---
title: "ترجمة سورة الأعلى - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/87/book/27819.md"
canonical: "https://quranpedia.net/surah/1/87/book/27819"
surah_id: "87"
book_id: "27819"
book_name: "الترجمة التاميلية - عمر شريف"
type: "translation"
---

# ترجمة سورة الأعلى - الترجمة التاميلية - عمر شريف (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/87/book/27819)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة الأعلى - الترجمة التاميلية - عمر شريف (التاميلية) — https://quranpedia.net/surah/1/87/book/27819*.

Translation of Surah الأعلى from "الترجمة التاميلية - عمر شريف" in التاميلية.

### الآية 87:1

> سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى [87:1]

(நபியே!) சூழக்கூடிய (மறுமை தினத்)தின் செய்தி உமக்கு வந்ததா?

### الآية 87:2

> ﻿الَّذِي خَلَقَ فَسَوَّىٰ [87:2]

அவன்தான் படைத்தான்; இன்னும் ஒழுங்கு படுத்தினான்.

### الآية 87:3

> ﻿وَالَّذِي قَدَّرَ فَهَدَىٰ [87:3]

அவன்தான் நிர்ணயம் செய்தான்; இன்னும் வழிகாட்டினான்.

### الآية 87:4

> ﻿وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَىٰ [87:4]

அவன்தான் பசுமையான புல்லை வெளியாக்கினான். (முளைக்க வைத்தான்.)

### الآية 87:5

> ﻿فَجَعَلَهُ غُثَاءً أَحْوَىٰ [87:5]

(பிறகு) அதைக் கருத்த (காய்ந்துபோன) சருகாக ஆக்கினான்.

### الآية 87:6

> ﻿سَنُقْرِئُكَ فَلَا تَنْسَىٰ [87:6]

(நபியே! அல்குர்ஆனை) உமக்குக் கற்பிப்போம். (அதிலிருந்து எதையும்) நீர் மறக்க மாட்டீர்,

### الآية 87:7

> ﻿إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَىٰ [87:7]

அல்லாஹ் நாடியதைத் தவிர. நிச்சயமாக அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிவான்.

### الآية 87:8

> ﻿وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ [87:8]

சொர்க்கப் பாதையை உமக்கு இலகுவாக்குவோம்.

### الآية 87:9

> ﻿فَذَكِّرْ إِنْ نَفَعَتِ الذِّكْرَىٰ [87:9]

ஆகவே, அறிவுரை பலனளித்தால் அறிவுரை கூறுவீராக!

### الآية 87:10

> ﻿سَيَذَّكَّرُ مَنْ يَخْشَىٰ [87:10]

(அல்லாஹ்வை) பயப்படுகிறவர் (அதன் மூலம்) அறிவுரை பெறுவார்.

### الآية 87:11

> ﻿وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى [87:11]

இன்னும் பெரும் துர்ப்பாக்கியவான் அதைத் தவிர்த்துவிடுவான்.

### الآية 87:12

> ﻿الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَىٰ [87:12]

(அவன்) மாபெரும் (நரக) நெருப்பில் பற்றி எரிவான்.

### الآية 87:13

> ﻿ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ [87:13]

பிறகு, அதில் மரணிக்கவும் மாட்டான்; இன்னும் வாழவும் மாட்டான்.

### الآية 87:14

> ﻿قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّىٰ [87:14]

(இஸ்லாமை ஏற்று) பரிசுத்தமடைந்தவர் திட்டமாக வெற்றி பெற்றார்.

### الآية 87:15

> ﻿وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ [87:15]

இன்னும் (அவர்) தன் இறைவனின் பெயரை நினைவு கூர்ந்தார்; இன்னும் (ஐவேளை) தொழுதார்.

### الآية 87:16

> ﻿بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا [87:16]

மாறாக, (அற்ப) உலக வாழ்வைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்.

### الآية 87:17

> ﻿وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ [87:17]

மறுமையோ மிகச் சிறந்தது; என்றும் நிலையானது.

### الآية 87:18

> ﻿إِنَّ هَٰذَا لَفِي الصُّحُفِ الْأُولَىٰ [87:18]

நிச்சயமாக இது முந்திய வேதங்களிலும் (கூறப்பட்டு) இருக்கிறது.

### الآية 87:19

> ﻿صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰ [87:19]

(இது) இப்றாஹீம் இன்னும் மூஸா உடைய வேதங்களில் (இருக்கிறது).

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/87.md)
- [كل تفاسير سورة الأعلى
](https://quranpedia.net/surah-tafsir/87.md)
- [ترجمات سورة الأعلى
](https://quranpedia.net/translations/87.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية - عمر شريف](https://quranpedia.net/book/27819.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/87/book/27819) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
