---
title: "ترجمة سورة الأعلى - الترجمة التاميلية (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/87/book/1991.md"
canonical: "https://quranpedia.net/surah/1/87/book/1991"
surah_id: "87"
book_id: "1991"
book_name: "الترجمة التاميلية"
author: "عبد الحميد الباقوي"
type: "translation"
---

# ترجمة سورة الأعلى - الترجمة التاميلية (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/87/book/1991)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة الأعلى - الترجمة التاميلية (التاميلية) — https://quranpedia.net/surah/1/87/book/1991*.

Translation of Surah الأعلى from "الترجمة التاميلية" in التاميلية.

### الآية 87:1

> سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى [87:1]

1\. (நபியே!) மிக மேலான உமது இறைவனின் திருப்பெயரை நீர் புகழ்ந்து துதி செய்வீராக;

### الآية 87:2

> ﻿الَّذِي خَلَقَ فَسَوَّىٰ [87:2]

2\. அவனே (எல்லா படைப்புகளையும்) படைத்து, (அவற்றை) ஒழுங்குபடுத்தியவன்.

### الآية 87:3

> ﻿وَالَّذِي قَدَّرَ فَهَدَىٰ [87:3]

3\. அவனே (அவற்றுக்கு வேண்டிய சகலவற்றையும்) நிர்ணயம் செய்து, (அவற்றை அடையக் கூடிய) வழிகளையும் (அவற்றுக்கு) அறிவித்தான்.

### الآية 87:4

> ﻿وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَىٰ [87:4]

4\. அவனே (கால்நடைகளுக்கு) மேய்ச்சல் பொருள்களையும் வெளிப்படுத்துகிறான்.

### الآية 87:5

> ﻿فَجَعَلَهُ غُثَاءً أَحْوَىٰ [87:5]

5\. பின்னர் அவற்றை உலர்ந்த சருகுகளாக ஆக்குகிறான்.

### الآية 87:6

> ﻿سَنُقْرِئُكَ فَلَا تَنْسَىٰ [87:6]

6, 7. (நபியே! இந்த குர்ஆனை) நாம் உமக்கு ஓதக் கற்பிப்போம். அல்லாஹ் நாடினாலே தவிர, (அதில் எதையும்) நீர் மறக்க மாட்டீர். நிச்சயமாக அவன் மறைந்திருப்பவற்றையும் வெளிப்படையானதையும் நன்கறிகிறான்.

### الآية 87:7

> ﻿إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَىٰ [87:7]

6, 7. (நபியே! இந்த குர்ஆனை) நாம் உமக்கு ஓதக் கற்பிப்போம். அல்லாஹ் நாடினாலே தவிர, (அதில் எதையும்) நீர் மறக்க மாட்டீர். நிச்சயமாக அவன் மறைந்திருப்பவற்றையும் வெளிப்படையானதையும் நன்கறிகிறான்.

### الآية 87:8

> ﻿وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ [87:8]

8\. சொர்க்கப் பாதையை நாம் உமக்கு எளிதாக்கித் தருவோம்.

### الآية 87:9

> ﻿فَذَكِّرْ إِنْ نَفَعَتِ الذِّكْرَىٰ [87:9]

9\. ஆகவே, நல்லுபதேசம் (மக்களுக்குப்) பயனளிக்கின்ற வரை நீர் உபதேசித்துக் கொண்டே வருவீராக.

### الآية 87:10

> ﻿سَيَذَّكَّرُ مَنْ يَخْشَىٰ [87:10]

10\. நிச்சயமாக எவர் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ அவர், (இதைக் கொண்டு) நல்லறிவை அடைவார்.

### الآية 87:11

> ﻿وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى [87:11]

11\. துர்ப்பாக்கியமுடையவனோ, இதிலிருந்து விலகிக்கொள்வான்.

### الآية 87:12

> ﻿الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَىٰ [87:12]

12\. (எனினும்,) அவன் (நரகத்தின்) பெரிய நெருப்பை அடைவான்.

### الآية 87:13

> ﻿ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ [87:13]

13\. பின்னர், அதில் அவன் மரணிக்கவுமாட்டான்; (சுகமாக) வாழவும் மாட்டான்.

### الآية 87:14

> ﻿قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّىٰ [87:14]

14\. எவர் (பாவங்களை விட்டு விலகிப்) பரிசுத்தவானாக ஆனாரோ அவர், நிச்சயமாக வெற்றி பெற்றார்.

### الآية 87:15

> ﻿وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ [87:15]

15\. அவன் தன் இறைவனின் திருப்பெயரை நினைவு செய்து கொண்டும், தொழுது கொண்டுமிருப்பார்.

### الآية 87:16

> ﻿بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا [87:16]

16\. எனினும், நீங்களோ (மறுமையை விட்டுவிட்டு) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.

### الآية 87:17

> ﻿وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ [87:17]

17\. மறுமையின் வாழ்க்கைதான் மிக்க மேலானதும் நிலையானதுமாகும்.

### الآية 87:18

> ﻿إِنَّ هَٰذَا لَفِي الصُّحُفِ الْأُولَىٰ [87:18]

18\. நிச்சயமாக இது முன்னுள்ள வேதங்களிலும்,

### الآية 87:19

> ﻿صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰ [87:19]

19\. இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் இருக்கிறது.

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/87.md)
- [كل تفاسير سورة الأعلى
](https://quranpedia.net/surah-tafsir/87.md)
- [ترجمات سورة الأعلى
](https://quranpedia.net/translations/87.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية](https://quranpedia.net/book/1991.md)
- [المؤلف: عبد الحميد الباقوي](https://quranpedia.net/person/1766.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/87/book/1991) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
