---
title: "ترجمة سورة المرسلات - Jan Trust Foundation - Tamil translation (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/77/book/13653.md"
canonical: "https://quranpedia.net/surah/1/77/book/13653"
surah_id: "77"
book_id: "13653"
book_name: "Jan Trust Foundation - Tamil translation"
type: "translation"
---

# ترجمة سورة المرسلات - Jan Trust Foundation - Tamil translation (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/77/book/13653)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة المرسلات - Jan Trust Foundation - Tamil translation (التاميلية) — https://quranpedia.net/surah/1/77/book/13653*.

Translation of Surah المرسلات from "Jan Trust Foundation - Tamil translation" in التاميلية.

### الآية 77:1

> وَالْمُرْسَلَاتِ عُرْفًا [77:1]

---

وَٱلۡمُرۡسَلَٰتِ عُرۡفٗا


தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக

---

### الآية 77:2

> ﻿فَالْعَاصِفَاتِ عَصْفًا [77:2]

فَٱلۡعَٰصِفَٰتِ عَصۡفٗا


வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-

---

### الآية 77:3

> ﻿وَالنَّاشِرَاتِ نَشْرًا [77:3]

وَٱلنَّـٰشِرَٰتِ نَشۡرٗا


(மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-

---

### الآية 77:4

> ﻿فَالْفَارِقَاتِ فَرْقًا [77:4]

فَٱلۡفَٰرِقَٰتِ فَرۡقٗا


(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)-

---

### الآية 77:5

> ﻿فَالْمُلْقِيَاتِ ذِكْرًا [77:5]

فَٱلۡمُلۡقِيَٰتِ ذِكۡرًا


(இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)-

---

### الآية 77:6

> ﻿عُذْرًا أَوْ نُذْرًا [77:6]

عُذۡرًا أَوۡ نُذۡرًا


(அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்)

---

### الآية 77:7

> ﻿إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌ [77:7]

إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٞ


நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.

---

### الآية 77:8

> ﻿فَإِذَا النُّجُومُ طُمِسَتْ [77:8]

فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ


இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது-

---

### الآية 77:9

> ﻿وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ [77:9]

وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتۡ


மேலும், வானம் பிளக்கப்படும் போது-

---

### الآية 77:10

> ﻿وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ [77:10]

وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ


அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது-

---

### الآية 77:11

> ﻿وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ [77:11]

وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ


மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது-

---

### الآية 77:12

> ﻿لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ [77:12]

لِأَيِّ يَوۡمٍ أُجِّلَتۡ


எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?

---

### الآية 77:13

> ﻿لِيَوْمِ الْفَصْلِ [77:13]

لِيَوۡمِ ٱلۡفَصۡلِ


தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான்.

---

### الآية 77:14

> ﻿وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ [77:14]

وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلۡفَصۡلِ


மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?

---

### الآية 77:15

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:15]

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ


(நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்.

---

### الآية 77:16

> ﻿أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ [77:16]

أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ


முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா?

---

### الآية 77:17

> ﻿ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ [77:17]

ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡأٓخِرِينَ


பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம்.

---

### الآية 77:18

> ﻿كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ [77:18]

كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ


குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்).

---

### الآية 77:19

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:19]

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ


பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

---

### الآية 77:20

> ﻿أَلَمْ نَخْلُقْكُمْ مِنْ مَاءٍ مَهِينٍ [77:20]

أَلَمۡ نَخۡلُقكُّم مِّن مَّآءٖ مَّهِينٖ


அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?

---

### الآية 77:21

> ﻿فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَكِينٍ [77:21]

فَجَعَلۡنَٰهُ فِي قَرَارٖ مَّكِينٍ


பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம்.

---

### الآية 77:22

> ﻿إِلَىٰ قَدَرٍ مَعْلُومٍ [77:22]

إِلَىٰ قَدَرٖ مَّعۡلُومٖ


ஒரு குறிப்பிடட (கால) அளவு வரை.

---

### الآية 77:23

> ﻿فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ [77:23]

فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَٰدِرُونَ


இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர்.

---

### الآية 77:24

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:24]

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ


பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

---

### الآية 77:25

> ﻿أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا [77:25]

أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ كِفَاتًا


பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?

---

### الآية 77:26

> ﻿أَحْيَاءً وَأَمْوَاتًا [77:26]

أَحۡيَآءٗ وَأَمۡوَٰتٗا


உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது).

---

### الآية 77:27

> ﻿وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُمْ مَاءً فُرَاتًا [77:27]

وَجَعَلۡنَا فِيهَا رَوَٰسِيَ شَٰمِخَٰتٖ وَأَسۡقَيۡنَٰكُم مَّآءٗ فُرَاتٗا


அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம்.

