---
title: "ترجمة سورة النبأ - Jan Trust Foundation - Tamil translation (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/78/book/13653.md"
canonical: "https://quranpedia.net/surah/1/78/book/13653"
surah_id: "78"
book_id: "13653"
book_name: "Jan Trust Foundation - Tamil translation"
type: "translation"
---

# ترجمة سورة النبأ - Jan Trust Foundation - Tamil translation (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/78/book/13653)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة النبأ - Jan Trust Foundation - Tamil translation (التاميلية) — https://quranpedia.net/surah/1/78/book/13653*.

Translation of Surah النبأ from "Jan Trust Foundation - Tamil translation" in التاميلية.

### الآية 78:1

> عَمَّ يَتَسَاءَلُونَ [78:1]

---

عَمَّ يَتَسَآءَلُونَ


எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?

---

### الآية 78:2

> ﻿عَنِ النَّبَإِ الْعَظِيمِ [78:2]

عَنِ ٱلنَّبَإِ ٱلۡعَظِيمِ


மகத்தான அச்செய்தியைப் பற்றி,

---

### الآية 78:3

> ﻿الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ [78:3]

ٱلَّذِي هُمۡ فِيهِ مُخۡتَلِفُونَ


எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,

---

### الآية 78:4

> ﻿كَلَّا سَيَعْلَمُونَ [78:4]

كَلَّا سَيَعۡلَمُونَ


அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.

---

### الآية 78:5

> ﻿ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ [78:5]

ثُمَّ كَلَّا سَيَعۡلَمُونَ


பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.

---

### الآية 78:6

> ﻿أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا [78:6]

أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ مِهَٰدٗا


நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?

---

### الآية 78:7

> ﻿وَالْجِبَالَ أَوْتَادًا [78:7]

وَٱلۡجِبَالَ أَوۡتَادٗا


இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?

---

### الآية 78:8

> ﻿وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا [78:8]

وَخَلَقۡنَٰكُمۡ أَزۡوَٰجٗا


இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.

---

### الآية 78:9

> ﻿وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا [78:9]

وَجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتٗا


மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.

---

### الآية 78:10

> ﻿وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا [78:10]

وَجَعَلۡنَا ٱلَّيۡلَ لِبَاسٗا


அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.

---

### الآية 78:11

> ﻿وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا [78:11]

وَجَعَلۡنَا ٱلنَّهَارَ مَعَاشٗا


மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.

---

### الآية 78:12

> ﻿وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا [78:12]

وَبَنَيۡنَا فَوۡقَكُمۡ سَبۡعٗا شِدَادٗا


உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.

---

### الآية 78:13

> ﻿وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا [78:13]

وَجَعَلۡنَا سِرَاجٗا وَهَّاجٗا


ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.

---

### الآية 78:14

> ﻿وَأَنْزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا [78:14]

وَأَنزَلۡنَا مِنَ ٱلۡمُعۡصِرَٰتِ مَآءٗ ثَجَّاجٗا


அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.

---

### الآية 78:15

> ﻿لِنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا [78:15]

لِّنُخۡرِجَ بِهِۦ حَبّٗا وَنَبَاتٗا


அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.

---

### الآية 78:16

> ﻿وَجَنَّاتٍ أَلْفَافًا [78:16]

وَجَنَّـٰتٍ أَلۡفَافًا


(கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).

---

### الآية 78:17

> ﻿إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا [78:17]

إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ كَانَ مِيقَٰتٗا


நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.

---

### الآية 78:18

> ﻿يَوْمَ يُنْفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا [78:18]

يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِ فَتَأۡتُونَ أَفۡوَاجٗا


ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.

---

### الآية 78:19

> ﻿وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا [78:19]

وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ أَبۡوَٰبٗا


இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.

---

### الآية 78:20

> ﻿وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا [78:20]

وَسُيِّرَتِ ٱلۡجِبَالُ فَكَانَتۡ سَرَابًا


மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.

---

### الآية 78:21

> ﻿إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا [78:21]

إِنَّ جَهَنَّمَ كَانَتۡ مِرۡصَادٗا


நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

---

### الآية 78:22

> ﻿لِلطَّاغِينَ مَآبًا [78:22]

لِّلطَّـٰغِينَ مَـَٔابٗا


வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக.

