---
title: "ترجمة سورة عبس - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/80/book/27819.md"
canonical: "https://quranpedia.net/surah/1/80/book/27819"
surah_id: "80"
book_id: "27819"
book_name: "الترجمة التاميلية - عمر شريف"
type: "translation"
---

# ترجمة سورة عبس - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/80/book/27819)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة عبس - الترجمة التاميلية - عمر شريف (التاميلية) — https://quranpedia.net/surah/1/80/book/27819*.

Translation of Surah عبس from "الترجمة التاميلية - عمر شريف" in التاميلية.

### الآية 80:1

> عَبَسَ وَتَوَلَّىٰ [80:1]

(உலக முடிவுக்காகச்) சூரியன் மங்க வைக்கப்படும்போது,

### الآية 80:2

> ﻿أَنْ جَاءَهُ الْأَعْمَىٰ [80:2]

அவரிடம் பார்வையற்றவர் வந்ததற்காக.

### الآية 80:3

> ﻿وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ [80:3]

இன்னும் (நபியே) நீர் அறிவீரா? அவர் பரிசுத்தமடையலாம்,

### الآية 80:4

> ﻿أَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرَىٰ [80:4]

அல்லது (உங்களிடம்) அவர் அறிவுரை பெறுவார். (அந்த) அறிவுரை அவருக்குப் பலனளிக்கலாம்.

### الآية 80:5

> ﻿أَمَّا مَنِ اسْتَغْنَىٰ [80:5]

ஆக, எவன் (தன்னை) தேவையற்றவனாகக் கருதினானோ,

### الآية 80:6

> ﻿فَأَنْتَ لَهُ تَصَدَّىٰ [80:6]

நீர் அவனை (வரவேற்க) முன்னோக்குகிறீர் (அவனை கவனிக்கிறீர்).

### الآية 80:7

> ﻿وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ [80:7]

அவன் (இஸ்லாமை ஏற்று) பரிசுத்தமடையாதது உம்மீது (குற்றம்) இல்லை.

### الآية 80:8

> ﻿وَأَمَّا مَنْ جَاءَكَ يَسْعَىٰ [80:8]

ஆக, எவர் உம்மிடம் விரைந்தவராக வந்தாரோ,

### الآية 80:9

> ﻿وَهُوَ يَخْشَىٰ [80:9]

அவரோ (அல்லாஹ்வைப்) பயப்படுகிறவராக,

### الآية 80:10

> ﻿فَأَنْتَ عَنْهُ تَلَهَّىٰ [80:10]

நீர் அவரை அலட்சியப்படுத்துகிறீர்.

### الآية 80:11

> ﻿كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ [80:11]

அவ்வாறல்ல, நிச்சயமாக இது (-அத்தியாயம்) ஓர் அறிவுரை ஆகும்.

### الآية 80:12

> ﻿فَمَنْ شَاءَ ذَكَرَهُ [80:12]

ஆகவே, யார் (நேர்வழியை) நாடுகிறாரோ (அவர்) இதை (-இந்த வேதத்தை) நினைவில் வைப்பார். (இதன் மூலம் நல்லுபதேசம் பெறுவார்.)

### الآية 80:13

> ﻿فِي صُحُفٍ مُكَرَّمَةٍ [80:13]

(இது) மிக்க கண்ணியமான ஏடுகளில் இருக்கிறது.

### الآية 80:14

> ﻿مَرْفُوعَةٍ مُطَهَّرَةٍ [80:14]

(அந்த ஏடுகள்) மிக உயர்வானவை, மிகவும் தூய்மையானவை,

### الآية 80:15

> ﻿بِأَيْدِي سَفَرَةٍ [80:15]

(அவை) எழுதுபவர்களின் கைகளில் (பாதுகாக்கப்பட்டுள்ளது),

### الآية 80:16

> ﻿كِرَامٍ بَرَرَةٍ [80:16]

(அவர்கள்) கண்ணியமானவர்கள், நல்லவர்கள்.

### الآية 80:17

> ﻿قُتِلَ الْإِنْسَانُ مَا أَكْفَرَهُ [80:17]

(பாவம் செய்கின்ற) மனிதன் அழியட்டும்! அவன் எவ்வளவு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.

### الآية 80:18

> ﻿مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ [80:18]

எந்தப் பொருளிலிருந்து (அல்லாஹ்) அவனைப் படைத்தான்?

### الآية 80:19

> ﻿مِنْ نُطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ [80:19]

விந்திலிருந்து அவனைப் படைத்தான். (பல நிலைகளில்) அவனை அமைத்தான்.

### الآية 80:20

> ﻿ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ [80:20]

பிறகு, பாதையை- (அவனுக்கு) அதை எளிதாக்கினான்.

