---
title: "ترجمة سورة الإنشقاق - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/84/book/27819.md"
canonical: "https://quranpedia.net/surah/1/84/book/27819"
surah_id: "84"
book_id: "27819"
book_name: "الترجمة التاميلية - عمر شريف"
type: "translation"
---

# ترجمة سورة الإنشقاق - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/84/book/27819)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة الإنشقاق - الترجمة التاميلية - عمر شريف (التاميلية) — https://quranpedia.net/surah/1/84/book/27819*.

Translation of Surah الإنشقاق from "الترجمة التاميلية - عمر شريف" in التاميلية.

### الآية 84:1

> إِذَا السَّمَاءُ انْشَقَّتْ [84:1]

கோள்களுடைய வானத்தின் மீது சத்தியமாக!

### الآية 84:2

> ﻿وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ [84:2]

அது தன் இறைவனுக்குச் செவிசாய்த்தது இன்னும் கீழ்ப்படிந்தது,

### الآية 84:3

> ﻿وَإِذَا الْأَرْضُ مُدَّتْ [84:3]

. பூமி விரிக்கப்பட்டு, அது தன்னில் உள்ளவற்றை எரிந்து, காலியாகி விடும்போது.

### الآية 84:4

> ﻿وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ [84:4]

. பூமி விரிக்கப்பட்டு, அது தன்னில் உள்ளவற்றை எரிந்து, காலியாகி விடும்போது.

### الآية 84:5

> ﻿وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ [84:5]

அது தன் இறைவனுக்குச் செவிசாய்த்தது இன்னும் கீழ்ப்படிந்தது,

### الآية 84:6

> ﻿يَا أَيُّهَا الْإِنْسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ [84:6]

மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவன் பக்கம் சிரமத்தோடு முயற்சிப்பவனாக இருக்கிறாய். அடுத்து நீ அவனை சந்திப்பாய்.

### الآية 84:7

> ﻿فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ [84:7]

ஆக, யார் தன் வலக்கரத்தில் தன் பதிவேடு கொடுக்கப்பட்டாரோ (அவர்),

### الآية 84:8

> ﻿فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا [84:8]

அவர் இலகுவாகவே கணக்குக் கேட்கப்படுவார்.

### الآية 84:9

> ﻿وَيَنْقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا [84:9]

இன்னும் மகிழ்ச்சியானவராகத் தன் குடும்பத்தார் பக்கம் திரும்புவார்.

### الآية 84:10

> ﻿وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ [84:10]

ஆக, யார் தன் பதிவேடு தன் முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்பட்டானோ,

### الآية 84:11

> ﻿فَسَوْفَ يَدْعُو ثُبُورًا [84:11]

நாசமே! என அவன் கூவுவான்.

### الآية 84:12

> ﻿وَيَصْلَىٰ سَعِيرًا [84:12]

"சயீர்' என்ற நரகத்தில் அவன் பொசுங்குவான்.

### الآية 84:13

> ﻿إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا [84:13]

நிச்சயமாக அவன் (உலகில்) தன் குடும்பத்தில் மகிழ்ச்சியானவனாக இருந்தான்.

### الآية 84:14

> ﻿إِنَّهُ ظَنَّ أَنْ لَنْ يَحُورَ [84:14]

நிச்சயமாக அவன், (தன் இறைவனிடம்) திரும்பிவரவே மாட்டான் என எண்ணினான்.

### الآية 84:15

> ﻿بَلَىٰ إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا [84:15]

ஏனில்லை! நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனை உற்று நோக்குபவனாக இருக்கிறான்.

### الآية 84:16

> ﻿فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ [84:16]

ஆகவே, செம்மேகத்தின் மேல் சத்தியமிடுகிறேன்!

### الآية 84:17

> ﻿وَاللَّيْلِ وَمَا وَسَقَ [84:17]

இரவின் மீது சத்தியமாக! (அது) ஒன்று சேர்த்தவை மீது சத்தியமாக!

### الآية 84:18

> ﻿وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ [84:18]

சந்திரன் மீது சத்தியமாக! அது (பூரண நிலவாக) முழுமையடையும்போது,

### الآية 84:19

> ﻿لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍ [84:19]

ஒரு நிலையிலிருந்து ஒரு நிலைக்கு நிச்சயமாகப் பயணிக்கிறீர்கள்.

### الآية 84:20

> ﻿فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ [84:20]

ஆகவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது)? அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.

### الآية 84:21

> ﻿وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩ [84:21]

அவர்கள் மீது அல்குர்ஆன் ஓதப்பட்டால், அவர்கள் சிரம் பணிவதில்லை.

### الآية 84:22

> ﻿بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ [84:22]

மாறாக, நிராகரிப்பாளர்கள் (இந்த குர்ஆனை) பொய்ப்பிக்கின்றனர்.

### الآية 84:23

> ﻿وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ [84:23]

அவர்கள் (தங்கள் உள்ளங்களில்) சேகரிப்பதை (-மறைப்பதை) அல்லாஹ் மிக அறிந்தவன்.

### الآية 84:24

> ﻿فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ [84:24]

ஆகவே, துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!

### الآية 84:25

> ﻿إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ [84:25]

(அவர்களில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களைத் தவிர, அவர்களுக்கு முடிவுறாத (கணக்கற்ற, குறையாத) நன்மை உண்டு.

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/84.md)
- [كل تفاسير سورة الإنشقاق
](https://quranpedia.net/surah-tafsir/84.md)
- [ترجمات سورة الإنشقاق
](https://quranpedia.net/translations/84.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية - عمر شريف](https://quranpedia.net/book/27819.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/84/book/27819) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
