---
title: "ترجمة سورة عبس - Jan Trust Foundation - Tamil translation (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/80/book/13653.md"
canonical: "https://quranpedia.net/surah/1/80/book/13653"
surah_id: "80"
book_id: "13653"
book_name: "Jan Trust Foundation - Tamil translation"
type: "translation"
---

# ترجمة سورة عبس - Jan Trust Foundation - Tamil translation (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/80/book/13653)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة عبس - Jan Trust Foundation - Tamil translation (التاميلية) — https://quranpedia.net/surah/1/80/book/13653*.

Translation of Surah عبس from "Jan Trust Foundation - Tamil translation" in التاميلية.

### الآية 80:1

> عَبَسَ وَتَوَلَّىٰ [80:1]

---

عَبَسَ وَتَوَلَّىٰٓ


அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.

---

### الآية 80:2

> ﻿أَنْ جَاءَهُ الْأَعْمَىٰ [80:2]

أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ


அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,

---

### الآية 80:3

> ﻿وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ [80:3]

وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ


(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?

---

### الآية 80:4

> ﻿أَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرَىٰ [80:4]

أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ


அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.

---

### الآية 80:5

> ﻿أَمَّا مَنِ اسْتَغْنَىٰ [80:5]

أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ


(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-

---

### الآية 80:6

> ﻿فَأَنْتَ لَهُ تَصَدَّىٰ [80:6]

فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ


நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.

---

### الآية 80:7

> ﻿وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ [80:7]

وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ


ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.

---

### الآية 80:8

> ﻿وَأَمَّا مَنْ جَاءَكَ يَسْعَىٰ [80:8]

وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ


ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,

---

### الآية 80:9

> ﻿وَهُوَ يَخْشَىٰ [80:9]

وَهُوَ يَخۡشَىٰ


அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-

---

### الآية 80:10

> ﻿فَأَنْتَ عَنْهُ تَلَهَّىٰ [80:10]

فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ


அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.

---

### الآية 80:11

> ﻿كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ [80:11]

كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ


அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.

---

### الآية 80:12

> ﻿فَمَنْ شَاءَ ذَكَرَهُ [80:12]

فَمَن شَآءَ ذَكَرَهُۥ


எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.

---

### الآية 80:13

> ﻿فِي صُحُفٍ مُكَرَّمَةٍ [80:13]

فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ


(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.

---

### الآية 80:14

> ﻿مَرْفُوعَةٍ مُطَهَّرَةٍ [80:14]

مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ


உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.

---

### الآية 80:15

> ﻿بِأَيْدِي سَفَرَةٍ [80:15]

بِأَيۡدِي سَفَرَةٖ


(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-

---

### الآية 80:16

> ﻿كِرَامٍ بَرَرَةٍ [80:16]

كِرَامِۭ بَرَرَةٖ


(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.

---

### الآية 80:17

> ﻿قُتِلَ الْإِنْسَانُ مَا أَكْفَرَهُ [80:17]

قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ


(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!

---

### الآية 80:18

> ﻿مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ [80:18]

مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ


எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)

---

### الآية 80:19

> ﻿مِنْ نُطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ [80:19]

مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ


(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.

---

### الآية 80:20

> ﻿ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ [80:20]

ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ


பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.

---

### الآية 80:21

> ﻿ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ [80:21]

ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ


பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான்.

---

### الآية 80:22

> ﻿ثُمَّ إِذَا شَاءَ أَنْشَرَهُ [80:22]

ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ


பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.

---

### الآية 80:23

> ﻿كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ [80:23]

كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ


(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.

---

### الآية 80:24

> ﻿فَلْيَنْظُرِ الْإِنْسَانُ إِلَىٰ طَعَامِهِ [80:24]

فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ


எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.

---

### الآية 80:25

> ﻿أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا [80:25]

أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا


நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.

---

### الآية 80:26

> ﻿ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا [80:26]

ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا


பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-

---

### الآية 80:27

> ﻿فَأَنْبَتْنَا فِيهَا حَبًّا [80:27]

فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا


பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.

---

### الآية 80:28

> ﻿وَعِنَبًا وَقَضْبًا [80:28]

وَعِنَبٗا وَقَضۡبٗا


திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-

---

### الآية 80:29

> ﻿وَزَيْتُونًا وَنَخْلًا [80:29]

وَزَيۡتُونٗا وَنَخۡلٗا


ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -

---

### الآية 80:30

> ﻿وَحَدَائِقَ غُلْبًا [80:30]

وَحَدَآئِقَ غُلۡبٗا


அடர்ந்த தோட்டங்களையும்,

---

### الآية 80:31

> ﻿وَفَاكِهَةً وَأَبًّا [80:31]

وَفَٰكِهَةٗ وَأَبّٗا


பழங்களையும், தீவனங்களையும்-

---

### الآية 80:32

> ﻿مَتَاعًا لَكُمْ وَلِأَنْعَامِكُمْ [80:32]

مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ


(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,

---

### الآية 80:33

> ﻿فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ [80:33]

فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ


ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -

---

### الآية 80:34

> ﻿يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ [80:34]

يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ


அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -

---

### الآية 80:35

> ﻿وَأُمِّهِ وَأَبِيهِ [80:35]

وَأُمِّهِۦ وَأَبِيهِ


தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;

---

### الآية 80:36

> ﻿وَصَاحِبَتِهِ وَبَنِيهِ [80:36]

وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ


தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-

---

### الآية 80:37

> ﻿لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ [80:37]

لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ


அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.

---

### الآية 80:38

> ﻿وُجُوهٌ يَوْمَئِذٍ مُسْفِرَةٌ [80:38]

وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ


அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.

---

### الآية 80:39

> ﻿ضَاحِكَةٌ مُسْتَبْشِرَةٌ [80:39]

ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ


சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.

---

### الآية 80:40

> ﻿وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ [80:40]

وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ


ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.

---

### الآية 80:41

> ﻿تَرْهَقُهَا قَتَرَةٌ [80:41]

تَرۡهَقُهَا قَتَرَةٌ


அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.

---

### الآية 80:42

> ﻿أُولَٰئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ [80:42]

أُوْلَـٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ


அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.

---

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/80.md)
- [كل تفاسير سورة عبس
](https://quranpedia.net/surah-tafsir/80.md)
- [ترجمات سورة عبس
](https://quranpedia.net/translations/80.md)
- [صفحة الكتاب: Jan Trust Foundation - Tamil translation](https://quranpedia.net/book/13653.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/80/book/13653) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
