---
title: "ترجمة سورة النازعات - الترجمة التاميلية (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/79/book/1991.md"
canonical: "https://quranpedia.net/surah/1/79/book/1991"
surah_id: "79"
book_id: "1991"
book_name: "الترجمة التاميلية"
author: "عبد الحميد الباقوي"
type: "translation"
---

# ترجمة سورة النازعات - الترجمة التاميلية (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/79/book/1991)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة النازعات - الترجمة التاميلية (التاميلية) — https://quranpedia.net/surah/1/79/book/1991*.

Translation of Surah النازعات from "الترجمة التاميلية" in التاميلية.

### الآية 79:1

> وَالنَّازِعَاتِ غَرْقًا [79:1]

1\. (பாவிகளின் உயிர்களைப்) பலமாகப் பறிப்பவர்கள் மீது சத்தியமாக!

### الآية 79:2

> ﻿وَالنَّاشِطَاتِ نَشْطًا [79:2]

2\. (நல்லவர்களின் ஆத்மாவை) எளிதாகக் கைப்பற்றுபவர்கள் மீது சத்தியமாக!

### الآية 79:3

> ﻿وَالسَّابِحَاتِ سَبْحًا [79:3]

3\. (ஆகாயத்திலும், கடலிலும்) அதிவேகமாக(ப் பறந்து) நீந்திச் செல்லும் வானவர்கள் மீது சத்தியமாக!

### الآية 79:4

> ﻿فَالسَّابِقَاتِ سَبْقًا [79:4]

4\. (இறைவனின் கட்டளையை நிறைவேற்ற) போட்டி போட்டுக்கொண்டு முந்தி செல்பவர்கள் மீதும் சத்தியமாக!

### الآية 79:5

> ﻿فَالْمُدَبِّرَاتِ أَمْرًا [79:5]

5\. எல்லாக் காரியங்களையும் (இறைவனின் கட்டளைப்படி) நிர்வகிக்கின்ற (வான)வர்கள் மீது சத்தியமாக!

### الآية 79:6

> ﻿يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ [79:6]

6\. (கொடிய பூகம்பத்தால் பூமி) பலமாக அதிர்ச்சியுறும் நாளில்,

### الآية 79:7

> ﻿تَتْبَعُهَا الرَّادِفَةُ [79:7]

7\. (மேலும்) அதைத் தொடர்ந்து (பல பூகம்ப அதிர்ச்சிகள்) வரும் (நாளில் உலகம் முடிவுற்றே தீரும்).

### الآية 79:8

> ﻿قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ [79:8]

8\. அந்நாளில், உள்ளங்களெல்லாம் திடுக்கிட்டு நடுங்கிக் கொண்டிருக்கும்.

### الآية 79:9

> ﻿أَبْصَارُهَا خَاشِعَةٌ [79:9]

9\. பார்வைகளெல்லாம் (பயத்தால்) கீழ்நோக்கி நிற்கும்.

### الآية 79:10

> ﻿يَقُولُونَ أَإِنَّا لَمَرْدُودُونَ فِي الْحَافِرَةِ [79:10]

10\. (இவ்வாறிருக்க, நிராகரிப்பவர்கள் இதை மறுத்து) ‘‘நாம் (இறந்த பின்னர்) மெய்யாகவே நாம் (உயிர்ப்பிக்கப்பட்டு) முந்திய நிலைமைக்குத் திருப்பப்படுவோமா?''

### الآية 79:11

> ﻿أَإِذَا كُنَّا عِظَامًا نَخِرَةً [79:11]

11\. (அதுவும்) நாம் உக்கி எலும்பாகப் போனதன் பின்னரா (உயிர் கொடுத்து எழுப்பப்படுவோம்?) என்று கூறுகின்றனர்.

### الآية 79:12

> ﻿قَالُوا تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ [79:12]

12\. ‘‘அவ்வாறாயின், அது பெரும் நஷ்டமான மீட்சிதான் என்றும் அவர்கள் (பரிகாசமாகக்)'' கூறுகின்றனர்.

### الآية 79:13

> ﻿فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ [79:13]

13\. (இது அவர்களுக்கு அசாத்தியமாகத் தோன்றலாம்; எனினும், நமக்கோ) அது ஓர் அதட்டல் (ஒரு உறுத்தல், ஒரு சப்தம்)தான்.

