---
title: "ترجمة سورة المرسلات - الترجمة التاميلية (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/77/book/1991.md"
canonical: "https://quranpedia.net/surah/1/77/book/1991"
surah_id: "77"
book_id: "1991"
book_name: "الترجمة التاميلية"
author: "عبد الحميد الباقوي"
type: "translation"
---

# ترجمة سورة المرسلات - الترجمة التاميلية (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/77/book/1991)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة المرسلات - الترجمة التاميلية (التاميلية) — https://quranpedia.net/surah/1/77/book/1991*.

Translation of Surah المرسلات from "الترجمة التاميلية" in التاميلية.

### الآية 77:1

> وَالْمُرْسَلَاتِ عُرْفًا [77:1]

1\. நன்மைக்காக அனுப்பப்படுபவர்கள் மீது சத்தியமாக!

### الآية 77:2

> ﻿فَالْعَاصِفَاتِ عَصْفًا [77:2]

2\. இன்னும் அதி வேகமாகச் செல்லும் (புயல்) காற்றுகள் மீது சத்தியமாக!

### الآية 77:3

> ﻿وَالنَّاشِرَاتِ نَشْرًا [77:3]

3.(மேகங்களை பல திசைகளில்) பரப்பிவிடுபவர்கள் மீதும் சத்தியமாக!

### الآية 77:4

> ﻿فَالْفَارِقَاتِ فَرْقًا [77:4]

4\. (உண்மை, பொய்களுக்கிடையில்) தெளிவாகப் பிரித்தறிவிப்பவை(யான வேதங்கள்) மீதும் சத்தியமாக!

### الآية 77:5

> ﻿فَالْمُلْقِيَاتِ ذِكْرًا [77:5]

5, 6. மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!

### الآية 77:6

> ﻿عُذْرًا أَوْ نُذْرًا [77:6]

5, 6. மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!

### الآية 77:7

> ﻿إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌ [77:7]

7\. நிச்சயமாக உங்களுக்குப் பயமுறுத்தப்படும் (நாள்) வந்தே தீரும்.

### الآية 77:8

> ﻿فَإِذَا النُّجُومُ طُمِسَتْ [77:8]

8\. அந்நேரத்தில், நட்சத்திரங்கள் அழிக்கப்பட்டுவிடும்.

### الآية 77:9

> ﻿وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ [77:9]

9\. அப்போது வானம் திறக்கப்பட்டுவிடும்.

### الآية 77:10

> ﻿وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ [77:10]

10\. அப்போது மலைகள் (தூசிகளைப் போல்) தவிடு பொடியாக்கப்படும்.

### الآية 77:11

> ﻿وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ [77:11]

11\. அப்போது தூதர்கள் விசாரணைக்காகக் கொண்டு வரப்படுவார்கள்.

### الآية 77:12

> ﻿لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ [77:12]

12\. (இவை எல்லாம்) எதுவரை பிற்படுத்தப்பட்டிருக்கின்றன (என்பதை நபியே! நீர் அறிவீரா)?

### الآية 77:13

> ﻿لِيَوْمِ الْفَصْلِ [77:13]

13\. தீர்ப்பு கூறப்படும் நாள் வரைதான்!

### الآية 77:14

> ﻿وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ [77:14]

14\. (நபியே!) தீர்ப்பு கூறப்படும் நாளின் தன்மையை நீர் அறிவீரா?.

### الآية 77:15

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:15]

15\. (நம் வசனங்களைப்) பொய்யாக்கியவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

### الآية 77:16

> ﻿أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ [77:16]

16\. (அதைப் பொய்யாக்கிக் கொண்டிருந்த) முன்னிருந்தவர்களையும் நாம் அழித்துவிடவில்லையா?

### الآية 77:17

> ﻿ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ [77:17]

17\. அதற்கு பின்னுள்ளவர்களையும் (அழிந்து போன அவர்களைப்) பின்தொடரும்படி நாம் செய்வோம்,

### الآية 77:18

> ﻿كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ [77:18]

18\. (அவர்களையும் அழித்தோம்.) அவ்வாறே, இக்குற்றவாளிகளையும் நாம் (அழிந்துபோகச்) செய்வோம்.

### الآية 77:19

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:19]

19\. ஆகவே, (நம் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

### الآية 77:20

> ﻿أَلَمْ نَخْلُقْكُمْ مِنْ مَاءٍ مَهِينٍ [77:20]

20\. ஓர் அற்பத் துளியைக் கொண்டு நாம் உங்களைப் படைக்கவில்லையா?

### الآية 77:21

> ﻿فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَكِينٍ [77:21]

21, 22. அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம்,

### الآية 77:22

> ﻿إِلَىٰ قَدَرٍ مَعْلُومٍ [77:22]

21, 22. அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம்,

### الآية 77:23

> ﻿فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ [77:23]

23\. பின்னர் நாமே அதை (மனிதனாகவும்) நிர்ணயம் செய்தோம். நிர்ணயம் செய்பவர்களில் நாமே மிக மேலானோர்.

### الآية 77:24

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:24]

24\. ஆகவே, (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

### الآية 77:25

> ﻿أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا [77:25]

25, 26. பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா?

