---
title: "ترجمة سورة عبس - الترجمة التاميلية (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/80/book/1991.md"
canonical: "https://quranpedia.net/surah/1/80/book/1991"
surah_id: "80"
book_id: "1991"
book_name: "الترجمة التاميلية"
author: "عبد الحميد الباقوي"
type: "translation"
---

# ترجمة سورة عبس - الترجمة التاميلية (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/80/book/1991)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة عبس - الترجمة التاميلية (التاميلية) — https://quranpedia.net/surah/1/80/book/1991*.

Translation of Surah عبس from "الترجمة التاميلية" in التاميلية.

### الآية 80:1

> عَبَسَ وَتَوَلَّىٰ [80:1]

1\. (நம் நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக?)

### الآية 80:2

> ﻿أَنْ جَاءَهُ الْأَعْمَىٰ [80:2]

2\. தன்னிடம் ஓர் பார்வையற்றவர் வந்ததற்காக.

### الآية 80:3

> ﻿وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ [80:3]

3\. (நபியே! உம்மிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீர் அறிவீரா?

### الآية 80:4

> ﻿أَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرَىٰ [80:4]

4\. அல்லது அவர் நல்லுணர்வு பெறுவார். (உமது) நல்லுபதேசம் அவருக்குப் பயனளிக்கலாம் (என்பதை நீர் அறிவீரா? அவ்வாறிருக்க, அவரை நீர் ஏன் கடுகடுத்துப் புறக்கணித்தீர்?)

### الآية 80:5

> ﻿أَمَّا مَنِ اسْتَغْنَىٰ [80:5]

5\. (நபியே! மார்க்கத்தை) எவன் அலட்சியம் செய்கிறானோ,

### الآية 80:6

> ﻿فَأَنْتَ لَهُ تَصَدَّىٰ [80:6]

6\. அவனை வரவேற்பதில் நீர் அதிக சிரமத்தை எடுத்துக் கொள்கிறீர்.

### الآية 80:7

> ﻿وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ [80:7]

7\. அவன் பரிசுத்தவானாக ஆகாவிட்டால் அதைப் பற்றி உம் மீது ஒரு குற்றமும் இல்லை(யே)!

### الآية 80:8

> ﻿وَأَمَّا مَنْ جَاءَكَ يَسْعَىٰ [80:8]

8\. எவர் (தானாகவே) உம்மிடம் ஓடி வருகிறாரோ,

### الآية 80:9

> ﻿وَهُوَ يَخْشَىٰ [80:9]

9\. அவர்தான் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறவர்.

### الآية 80:10

> ﻿فَأَنْتَ عَنْهُ تَلَهَّىٰ [80:10]

10\. எனினும், நீர் அவரை அலட்சியம் செய்து விடுகிறீர்.

### الآية 80:11

> ﻿كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ [80:11]

11\. அவ்வாறு செய்யாதீர். (திரு குர்ஆனாகிய) இது ஒரு நல்லுபதேசம்தான்.

### الآية 80:12

> ﻿فَمَنْ شَاءَ ذَكَرَهُ [80:12]

12\. எவர் (நேரான வழியில் செல்ல) விரும்புகிறாரோ அவர் இதை(ச் செவியுற்று) ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்.

### الآية 80:13

> ﻿فِي صُحُفٍ مُكَرَّمَةٍ [80:13]

13\. இது (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) மிக்க கண்ணியமான புத்தகத்தில் (வரையப்பட்டுள்ளது);

### الآية 80:14

> ﻿مَرْفُوعَةٍ مُطَهَّرَةٍ [80:14]

14\. உயர்வுமிக்க தூய்மையான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது; (அது) மிகப் பரிசுத்தமானது.

### الآية 80:15

> ﻿بِأَيْدِي سَفَرَةٍ [80:15]

15\. எழுதுபவர்களின் கைகளினால் (வரையப்பட்டது).

### الآية 80:16

> ﻿كِرَامٍ بَرَرَةٍ [80:16]

16\. (அவர்கள்) மிக கண்ணியமானவர்கள், மிக நல்லவர்கள்.

### الآية 80:17

> ﻿قُتِلَ الْإِنْسَانُ مَا أَكْفَرَهُ [80:17]

17\. (பாவம் செய்யும்) மனிதனுக்குக் கேடுதான். அவன் எவ்வளவு நன்றிகெட்டவனாக இருக்கிறான்.

### الآية 80:18

> ﻿مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ [80:18]

18\. எதைக்கொண்டு (இறைவன்) அவனைப் படைத்திருக்கிறான் (என்பதை அவன் கவனித்தானா)?

### الآية 80:19

> ﻿مِنْ نُطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ [80:19]

19\. ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டுதான் அவன் அவனைப் படைக்கிறான். (அவன் இருக்கின்ற இவ்வாறே, அவனை மனிதனாக அமைத்து) அவனுக்குச் சக்தியைக் கொடுத்தான்.

### الآية 80:20

> ﻿ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ [80:20]

20\. பின்னர், அவன் செய்யக்கூடிய (நன்மை தீமைக்குரிய) வழியை அவனுக்கு எளிதாக்கி வைத்தான்.

