---
title: "ترجمة سورة المطفّفين - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/83/book/27819.md"
canonical: "https://quranpedia.net/surah/1/83/book/27819"
surah_id: "83"
book_id: "27819"
book_name: "الترجمة التاميلية - عمر شريف"
type: "translation"
---

# ترجمة سورة المطفّفين - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/83/book/27819)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة المطفّفين - الترجمة التاميلية - عمر شريف (التاميلية) — https://quranpedia.net/surah/1/83/book/27819*.

Translation of Surah المطفّفين from "الترجمة التاميلية - عمر شريف" in التاميلية.

### الآية 83:1

> وَيْلٌ لِلْمُطَفِّفِينَ [83:1]

மோசடிக்காரர்களுக்குக் கேடுதான்.

வானம் பிளந்துவிடும் போது,

### الآية 83:2

> ﻿الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ [83:2]

அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும்போது, (அளவையில் பொருளை) நிறைவாக வாங்குகின்றனர்.

### الآية 83:3

> ﻿وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ [83:3]

அவர்களுக்காக (இவர்கள்) அளந்து கொடுக்கும் போது அல்லது அவர்களுக்காக நிறுத்துக் கொடுக்கும் போது (அளவையிலும் நிறுவையிலும்) குறைத்துக் கொடுக்கிறார்கள். (நஷ்டப்படுத்துகிறார்கள்.)

### الآية 83:4

> ﻿أَلَا يَظُنُّ أُولَٰئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ [83:4]

நிச்சயமாக தாங்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவோம் என்பதை அவர்கள் நம்பவில்லையா?

### الآية 83:5

> ﻿لِيَوْمٍ عَظِيمٍ [83:5]

மகத்தான ஒரு நாளில், (எழுப்பப்படுவதை அவர்கள் நம்பவில்லையா?)

### الآية 83:6

> ﻿يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ [83:6]

அகிலத்தார்களின் இறைவனுக்கு முன் அந்நாளில் மக்கள் நிற்பார்கள்.

### الآية 83:7

> ﻿كَلَّا إِنَّ كِتَابَ الْفُجَّارِ لَفِي سِجِّينٍ [83:7]

அவ்வாறல்ல, நிச்சயமாக தீயவர்களின் பதிவேடு சிஜ்ஜீனில்தான் இருக்கும்.

### الآية 83:8

> ﻿وَمَا أَدْرَاكَ مَا سِجِّينٌ [83:8]

இன்னும் சிஜ்ஜீன் என்ன(வென்று) உமக்கு அறிவித்தது எது?

### الآية 83:9

> ﻿كِتَابٌ مَرْقُومٌ [83:9]

(அது பாவிகளின் விவரங்கள்) எழுதப்பட்ட ஒரு பதிவேடு.

### الآية 83:10

> ﻿وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ [83:10]

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

### الآية 83:11

> ﻿الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ [83:11]

(அவர்கள்) கூலி நாளைப் பொய்ப்பிக்கின்றனர்.

### الآية 83:12

> ﻿وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ [83:12]

பெரும் பாவி, வரம்பு மீறுகிறவன் எல்லோரையும் தவிர (மற்றெவரும்) அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.

### الآية 83:13

> ﻿إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ [83:13]

அவன் மீது நம் வசனங்கள் ஓதப்பட்டால், (அவை) முன்னோரின் கட்டுக் கதைகள் எனக் கூறுகிறான்.

### الآية 83:14

> ﻿كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ [83:14]

அவ்வாறல்ல, மாறாக, அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய)வை அவர்களின் உள்ளங்கள் மீது (துருவாகப் படிந்து) மூடின.

### الآية 83:15

> ﻿كَلَّا إِنَّهُمْ عَنْ رَبِّهِمْ يَوْمَئِذٍ لَمَحْجُوبُونَ [83:15]

அவ்வாறல்ல, நிச்சயமாக அவர்கள் அந்நாளில் அவர்களுடைய இறைவனை விட்டுத் தடுக்கப்பட்டவர்கள்தான். (ஆகவே, அவர்கள் அல்லாஹ்வைக் காணவே மாட்டார்கள்.)

### الآية 83:16

> ﻿ثُمَّ إِنَّهُمْ لَصَالُو الْجَحِيمِ [83:16]

பிறகு, நிச்சயமாக அவர்கள் ஜஹீம் என்ற நரகத்தில் (தீ பற்றி) எரியக் கூடியவர்கள்தான்.

### الآية 83:17

> ﻿ثُمَّ يُقَالُ هَٰذَا الَّذِي كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ [83:17]

பிறகு, "நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தது இதுதான்'' என்று கூறப்படும்.

### الآية 83:18

> ﻿كَلَّا إِنَّ كِتَابَ الْأَبْرَارِ لَفِي عِلِّيِّينَ [83:18]

அவ்வாறல்ல, நிச்சயமாக நல்லோரின் பதிவேடு இல்லிய்யூனில் தான் இருக்கும்.