### الآية 80:21

> ﻿ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ [80:21]

பிறகு, அவனை மரணிக்கச் செய்தான்; அவனைப் புதைக்குழியில் தள்ளினான்.

### الآية 80:22

> ﻿ثُمَّ إِذَا شَاءَ أَنْشَرَهُ [80:22]

பிறகு, அவன் நாடியபோது அவனை உயிர்ப்பிப்பான்.

### الآية 80:23

> ﻿كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ [80:23]

அவ்வாறல்ல, (அல்லாஹ்) அவனுக்குக் கட்டளையிட்டதை அவன் நிறைவேற்றவில்லை.

### الآية 80:24

> ﻿فَلْيَنْظُرِ الْإِنْسَانُ إِلَىٰ طَعَامِهِ [80:24]

ஆகவே, மனிதன் தன் உணவின் பக்கம் பார்க்கட்டும்.

### الآية 80:25

> ﻿أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا [80:25]

நிச்சயமாக நாம் (மழை) நீரைப் பொழிந்தோம்.

### الآية 80:26

> ﻿ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا [80:26]

பிறகு பூமியைப் பிளந்தோம்.

### الآية 80:27

> ﻿فَأَنْبَتْنَا فِيهَا حَبًّا [80:27]

ஆக, அதில் தானியத்தை முளைக்க வைத்தோம்.

### الآية 80:28

> ﻿وَعِنَبًا وَقَضْبًا [80:28]

இன்னும், திராட்சையையும், (பசுமையான) காய்கறியையும் (முளைக்க வைத்தோம்).

### الآية 80:29

> ﻿وَزَيْتُونًا وَنَخْلًا [80:29]

இன்னும், ஸைத்தூனையும், பேரிச்சை மரத்தையும் (முளைக்க வைத்தோம்).

### الآية 80:30

> ﻿وَحَدَائِقَ غُلْبًا [80:30]

இன்னும், அடர்ந்த தோட்டங்களையும் (முளைக்க வைத்தோம்).

### الآية 80:31

> ﻿وَفَاكِهَةً وَأَبًّا [80:31]

இன்னும், கனிகளையும், புற்பூண்டுகளையும் (முளைக்க வைத்தோம்).

### الآية 80:32

> ﻿مَتَاعًا لَكُمْ وَلِأَنْعَامِكُمْ [80:32]

(இவை அனைத்தையும்) உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் பலன் தருவதற்காக (நாம் முளைக்க வைத்தோம்).

### الآية 80:33

> ﻿فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ [80:33]

ஆகவே, (ஒரு நாளில் மறுமையின்) செவிடாக்கும் சப்தம் வந்தால்,

### الآية 80:34

> ﻿يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ [80:34]

அந்நாளில், மனிதன் தனது சகோதரனை விட்டும் விரண்டோடுவான்.

### الآية 80:35

> ﻿وَأُمِّهِ وَأَبِيهِ [80:35]

இன்னும் தனது தாயை விட்டும், தனது தந்தையை விட்டும் (விரண்டோடுவான்).

### الآية 80:36

> ﻿وَصَاحِبَتِهِ وَبَنِيهِ [80:36]

இன்னும், தன் மனைவியை விட்டும், தன் பிள்ளைகளை விட்டும் (விரண்டோடுவான்).

### الآية 80:37

> ﻿لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ [80:37]

அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், (மற்றவர்களை விட்டு) அவனைத் திருப்பிவிடுகின்ற நிலைமை இருக்கும்.

### الآية 80:38

> ﻿وُجُوهٌ يَوْمَئِذٍ مُسْفِرَةٌ [80:38]

அந்நாளில் (சில) முகங்கள் ஒளிரக்கூடியதாக இருக்கும்.

### الآية 80:39

> ﻿ضَاحِكَةٌ مُسْتَبْشِرَةٌ [80:39]

வை சிரித்தவையாக, நற்செய்தி பெற்றவையாக இருக்கும்.

### الآية 80:40

> ﻿وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ [80:40]

அந்நாளில் இன்னும் (சில) முகங்கள், அவற்றின் மீது புழுதி இருக்கும்.

### الآية 80:41

> ﻿تَرْهَقُهَا قَتَرَةٌ [80:41]

கருமை அவற்றை மூடிக்கொள்ளும்.

### الآية 80:42

> ﻿أُولَٰئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ [80:42]

இவர்கள்தான் பெரும் பாவிகளான நிராகரிப்பாளர்கள் ஆவர்.

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/80.md)
- [كل تفاسير سورة عبس
](https://quranpedia.net/surah-tafsir/80.md)
- [ترجمات سورة عبس
](https://quranpedia.net/translations/80.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية - عمر شريف](https://quranpedia.net/book/27819.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/80/book/27819) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