### الآية 80:21

> ﻿ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ [80:21]

21\. பின்னர், அவனை மரணிக்கச் செய்து சமாதியில் புகுத்துகிறான்.

### الآية 80:22

> ﻿ثُمَّ إِذَا شَاءَ أَنْشَرَهُ [80:22]

22\. பின்னர் (அவன் விரும்பியபொழுது உயிர் கொடுத்து) அவனே அவனை உயிர்ப்பிப்பான்.

### الآية 80:23

> ﻿كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ [80:23]

23\. எனினும், நிச்சயமாக மனிதன் இறைவனுடைய கட்டளையை நிறைவேற்றுவதில்லை.

### الآية 80:24

> ﻿فَلْيَنْظُرِ الْإِنْسَانُ إِلَىٰ طَعَامِهِ [80:24]

24\. மனிதன் தன் உணவை (அது எங்கிருந்து எவ்வாறு வருகிறது என்பதைச்) சிறிது கவனித்துப் பார்க்கவும்.

### الآية 80:25

> ﻿أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا [80:25]

25\. நிச்சயமாக நாமே ஏராளமான மழையை பொழியச் செய்தோம்,

### الآية 80:26

> ﻿ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا [80:26]

26\. பின்னர், பூமியையும் பிளந்(து வெடிக்கச் செய்)தோம்.

### الآية 80:27

> ﻿فَأَنْبَتْنَا فِيهَا حَبًّا [80:27]

27\. பின்னர், அதிலிருந்து வித்துக்களை முளைத்து வளரும்படி செய்கிறோம்.

### الآية 80:28

> ﻿وَعِنَبًا وَقَضْبًا [80:28]

28\. (இவ்வாறு) திராட்சைக் கனிகளையும் மற்ற காய்கறிகளையும்,

### الآية 80:29

> ﻿وَزَيْتُونًا وَنَخْلًا [80:29]

29\. ஜைத்தூனையும், பேரீச்சை மரத்தையும்,

### الآية 80:30

> ﻿وَحَدَائِقَ غُلْبًا [80:30]

30\. கிளைகள் அடர்ந்த தோப்புகளையும்,

### الآية 80:31

> ﻿وَفَاكِهَةً وَأَبًّا [80:31]

31\. கனிவர்க்கங்களையும், புற்பூண்டுகளையும்,

### الآية 80:32

> ﻿مَتَاعًا لَكُمْ وَلِأَنْعَامِكُمْ [80:32]

32\. உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும், பயனளிக்குமாறு (முளைக்க வைக்கிறோம்).

### الآية 80:33

> ﻿فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ [80:33]

33\. (உலக முடிவின்பொழுது செவிகளை) செவிடாக்கும்படியான (பயங்கரச்) சப்தம் ஏற்படுமாயின்,

### الآية 80:34

> ﻿يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ [80:34]

34\. அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும் வெருண்டோடுவான்,

### الآية 80:35

> ﻿وَأُمِّهِ وَأَبِيهِ [80:35]

35\. தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்,

### الآية 80:36

> ﻿وَصَاحِبَتِهِ وَبَنِيهِ [80:36]

36\. தன் மனைவியை விட்டும், தன் பிள்ளைகளை விட்டும் (ஓடுவான்).

### الآية 80:37

> ﻿لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ [80:37]

37\. அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், மற்றவர்களைக் கவனிக்க முடியாதவாறு சொந்தக் கவலை ஏற்பட்டுவிடும்.

### الآية 80:38

> ﻿وُجُوهٌ يَوْمَئِذٍ مُسْفِرَةٌ [80:38]

38\. எனினும், அந்நாளில் சில முகங்கள் பிரகாசமுள்ளவையாகவும்,

### الآية 80:39

> ﻿ضَاحِكَةٌ مُسْتَبْشِرَةٌ [80:39]

39\. சந்தோஷத்தால் சிரித்தவையாகவும் இருக்கும்.

### الآية 80:40

> ﻿وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ [80:40]

40\. அந்நாளில் வேறு சில முகங்கள் மீது, புழுதி படிந்து கிடக்கும்.

### الآية 80:41

> ﻿تَرْهَقُهَا قَتَرَةٌ [80:41]

41\. கருமை இருள் அவற்றை மூடிக்கொள்ளும், (துக்கத்தால் அவர்களது முகங்கள் இருளடைந்து கிடக்கும்).

### الآية 80:42

> ﻿أُولَٰئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ [80:42]

42\. இவர்கள்தான் (மறுமையை) நிராகரித்துப் பாவம் செய்பவர்கள்.

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/80.md)
- [كل تفاسير سورة عبس
](https://quranpedia.net/surah-tafsir/80.md)
- [ترجمات سورة عبس
](https://quranpedia.net/translations/80.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية](https://quranpedia.net/book/1991.md)
- [المؤلف: عبد الحميد الباقوي](https://quranpedia.net/person/1766.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/80/book/1991) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
