---
title: "ترجمة سورة التكوير - الترجمة التاميلية (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/81/book/1991.md"
canonical: "https://quranpedia.net/surah/1/81/book/1991"
surah_id: "81"
book_id: "1991"
book_name: "الترجمة التاميلية"
author: "عبد الحميد الباقوي"
type: "translation"
---

# ترجمة سورة التكوير - الترجمة التاميلية (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/81/book/1991)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة التكوير - الترجمة التاميلية (التاميلية) — https://quranpedia.net/surah/1/81/book/1991*.

Translation of Surah التكوير from "الترجمة التاميلية" in التاميلية.

### الآية 81:1

> إِذَا الشَّمْسُ كُوِّرَتْ [81:1]

1\. (உலக முடிவுக்காகச்) சூரியனின் பிரகாசம் மங்க வைக்கப்படும்போது,

### الآية 81:2

> ﻿وَإِذَا النُّجُومُ انْكَدَرَتْ [81:2]

2\. நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும்போது,

### الآية 81:3

> ﻿وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ [81:3]

3\. மலைகள் அதனிடங்களில் இருந்து அகற்றப்படும் போது,

### الآية 81:4

> ﻿وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ [81:4]

4\. (இந்த அமளிகளால் பத்துமாத) கர்ப்பமடைந்த ஒட்டகங்கள் (கவனிப்பின்றி) விடப்படும்போது.

### الآية 81:5

> ﻿وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ [81:5]

5\. காட்டு மிருகங்கள் (பயந்து ஊர்களில் வந்து) ஒன்றுகூடும்போது.

### الآية 81:6

> ﻿وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ [81:6]

6\. கடல் நீர் நெருப்பாக மாற்றப்படும்போது. (இவ்வாறு உலகம் முடிவுபெற்று, விசாரணைக் காலம் ஏற்படும்.)

### الآية 81:7

> ﻿وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ [81:7]

7\. அப்போது உயிர்கள் உடலுடன் (மீண்டும்) சேர்க்கப்படும்.

### الآية 81:8

> ﻿وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ [81:8]

8\. அப்போது (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தைகளை நோக்கி கேட்கப்படும்,

### الآية 81:9

> ﻿بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ [81:9]

9\. ‘‘எந்த குற்றத்திற்காக நீங்கள் (உயிருடன் புதைக்கப்பட்டுக்) கொலை செய்யப்பட்டீர்கள்?'' என்று.

### الآية 81:10

> ﻿وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ [81:10]

10\. அப்போது (விசாரணைக்காக மனிதர்களுடைய) ஏடுகள் விரிக்கப்படும்.

### الآية 81:11

> ﻿وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ [81:11]

11\. அப்போது வானம் (பிளந்து) அகற்றப்பட்டுவிடும்.

### الآية 81:12

> ﻿وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ [81:12]

12\. அப்போது நரகம் எரிக்கப்படும்.

### الآية 81:13

> ﻿وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ [81:13]

13\. அப்போது சொர்க்கம் சமீபமாகக் கொண்டு வரப்படும்.

### الآية 81:14

> ﻿عَلِمَتْ نَفْسٌ مَا أَحْضَرَتْ [81:14]

14\. (அந்நாளில்) ஒவ்வோர் ஆத்மாவும் (நன்மையோ தீமையோ) தான் செய்து கொண்டு வந்திருப்பதை நன்கறிந்து கொள்ளும்.

### الآية 81:15

> ﻿فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ [81:15]

15\. (மனிதர்களே!) சென்றவழியே மேலும் செல்லும் நட்சத்திரங்கள் மீது சத்தியமாக!

### الآية 81:16

> ﻿الْجَوَارِ الْكُنَّسِ [81:16]

16\. தோன்றி மறையும் (வால்) நட்சத்திரங்கள் மீது சத்தியமாக!

### الآية 81:17

> ﻿وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ [81:17]

17\. செல்கின்ற இரவின் மீதும் சத்தியமாக!

### الآية 81:18

> ﻿وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ [81:18]

18\. உதயமாகும் காலையின் மீதும் சத்தியமாக!

### الآية 81:19

> ﻿إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ [81:19]

19\. நிச்சயமாக (திரு குர்ஆன் என்னும்) இது மிக்க கண்ணியமுள்ள (ஜிப்ரயீல் என்னும்) ஒரு (வானவத்) தூதர் மூலம் கூறப்பட்டதாகும்.

### الآية 81:20

> ﻿ذِي قُوَّةٍ عِنْدَ ذِي الْعَرْشِ مَكِينٍ [81:20]

20\. அவர் மிக்க பலவான். அவருக்கு அர்ஷுடையவனிடத்தில் பெரும் பதவியுண்டு.

### الآية 81:21

> ﻿مُطَاعٍ ثَمَّ أَمِينٍ [81:21]

21\. (அவர் அவ்விடத்திலுள்ள வானவர்களின்) தலைவர்; மிக்க நம்பிக்கையுடையவர்.

### الآية 81:22

> ﻿وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُونٍ [81:22]

22\. (மக்காவாசிகளே! நம் தூதராகிய) உங்கள் தோழர் பைத்தியக்காரரல்ல.

### الآية 81:23

> ﻿وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ [81:23]

23\. நிச்சயமாக அவர் (ஜிப்ரயீலை) தெளிவான வானத்தின் கோடியில் மெய்யாகவே கண்டார்.

### الآية 81:24

> ﻿وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ [81:24]

24\. (அச்சமயம் அவர் கண்ட) மறைவானவற்றை (அறிவிப்பதில்) கஞ்சத்தனம் செய்பவரல்ல.

### الآية 81:25

> ﻿وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَجِيمٍ [81:25]

25\. இன்னும், இது வெருட்டப்பட்ட ஷைத்தானின் சொல்லுமல்ல.

### الآية 81:26

> ﻿فَأَيْنَ تَذْهَبُونَ [81:26]

26\. ஆகவே, (இதைவிட்டு) நீங்கள் எங்கு செல்லுகிறீர்கள்?

### الآية 81:27

> ﻿إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ [81:27]

27\. இது உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை.

### الآية 81:28

> ﻿لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَسْتَقِيمَ [81:28]

28\. உங்களில் எவர் நேரான பாதையில் செல்ல விரும்புகிறாரோ அவருக்கு (இது பயனளிக்கும்).

### الآية 81:29

> ﻿وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ [81:29]

29\. எனினும், உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ் நாடினால் தவிர, நீங்கள் (நல்லுணர்ச்சி பெற) விரும்பமாட்டீர்கள்.

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/81.md)
- [كل تفاسير سورة التكوير
](https://quranpedia.net/surah-tafsir/81.md)
- [ترجمات سورة التكوير
](https://quranpedia.net/translations/81.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية](https://quranpedia.net/book/1991.md)
- [المؤلف: عبد الحميد الباقوي](https://quranpedia.net/person/1766.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/81/book/1991) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