### الآية 79:14

> ﻿فَإِذَا هُمْ بِالسَّاهِرَةِ [79:14]

14\. உடனே அவர்கள் அனைவரும் (உயிர் பெற்றெழுந்து) வந்து ஒரு திடலில் கூடிவிடுவார்கள்.

### الآية 79:15

> ﻿هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ [79:15]

15\. (நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு எட்டியதா?

### الآية 79:16

> ﻿إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى [79:16]

16\. ‘துவா' என்னும் பரிசுத்தமான ஓடைக்கு அவருடைய இறைவன் அவரை அழைத்ததை நினைவு கூறுங்கள்.

### الآية 79:17

> ﻿اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ [79:17]

17\. ‘‘ஃபிர்அவ்னிடம் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்.

### الآية 79:18

> ﻿فَقُلْ هَلْ لَكَ إِلَىٰ أَنْ تَزَكَّىٰ [79:18]

18\. (அவனிடம்) கூறுவீராக! ‘‘(பாவங்களை விட்டும்) நீ பரிசுத்தவானாக ஆக உனக்கு விருப்பம் தானா?

### الآية 79:19

> ﻿وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ [79:19]

19\. (அவ்வாறாயின்) உன் இறைவன் பக்கம் செல்லக்கூடிய வழியை நான் உனக்கு அறிவிக்கிறேன். அவனுக்கு நீ பயந்துகொள்'' (இவ்வாறு, மூஸாவுக்கு இறைவன் கட்டளையிட்டான்).

### الآية 79:20

> ﻿فَأَرَاهُ الْآيَةَ الْكُبْرَىٰ [79:20]

20\. (மூஸா அவனிடம் சென்று அவ்வாறு கூறிப்) பெரியதொரு அத்தாட்சியையும் அவனுக்குக் காண்பித்தார்.

### الآية 79:21

> ﻿فَكَذَّبَ وَعَصَىٰ [79:21]

21\. (எனினும்) அவனோ, அதைப் பொய்யாக்கி (அவர் கூறியதற்கு) மாறு செய்தான்.

### الآية 79:22

> ﻿ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ [79:22]

22\. பின்னர் (அவரை விட்டும்) விலகி (அவருக்குத் தீங்கிழைக்கவும்) முயற்சி செய்தான்.

### الآية 79:23

> ﻿فَحَشَرَ فَنَادَىٰ [79:23]

23\. இதற்காக(த் தன் மக்களை) ஒன்று கூட்டி (அவர்களுக்கு) அறிக்கையிட்டான்.

### الآية 79:24

> ﻿فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَىٰ [79:24]

24\. (அவர்களை நோக்கி) ‘‘நான்தான் உங்கள் மேலான இறைவன்'' என்று கூறினான்.

### الآية 79:25

> ﻿فَأَخَذَهُ اللَّهُ نَكَالَ الْآخِرَةِ وَالْأُولَىٰ [79:25]

25\. ஆதலால், அல்லாஹ் அவனை இம்மை மறுமையின் வேதனையைக் கொண்டு பிடித்துக் கொண்டான்.

### الآية 79:26

> ﻿إِنَّ فِي ذَٰلِكَ لَعِبْرَةً لِمَنْ يَخْشَىٰ [79:26]

26\. பயப்படுபவர்களுக்கு மெய்யாகவே இதில் ஒரு நல்ல படிப்பினை இருக்கிறது.

### الآية 79:27

> ﻿أَأَنْتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ السَّمَاءُ ۚ بَنَاهَا [79:27]

27\. (மனிதர்களே!) நீங்கள் பலமான படைப்பா? அல்லது வானமா? அவன்தான் அவ்வானத்தைப் படைத்தான்.

### الآية 79:28

> ﻿رَفَعَ سَمْكَهَا فَسَوَّاهَا [79:28]

28\. அவனே அதன் முகட்டை உயர்த்தி, அதை ஒழுங்குபடுத்தினான்.

