---
title: "ترجمة سورة المرسلات - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/77/book/27819.md"
canonical: "https://quranpedia.net/surah/1/77/book/27819"
surah_id: "77"
book_id: "27819"
book_name: "الترجمة التاميلية - عمر شريف"
type: "translation"
---

# ترجمة سورة المرسلات - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/77/book/27819)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة المرسلات - الترجمة التاميلية - عمر شريف (التاميلية) — https://quranpedia.net/surah/1/77/book/27819*.

Translation of Surah المرسلات from "الترجمة التاميلية - عمر شريف" in التاميلية.

### الآية 77:1

> وَالْمُرْسَلَاتِ عُرْفًا [77:1]

எதைப் பற்றி (அவர்கள் தங்களுக்குள்) விசாரித்துக் கொள்கிறார்கள்?

### الآية 77:2

> ﻿فَالْعَاصِفَاتِ عَصْفًا [77:2]

அதிவேகமாக வீசுகின்ற புயல்காற்றுகள் மீது சத்தியமாக!

### الآية 77:3

> ﻿وَالنَّاشِرَاتِ نَشْرًا [77:3]

(மேகங்களை பல திசைகளில்) பரப்புகின்ற காற்றுகள் மீது சத்தியமாக!

### الآية 77:4

> ﻿فَالْفَارِقَاتِ فَرْقًا [77:4]

(உண்மைக்கும் பொய்யுக்கும் இடையில்) தெளிவாக பிரித்துவிடக் கூடியவற்றின் மீது (-இறைவசனங்கள் மீது) சத்தியமாக!

### الآية 77:5

> ﻿فَالْمُلْقِيَاتِ ذِكْرًا [77:5]

(நபிமார்கள் மீது வேதங்களை) இறக்குகின்ற (வான)வர்கள் மீது சத்தியமாக,

### الآية 77:6

> ﻿عُذْرًا أَوْ نُذْرًا [77:6]

(அல்லாஹ்வின் புறத்தில் இருந்து) ஒரு காரணமாக அல்லது எச்சரிக்கையாக இருப்பதற்கு (வேதங்களை அவர்கள் இறக்குகிறார்கள்)!

### الآية 77:7

> ﻿إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌ [77:7]

நிச்சயமாக நீங்கள் எச்சரிக்கப்படுவது நிகழ்ந்தே தீரும்.

### الآية 77:8

> ﻿فَإِذَا النُّجُومُ طُمِسَتْ [77:8]

நட்சத்திரங்கள் ஒளி மங்கிவிடும்போது,

### الآية 77:9

> ﻿وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ [77:9]

வானம் பிளக்கப்படும் போது,

### الآية 77:10

> ﻿وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ [77:10]

மலைகள் சுக்கு நூறாக பொசுக்கப்படும் போது,

### الآية 77:11

> ﻿وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ [77:11]

தூதர்கள் (மறுமையில்) ஒன்று சேர்க்கப்படும்போது,

### الآية 77:12

> ﻿لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ [77:12]

எந்த நாளுக்காக அவர்கள் தாமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்!?

### الآية 77:13

> ﻿لِيَوْمِ الْفَصْلِ [77:13]

(ஆம், மறுமையின்) தீர்ப்பு நாளுக்காக (அவர்கள் தாமதிக்கப்பட்டுள்ளார்கள்).

### الآية 77:14

> ﻿وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ [77:14]

தீர்ப்பு நாள் என்னவென்று உமக்குத் தெரியுமா?

### الآية 77:15

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:15]

பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

### الآية 77:16

> ﻿أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ [77:16]

(நிராகரித்த) முன்னோர்களை நாம் அழிக்கவில்லையா?

### الآية 77:17

> ﻿ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ [77:17]

பிறகு, (அவர்களைப்போன்று நிராகரித்த) பின்னோர்களை(யும் அழிவில்) அவர்களுக்கு பின்தொடர வைத்தோம்.

### الآية 77:18

> ﻿كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ [77:18]

இவ்வாறுதான் குற்றவாளிகளுக்கு நாம் செய்வோம்.

### الآية 77:19

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:19]

பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

### الآية 77:20

> ﻿أَلَمْ نَخْلُقْكُمْ مِنْ مَاءٍ مَهِينٍ [77:20]

பலவீனமான ஒரு நீரிலிருந்து நாம் உங்களை படைக்கவில்லையா?

### الآية 77:21

> ﻿فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَكِينٍ [77:21]

உறுதியான ஓர் இடத்தில் நாம் அதை வைத்தோம்,

### الآية 77:22

> ﻿إِلَىٰ قَدَرٍ مَعْلُومٍ [77:22]

குறிப்பிட்ட ஒரு தவணை வரை.

### الآية 77:23

> ﻿فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ [77:23]

நாம் திட்ட மிட்டோம். நாமே சிறந்த திட்டமிடுபவர்கள்.