### الآية 83:19

> ﻿وَمَا أَدْرَاكَ مَا عِلِّيُّونَ [83:19]

(நபியே!) ‘இல்லிய்யூன்' என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

### الآية 83:20

> ﻿كِتَابٌ مَرْقُومٌ [83:20]

(அது நல்லோரின் செயல்கள்) எழுதப்பட்ட ஒரு பதிவேடு.

### الآية 83:21

> ﻿يَشْهَدُهُ الْمُقَرَّبُونَ [83:21]

நெருக்கமான (வான)வர்கள் அதைக் கண்காணிக்கிறார்கள்.

### الآية 83:22

> ﻿إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ [83:22]

நிச்சயமாக நல்லோர் "நயீம்' என்ற சொர்க்கத்தில்தான் இருப்பார்கள்.

### الآية 83:23

> ﻿عَلَى الْأَرَائِكِ يَنْظُرُونَ [83:23]

கட்டில்கள் மீது (அமர்ந்தவாறு) பார்ப்பார்கள்.

### الآية 83:24

> ﻿تَعْرِفُ فِي وُجُوهِهِمْ نَضْرَةَ النَّعِيمِ [83:24]

அவர்களின் முகங்களில் இன்பத்தின் செழிப்பை (நபியே! நீர்) அறிவீர்.

### الآية 83:25

> ﻿يُسْقَوْنَ مِنْ رَحِيقٍ مَخْتُومٍ [83:25]

முத்திரையிடப்பட்ட மதுவிலிருந்து புகட்டப்படுவார்கள்.

### الآية 83:26

> ﻿خِتَامُهُ مِسْكٌ ۚ وَفِي ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُونَ [83:26]

அதன் முத்திரை கஸ்தூரியாகும். ஆகவே, ஆசை வைப்போர் அதில் ஆசை வைக்கவும்.

### الآية 83:27

> ﻿وَمِزَاجُهُ مِنْ تَسْنِيمٍ [83:27]

இன்னும் அதன் கலவை "தஸ்னீம்'லிருந்து (இருக்கும்).

### الآية 83:28

> ﻿عَيْنًا يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ [83:28]

(தஸ்னீம் அது) ஒரு நீரூற்று, நெருக்கமாக்கப்பட்டவர்கள் அதில் பருகுவார்கள்.

### الآية 83:29

> ﻿إِنَّ الَّذِينَ أَجْرَمُوا كَانُوا مِنَ الَّذِينَ آمَنُوا يَضْحَكُونَ [83:29]

நிச்சயமாக குற்றம் புரிந்தவர்கள் நம்பிக்கையாளர்களைப் பார்த்து சிரிப்பவர்களாக இருந்தார்கள்.

### الآية 83:30

> ﻿وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ [83:30]

இன்னும் அவர்கள் (-குற்றவாளிகள்) அவர்களைக் கடந்து செல்லும்போது, (ஒருவருக்கொருவர்) கண் ஜாடை காட்டுகிறார்கள்.

### الآية 83:31

> ﻿وَإِذَا انْقَلَبُوا إِلَىٰ أَهْلِهِمُ انْقَلَبُوا فَكِهِينَ [83:31]

இன்னும் தங்கள் குடும்பத்தாரிடம் அவர்கள் திரும்பும்போது மகிழ்ச்சியாளர்களாகத் திரும்புகிறார்கள்.

### الآية 83:32

> ﻿وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَٰؤُلَاءِ لَضَالُّونَ [83:32]

அவர்கள் (-குற்றவாளிகள்) அவர்களைப் பார்க்கும்போது "நிச்சயமாக இவர்கள் வழிதவறியவர்கள்தான்'' எனக் கூறுகிறார்கள்.

### الآية 83:33

> ﻿وَمَا أُرْسِلُوا عَلَيْهِمْ حَافِظِينَ [83:33]

(இப்பாவிகளுக்கு அவர்களைப் பற்றி ஏன் இவ்வளவு கவலை?) அவர்கள் மீது கண்காணிப்பவர்களாக இவர்கள் அனுப்பப்படவில்லையே!

### الآية 83:34

> ﻿فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ [83:34]

ஆகவே, (மறுமை நாளாகிய) இன்று நம்பிக்கையாளர்கள் நிராகரிப்பாளர்களைப் பார்த்து சிரிப்பார்கள்.

### الآية 83:35

> ﻿عَلَى الْأَرَائِكِ يَنْظُرُونَ [83:35]

கட்டில்கள் மீது (அமர்ந்தவர்களாக பாவிகள் தண்டிக்கப்படுவதை) பார்ப்பார்கள்.

### الآية 83:36

> ﻿هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوا يَفْعَلُونَ [83:36]

நிராகரிப்பாளர்கள் தாங்கள் செய்து கொண்டிருந்ததற்கு கூலி கொடுக்கப்பட்டார்களா?

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/83.md)
- [كل تفاسير سورة المطفّفين
](https://quranpedia.net/surah-tafsir/83.md)
- [ترجمات سورة المطفّفين
](https://quranpedia.net/translations/83.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية - عمر شريف](https://quranpedia.net/book/27819.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/83/book/27819) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