### الآية 79:29

> ﻿وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَاهَا [79:29]

29\. அவனே, அதன் இரவை இருளாக்கி(ச் சூரியனைக் கொண்டு) அதன் பகலை வெளியாக்கி (வெளிச்சமாக்கி)னான்.

### الآية 79:30

> ﻿وَالْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَاهَا [79:30]

30\. இதற்குப் பின்னர், அவனே பூமியை விரித்தான்.

### الآية 79:31

> ﻿أَخْرَجَ مِنْهَا مَاءَهَا وَمَرْعَاهَا [79:31]

31\. அவனே அதிலிருந்து நீரையும், மேய்ச்சல் பொருள்களையும் வெளியாக்குகிறான்.

### الآية 79:32

> ﻿وَالْجِبَالَ أَرْسَاهَا [79:32]

32\. மலைகளையும் அவனே (அதில்) உறுதியாக ஊன்றினான்.

### الآية 79:33

> ﻿مَتَاعًا لَكُمْ وَلِأَنْعَامِكُمْ [79:33]

33\. உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிக்கக்கூடியவையாக (அவற்றை அதில் அமைத்தான்).

### الآية 79:34

> ﻿فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ [79:34]

34\. (மறுமையின்) பெரும் அமளி வந்தால்,

### الآية 79:35

> ﻿يَوْمَ يَتَذَكَّرُ الْإِنْسَانُ مَا سَعَىٰ [79:35]

35\. மனிதன் செய்ததெல்லாம் அந்நாளில் அவனுடைய ஞாபகத்திற்கு வந்துவிடும்.

### الآية 79:36

> ﻿وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَنْ يَرَىٰ [79:36]

36\. மனிதர்கள் கண் முன் நரகம் கொண்டு வந்து வைக்கப்பட்டு விடும்.

### الآية 79:37

> ﻿فَأَمَّا مَنْ طَغَىٰ [79:37]

37\. எவன் வரம்பு மீறினானோ,

### الآية 79:38

> ﻿وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا [79:38]

38\. (மறுமையைப் புறக்கணித்து) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து கொண்டானோ,

### الآية 79:39

> ﻿فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَىٰ [79:39]

39\. அவன் செல்லும் இடம் நிச்சயமாக நரகம்தான்.

### الآية 79:40

> ﻿وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ [79:40]

40\. எவன் தன் இறைவனின் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதைப் (பற்றிப்) பயந்து, (தப்பான) சரீர இச்சையை விட்டுத் தன்னைத்தடுத்துக் கொண்டானோ,

### الآية 79:41

> ﻿فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ [79:41]

41\. அவன் செல்லுமிடம் நிச்சயமாக சொர்க்கம்தான்.

### الآية 79:42

> ﻿يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا [79:42]

42\. (நபியே!) மறுமையைப் பற்றி, அது எப்பொழுது வருமென உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர்.

### الآية 79:43

> ﻿فِيمَ أَنْتَ مِنْ ذِكْرَاهَا [79:43]

43\. (எப்பொழுது வருமென்று) எதற்காக நீர் கூற வேண்டும்?

### الآية 79:44

> ﻿إِلَىٰ رَبِّكَ مُنْتَهَاهَا [79:44]

44\. அதன் முடிவெல்லாம், உமது இறைவனிடமே இருக்கிறது.

### الآية 79:45

> ﻿إِنَّمَا أَنْتَ مُنْذِرُ مَنْ يَخْشَاهَا [79:45]

45\. அந்நாளைப் பற்றிப் பயப்படக்கூடியவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரே தவிர வேறில்லை. (அது வரும் காலத்தையும், நேரத்தையும் அறிவிப்பது உமது கடமையல்ல.)

### الآية 79:46

> ﻿كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَاهَا [79:46]

46\. அதை அவர்கள் கண்ணால் காணும் நாளில், மாலையிலோ அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமே தவிர (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்றே அவர்களுக்குத் தோன்றும்.

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/79.md)
- [كل تفاسير سورة النازعات
](https://quranpedia.net/surah-tafsir/79.md)
- [ترجمات سورة النازعات
](https://quranpedia.net/translations/79.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية](https://quranpedia.net/book/1991.md)
- [المؤلف: عبد الحميد الباقوي](https://quranpedia.net/person/1766.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/79/book/1991) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
