---
title: "ترجمة سورة البروج - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/85/book/27819.md"
canonical: "https://quranpedia.net/surah/1/85/book/27819"
surah_id: "85"
book_id: "27819"
book_name: "الترجمة التاميلية - عمر شريف"
type: "translation"
---

# ترجمة سورة البروج - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/85/book/27819)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة البروج - الترجمة التاميلية - عمر شريف (التاميلية) — https://quranpedia.net/surah/1/85/book/27819*.

Translation of Surah البروج from "الترجمة التاميلية - عمر شريف" in التاميلية.

### الآية 85:1

> وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ [85:1]

வானத்தின் மீது சத்தியமாக! "தாரிக்'கின் மீது (-இரவில் தோன்றி பகலில் மறையும் நட்சத்திரத்தின் மீது) சத்தியமாக!

### الآية 85:2

> ﻿وَالْيَوْمِ الْمَوْعُودِ [85:2]

வாக்களிக்கப்பட்ட (மறுமை) நாள் மீது சத்தியமாக!

### الآية 85:3

> ﻿وَشَاهِدٍ وَمَشْهُودٍ [85:3]

சாட்சியாளர் (-வெள்ளிக்கிழமை) மீது சத்தியமாக! சாட்சியாக்கப்பட்ட (-அரஃபா நாள்) மீது சத்தியமாக!

### الآية 85:4

> ﻿قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ [85:4]

. அகழ்க்காரர்கள் அழிக்கப்பட்டார்கள். விறகுகளுடைய நெருப்புடையவர்கள் (அழிக்கப்பட்டார்கள்).

### الآية 85:5

> ﻿النَّارِ ذَاتِ الْوَقُودِ [85:5]

. அகழ்க்காரர்கள் அழிக்கப்பட்டார்கள். விறகுகளுடைய நெருப்புடையவர்கள் (அழிக்கப்பட்டார்கள்).

### الآية 85:6

> ﻿إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ [85:6]

அதனருகில் அவர்கள் உட்கார்ந்திருந்தபோது,

### الآية 85:7

> ﻿وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ [85:7]

அவர்கள் நம்பிக்கையாளர்களுக்கு எதை செய்வார்களோ (அதற்காக) ஆஜராகி இருந்தார்கள்.

### الآية 85:8

> ﻿وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ [85:8]

மிகைத்தவனாகிய, புகழாளனாகிய, அல்லாஹ்வை (முஃமின்கள்) நம்பிக்கை கொண்டதற்காகவே தவிர அவர்களை (அந்த அகழ்க்காரர்கள்) தண்டிக்கவில்லை.

### الآية 85:9

> ﻿الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ [85:9]

வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் சாட்சியாளன்.

### الآية 85:10

> ﻿إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ [85:10]

நிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் துன்புறுத்தி, பிறகு (அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி, வருந்தி, தங்கள் நிராகரிப்பை விட்டு) திருந்தவில்லையோ, அவர்களுக்கு ‘ஜஹன்னம்' என்ற நரகத்தின் வேதனை உண்டு. இன்னும், சுட்டெரிக்கக்கூடிய வேதனையும் அவர்களுக்கு உண்டு.

### الآية 85:11

> ﻿إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْكَبِيرُ [85:11]

நிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்தார்களோ அவர்களுக்கு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் கீழிருந்து நதிகள் ஓடும், அதுதான் பெரும் வெற்றி.

### الآية 85:12

> ﻿إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ [85:12]

நிச்சயமாக உம் இறைவனின் பிடி கடுமையானதுதான்.

### الآية 85:13

> ﻿إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ [85:13]

நிச்சயமாக அவன்தான் (படைப்பை புதிதாக) உற்பத்தி செய்கிறான். இன்னும் (அவற்றை அழித்து பின்னர் அவற்றை) மீட்கிறான்.

### الآية 85:14

> ﻿وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ [85:14]

அவன்தான் மகா மன்னிப்பாளன்; மகா நேசன்.

### الآية 85:15

> ﻿ذُو الْعَرْشِ الْمَجِيدُ [85:15]

(அவன்தான்) அர்ஷுடையவன், பெரும் மதிப்பிற்குரியவன்.

### الآية 85:16

> ﻿فَعَّالٌ لِمَا يُرِيدُ [85:16]

(அவன்) தான் நாடுவதைச் செய்து முடிப்பவன்.

### الآية 85:17

> ﻿هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ [85:17]

. (நபியே!) ஃபிர்அவ்ன், இன்னும் ஸமூது (உடைய) ராணுவங்களின் செய்தி உமக்கு வந்ததா?

### الآية 85:18

> ﻿فِرْعَوْنَ وَثَمُودَ [85:18]

. (நபியே!) ஃபிர்அவ்ன், இன்னும் ஸமூது (உடைய) ராணுவங்களின் செய்தி உமக்கு வந்ததா?

### الآية 85:19

> ﻿بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ [85:19]

மாறாக, நிராகரிப்பாளர்கள் (இந்தக் குர்ஆனைப்) பொய்ப்பிப்பதில்தான் (தீவிரமாக) இருக்கின்றனர்.

### الآية 85:20

> ﻿وَاللَّهُ مِنْ وَرَائِهِمْ مُحِيطٌ [85:20]

அல்லாஹ், அவர்களுக்குப் பின்னாலிருந்து சூழ்ந்திருக்கின்றான்.

### الآية 85:21

> ﻿بَلْ هُوَ قُرْآنٌ مَجِيدٌ [85:21]

மாறாக, இது பெரும் மதிப்பிற்குரிய குர்ஆனாகும்.

### الآية 85:22

> ﻿فِي لَوْحٍ مَحْفُوظٍ [85:22]

(அது) பாதுகாக்கப்பட்ட பலகையில் (பத்திரப்படுத்தப்பட்டுள்ளது).

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/85.md)
- [كل تفاسير سورة البروج
](https://quranpedia.net/surah-tafsir/85.md)
- [ترجمات سورة البروج
](https://quranpedia.net/translations/85.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية - عمر شريف](https://quranpedia.net/book/27819.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/85/book/27819) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
