ وَتَوَلَّىٰ [75:32]

32\. ஆயினும் (அவன் அவற்றைப்) பொய்யாக்கி வைத்து(த் தொழாதும்) விலகிக்கொண்டான்.

### الآية 75:33

> ﻿ثُمَّ ذَهَبَ إِلَىٰ أَهْلِهِ يَتَمَطَّىٰ [75:33]

33\. பின்னர், கர்வம்கொண்டு தன் குடும்பத்துடன் (தன் வீட்டிற்குச்) சென்று விட்டான்.

### الآية 75:34

> ﻿أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ [75:34]

34\. (மனிதனே!) உனக்குக் கேடுதான்; மேலும் கேடுதான்!

### الآية 75:35

> ﻿ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ [75:35]

35\. பின்னர், உனக்குக் கேடுதான்! மேலும் கேடுதான் (உனக்கு)!

### الآية 75:36

> ﻿أَيَحْسَبُ الْإِنْسَانُ أَنْ يُتْرَكَ سُدًى [75:36]

36\. (ஒரு கேள்வியும் தம்மிடம் கேட்காது) சும்மா விட்டு விடப்படுவோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டானா?

### الآية 75:37

> ﻿أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَىٰ [75:37]

37\. அவன் (கர்ப்பத்தில்) செலுத்தப்பட்ட ஓர் இந்திரியத் துளியாக இருக்க வில்லையா?

### الآية 75:38

> ﻿ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ [75:38]

38\. (இந்திரியமாக இருந்த) பின்னர், அவன் கருவாக மாறினான் (அவனை) அல்லாஹ்தான் படைத்து முழுமையான மனிதனாக ஆக்கிவைத்தான்.

### الآية 75:39

> ﻿فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَىٰ [75:39]

39\. ஆண், பெண் ஜோடிகளையும் அதிலிருந்து உற்பத்தி செய்கிறான்.

### الآية 75:40

> ﻿أَلَيْسَ ذَٰلِكَ بِقَادِرٍ عَلَىٰ أَنْ يُحْيِيَ الْمَوْتَىٰ [75:40]

40\. (இவற்றையெல்லாம் செய்த) அவன் மரணித்தவர்களை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவனாக இல்லையா?

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/75.md)
- [كل تفاسير سورة القيامة
](https://quranpedia.net/surah-tafsir/75.md)
- [ترجمات سورة القيامة
](https://quranpedia.net/translations/75.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية](https://quranpedia.net/book/1991.md)
- [المؤلف: عبد الحميد الباقوي](https://quranpedia.net/person/1766.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/75/book/1991) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