### الآية 77:26

> ﻿أَحْيَاءً وَأَمْوَاتًا [77:26]

25, 26. பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா?

### الآية 77:27

> ﻿وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُمْ مَاءً فُرَاتًا [77:27]

27\. அதில் உயர்ந்த மலைகளையும் நாம் அமைத்து (அவற்றிலிருந்து) மதுரமான நீரையும் உங்களுக்குப் புகட்டுகிறோம்.

### الآية 77:28

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:28]

28\. (நம் அருட்கொடைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

### الآية 77:29

> ﻿انْطَلِقُوا إِلَىٰ مَا كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ [77:29]

29\. ‘‘எ(ந்த நரகத்)தை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ, அதன் பாலே நீங்கள் செல்லுங்கள்.

### الآية 77:30

> ﻿انْطَلِقُوا إِلَىٰ ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ [77:30]

30\. மூன்று கிளைகளையுடைய (நரகத்தின்) புகையின் நிழலின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்'' (என்றும் கூறப்படும்).

### الآية 77:31

> ﻿لَا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ [77:31]

31\. அதில் (குளிர்ச்சிதரும்) நிழலுமிராது; உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய எதுவுமிராது.

### الآية 77:32

> ﻿إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ [77:32]

32\. (எனினும்,) பெரிய மாளிகைகளைப்போன்ற நெருப்புக் கங்குகளை அது கக்கிக் கொண்டே இருக்கும்.

### الآية 77:33

> ﻿كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ [77:33]

33\. அவை மஞ்சள் நிறமுள்ள (பெரிய) ஒட்டகங்களைப் போல் தோன்றும்.

### الآية 77:34

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:34]

34\. (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

### الآية 77:35

> ﻿هَٰذَا يَوْمُ لَا يَنْطِقُونَ [77:35]

35\. இது ஒரு நாளாகும். (இந்நாளில் எதுவுமே) அவர்கள் பேச சக்தி பெறமாட்டார்கள்.

### الآية 77:36

> ﻿وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ [77:36]

36\. மேலும், புகல் கூறவும் அவர்களுக்கு அனுமதி கிடைக்காது.

### الآية 77:37

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:37]

37\. (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

### الآية 77:38

> ﻿هَٰذَا يَوْمُ الْفَصْلِ ۖ جَمَعْنَاكُمْ وَالْأَوَّلِينَ [77:38]

38\. இதுவே தீர்ப்பு நாள். உங்களையும், (உங்களுக்கு) முன்னுள்ளோரையும் (விசாரணைக்காக) நாம் ஒன்று சேர்த்துவிடுவோம்.

### الآية 77:39

> ﻿فَإِنْ كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ [77:39]

39\. ஆகவே, (அந்நாளில் அவர்களை நோக்கி, ‘‘தப்பித்துக் கொள்ள) நீங்கள் ஏதும் சூழ்ச்சி செய்யக் கூடுமானால் சூழ்ச்சி செய்து பாருங்கள்'' (என்றும் கூறப்படும்).

### الآية 77:40

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:40]

40\. (இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

### الآية 77:41

> ﻿إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ [77:41]

41\. நிச்சயமாக இறையச்சமுடையவர்கள், நிச்சயமாக (அந்நாளில் சொர்க்கத்திலுள்ள மரங்களின்) நிழல்களிலும் (அதன் அடியில் உள்ள) ஊற்றுக்களிலும் இருப்பார்கள்.

### الآية 77:42

> ﻿وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ [77:42]

42\. அவர்கள் விரும்பிய கனிவர்க்கங்கள் அவர்களுக்குண்டு.

### الآية 77:43

> ﻿كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ [77:43]

43\. (அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் செய்து கொண்டிருந்த நன்மையின் காரணமாக, மிக தாராளமாக இவற்றைப் புசித்துப் பருகிக் கொண்டிருங்கள்'' (என்று கூறப்படும்).

### الآية 77:44

> ﻿إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ [77:44]

44\. இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுப்போம்.

### الآية 77:45

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:45]

45\. (இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

### الآية 77:46

> ﻿كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُمْ مُجْرِمُونَ [77:46]

46\. (இதைப் பொய்யாக்குபவர்களே! இம்மையில்) நீங்கள் புசித்துச் சிறிது சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள்தான்.

### الآية 77:47

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:47]

47\. (இறைவனின் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

### الآية 77:48

> ﻿وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ [77:48]

48\. அவர்களை நோக்கி, ‘‘(இறைவன் முன்) நீங்கள் குனிந்து வணங்குங்கள்'' என்று கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கவே மாட்டார்கள்.

### الآية 77:49

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:49]

49\. (அவனுடைய இக்கட்டளையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

### الآية 77:50

> ﻿فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ [77:50]

50\. இதற்குப் பின்னர், எவ்விஷயத்தைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்களோ!

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/77.md)
- [كل تفاسير سورة المرسلات
](https://quranpedia.net/surah-tafsir/77.md)
- [ترجمات سورة المرسلات
](https://quranpedia.net/translations/77.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية](https://quranpedia.net/book/1991.md)
- [المؤلف: عبد الحميد الباقوي](https://quranpedia.net/person/1766.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/77/book/1991) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