---

### الآية 77:28

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:28]

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ


பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

---

### الآية 77:29

> ﻿انْطَلِقُوا إِلَىٰ مَا كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ [77:29]

ٱنطَلِقُوٓاْ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ


"நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன் பால் நடப்பீர்களாக" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

---

### الآية 77:30

> ﻿انْطَلِقُوا إِلَىٰ ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ [77:30]

ٱنطَلِقُوٓاْ إِلَىٰ ظِلّٖ ذِي ثَلَٰثِ شُعَبٖ


மூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக.

---

### الآية 77:31

> ﻿لَا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ [77:31]

لَّا ظَلِيلٖ وَلَا يُغۡنِي مِنَ ٱللَّهَبِ


(அது) நிழலளிப்பதுமல்ல, (நரகின்) கடுந்தழலை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல.

---

### الآية 77:32

> ﻿إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ [77:32]

إِنَّهَا تَرۡمِي بِشَرَرٖ كَٱلۡقَصۡرِ


நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும்.

---

### الآية 77:33

> ﻿كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ [77:33]

كَأَنَّهُۥ جِمَٰلَتٞ صُفۡرٞ


நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல் இருக்கும்.

---

### الآية 77:34

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:34]

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ


பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

---

### الآية 77:35

> ﻿هَٰذَا يَوْمُ لَا يَنْطِقُونَ [77:35]

هَٰذَا يَوۡمُ لَا يَنطِقُونَ


இது, அவர்கள் (எதுவும்) பேச முடியாத நாள்.

---

### الآية 77:36

> ﻿وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ [77:36]

وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَعۡتَذِرُونَ


அன்றியும் (தப்புவிப்பதற்காகப்) புகழ் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

---

### الآية 77:37

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:37]

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ


பொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

---

### الآية 77:38

> ﻿هَٰذَا يَوْمُ الْفَصْلِ ۖ جَمَعْنَاكُمْ وَالْأَوَّلِينَ [77:38]

هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَٰكُمۡ وَٱلۡأَوَّلِينَ


இது தீர்ப்புக்குரிய நாளாகும். உங்களையும், (உங்களுக்கு) முன் இருந்தோரையும் நாம் ஒன்று சேர்க்கும் (நாள்).

---

### الآية 77:39

> ﻿فَإِنْ كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ [77:39]

فَإِن كَانَ لَكُمۡ كَيۡدٞ فَكِيدُونِ


எனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால், சூழ்ச்சி செய்து பாருங்கள்.

---

### الآية 77:40

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:40]

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ


பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

---

### الآية 77:41

> ﻿إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ [77:41]

إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي ظِلَٰلٖ وَعُيُونٖ


நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள்.

---

### الآية 77:42

> ﻿وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ [77:42]

وَفَوَٰكِهَ مِمَّا يَشۡتَهُونَ


இன்னும், அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு.

---

### الآية 77:43

> ﻿كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ [77:43]

كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ


"நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள் இன்னும் பருகுங்கள்" (என்று கூறப்படும்).

---

### الآية 77:44

> ﻿إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ [77:44]

إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ


நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம்.

---

### الآية 77:45

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:45]

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ


பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

---

### الآية 77:46

> ﻿كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُمْ مُجْرِمُونَ [77:46]

كُلُواْ وَتَمَتَّعُواْ قَلِيلًا إِنَّكُم مُّجۡرِمُونَ


(பொய்யாக்குவோரே உலகில்) இன்னும் கொஞ்ச (கால)ம் நீங்கள் புசித்துக் கொண்டும், சுகித்துக்கொண்டும் இருங்கள் - நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே.

---

### الآية 77:47

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:47]

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ


பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

---

### الآية 77:48

> ﻿وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ [77:48]

وَإِذَا قِيلَ لَهُمُ ٱرۡكَعُواْ لَا يَرۡكَعُونَ


'நீங்கள் குனிந்து வணங்குங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள்.

---

### الآية 77:49

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:49]

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ


பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

---

### الآية 77:50

> ﻿فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ [77:50]

فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ


எனவே, இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்?

---

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/77.md)
- [كل تفاسير سورة المرسلات
](https://quranpedia.net/surah-tafsir/77.md)
- [ترجمات سورة المرسلات
](https://quranpedia.net/translations/77.md)
- [صفحة الكتاب: Jan Trust Foundation - Tamil translation](https://quranpedia.net/book/13653.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/77/book/13653) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