### الآية 77:24

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:24]

பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

### الآية 77:25

> ﻿أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا [77:25]

பூமியை ஒன்று சேர்க்கக்கூடியதாக (-மக்கள் அனைவரையும் சுமக்கக்கூடிய ஒரு பாத்திரமாக) நாம் ஆக்கவில்லையா?

### الآية 77:26

> ﻿أَحْيَاءً وَأَمْوَاتًا [77:26]

(பூமி தன் முதுகின் மேல்) உயிருள்ளவர்களையும் (தன் வயிற்றுக்குள்) இறந்தவர்களையும் (ஒன்று சேர்க்கக்கூடியதாக -அவர்கள் அனைவரையும் சுமக்கக்கூடிய ஒரு பாத்திரமாக நாம் ஆக்கி இருக்கின்றோம்.)

### الآية 77:27

> ﻿وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُمْ مَاءً فُرَاتًا [77:27]

அதில் மிக பிரமாண்டமான மலைகளை நாம் ஆக்கினோம். உங்களுக்கு மதுரமான நீரை நாம் புகட்டினோம்.

### الآية 77:28

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:28]

பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

### الآية 77:29

> ﻿انْطَلِقُوا إِلَىٰ مَا كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ [77:29]

நீங்கள் எதை பொய்ப்பிப்பவர்களாக இருந்தீர்களோ அதன் பக்கம் (இன்று) செல்லுங்கள்!

### الآية 77:30

> ﻿انْطَلِقُوا إِلَىٰ ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ [77:30]

மூன்று கிளைகளை உடைய (நெருப்பு) புகையின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்!

### الآية 77:31

> ﻿لَا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ [77:31]

அது நிழல்தரக்கூடியது அல்ல, அது (நெருப்பின்) ஜுவாலையை தடுக்காது.

### الآية 77:32

> ﻿إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ [77:32]

நிச்சயமாக அது (-நரகம்) மாளிகையைப் போல் உள்ள நெருப்பு கங்குகளை எறியும்!

### الآية 77:33

> ﻿كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ [77:33]

அவையோ கரு மஞ்சள் நிற ஒட்டகைகளைப் போல் இருக்கும்!

### الآية 77:34

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:34]

பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

### الآية 77:35

> ﻿هَٰذَا يَوْمُ لَا يَنْطِقُونَ [77:35]

இது அவர்கள் பேசாத நாளாகும்.

### الآية 77:36

> ﻿وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ [77:36]

அவர்களுக்கு அனுமதி தரப்படாது. (அனுமதி கொடுத்தால்தானே) அவர்கள் காரணம் கூறுவதற்கு.

### الآية 77:37

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:37]

பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

### الآية 77:38

> ﻿هَٰذَا يَوْمُ الْفَصْلِ ۖ جَمَعْنَاكُمْ وَالْأَوَّلِينَ [77:38]

இது தீர்ப்பு நாளாகும். உங்களையும் முன்னோரையும் (ஒரே மைதானத்தில்) நாம் ஒன்று சேர்த்துள்ளோம்.

### الآية 77:39

> ﻿فَإِنْ كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ [77:39]

உங்களிடம் (எங்களுக்கு எதிராக தீங்கு செய்வதற்கு) ஒரு சூழ்ச்சி இருந்தால், எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள்.

### الآية 77:40

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:40]

பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

### الآية 77:41

> ﻿إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ [77:41]

நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்கள் நிழல்களிலும் ஊற்றுகளிலும்,

### الآية 77:42

> ﻿وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ [77:42]

இன்னும் அவர்கள் விரும்புகின்ற பழங்களிலும் (-அவற்றைப் புசிப்பதிலும்) இருப்பார்கள்.

### الآية 77:43

> ﻿كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ [77:43]

நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கு (நல்ல அமல்களுக்கு) பகரமாக இன்பமாக உண்ணுங்கள்! பருகுங்கள்!

### الآية 77:44

> ﻿إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ [77:44]

நிச்சயமாக நாம் நல்லறம் புரிபவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.

### الآية 77:45

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:45]

பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

### الآية 77:46

> ﻿كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُمْ مُجْرِمُونَ [77:46]

(இவ்வுலகில்) கொஞ்ச காலம் உண்ணுங்கள்! இன்புறுங்கள்! நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள்!

### الآية 77:47

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:47]

பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

### الآية 77:48

> ﻿وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ [77:48]

தொழுங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால் அவர்கள் தொழ மாட்டார்கள்.

### الآية 77:49

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [77:49]

பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!

### الآية 77:50

> ﻿فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ [77:50]

இதற்கு பின்னர், வேறு எந்த குர்ஆனை இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்!

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/77.md)
- [كل تفاسير سورة المرسلات
](https://quranpedia.net/surah-tafsir/77.md)
- [ترجمات سورة المرسلات
](https://quranpedia.net/translations/77.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية - عمر شريف](https://quranpedia.net/book/27819.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/77/book/27819) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