---

### الآية 78:23

> ﻿لَابِثِينَ فِيهَا أَحْقَابًا [78:23]

لَّـٰبِثِينَ فِيهَآ أَحۡقَابٗا


அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.

---

### الآية 78:24

> ﻿لَا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا [78:24]

لَّا يَذُوقُونَ فِيهَا بَرۡدٗا وَلَا شَرَابًا


அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.

---

### الآية 78:25

> ﻿إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا [78:25]

إِلَّا حَمِيمٗا وَغَسَّاقٗا


கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.

---

### الآية 78:26

> ﻿جَزَاءً وِفَاقًا [78:26]

جَزَآءٗ وِفَاقًا


(அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.

---

### الآية 78:27

> ﻿إِنَّهُمْ كَانُوا لَا يَرْجُونَ حِسَابًا [78:27]

إِنَّهُمۡ كَانُواْ لَا يَرۡجُونَ حِسَابٗا


நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.

---

### الآية 78:28

> ﻿وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا [78:28]

وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا كِذَّابٗا


அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.

---

### الآية 78:29

> ﻿وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا [78:29]

وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ كِتَٰبٗا


நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.

---

### الآية 78:30

> ﻿فَذُوقُوا فَلَنْ نَزِيدَكُمْ إِلَّا عَذَابًا [78:30]

فَذُوقُواْ فَلَن نَّزِيدَكُمۡ إِلَّا عَذَابًا


"ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

---

### الآية 78:31

> ﻿إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا [78:31]

إِنَّ لِلۡمُتَّقِينَ مَفَازًا


நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.

---

### الآية 78:32

> ﻿حَدَائِقَ وَأَعْنَابًا [78:32]

حَدَآئِقَ وَأَعۡنَٰبٗا


தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.

---

### الآية 78:33

> ﻿وَكَوَاعِبَ أَتْرَابًا [78:33]

وَكَوَاعِبَ أَتۡرَابٗا


ஒரே வயதுள்ள கன்னிகளும்.

---

### الآية 78:34

> ﻿وَكَأْسًا دِهَاقًا [78:34]

وَكَأۡسٗا دِهَاقٗا


பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).

---

### الآية 78:35

> ﻿لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا [78:35]

لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا كِذَّـٰبٗا


அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.

---

### الآية 78:36

> ﻿جَزَاءً مِنْ رَبِّكَ عَطَاءً حِسَابًا [78:36]

جَزَآءٗ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابٗا


(இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.

---

### الآية 78:37

> ﻿رَبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمَٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا [78:37]

رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلرَّحۡمَٰنِۖ لَا يَمۡلِكُونَ مِنۡهُ خِطَابٗا


(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.

---

### الآية 78:38

> ﻿يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا ۖ لَا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًا [78:38]

يَوۡمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلۡمَلَـٰٓئِكَةُ صَفّٗاۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَقَالَ صَوَابٗا


ரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.

---

### الآية 78:39

> ﻿ذَٰلِكَ الْيَوْمُ الْحَقُّ ۖ فَمَنْ شَاءَ اتَّخَذَ إِلَىٰ رَبِّهِ مَآبًا [78:39]

ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلۡحَقُّۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا


அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக.

---

### الآية 78:40

> ﻿إِنَّا أَنْذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنْتُ تُرَابًا [78:40]

إِنَّآ أَنذَرۡنَٰكُمۡ عَذَابٗا قَرِيبٗا يَوۡمَ يَنظُرُ ٱلۡمَرۡءُ مَا قَدَّمَتۡ يَدَاهُ وَيَقُولُ ٱلۡكَافِرُ يَٰلَيۡتَنِي كُنتُ تُرَٰبَۢا


நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் "அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!" என்று (பிரலாபித்துக்) கூறுவான்.

---

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/78.md)
- [كل تفاسير سورة النبأ
](https://quranpedia.net/surah-tafsir/78.md)
- [ترجمات سورة النبأ
](https://quranpedia.net/translations/78.md)
- [صفحة الكتاب: Jan Trust Foundation - Tamil translation](https://quranpedia.net/book/13653.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/78/book/13653) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
