---
title: "ترجمة سورة الغاشية - Jan Trust Foundation - Tamil translation (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/88/book/13653.md"
canonical: "https://quranpedia.net/surah/1/88/book/13653"
surah_id: "88"
book_id: "13653"
book_name: "Jan Trust Foundation - Tamil translation"
type: "translation"
---

# ترجمة سورة الغاشية - Jan Trust Foundation - Tamil translation (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/88/book/13653)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة الغاشية - Jan Trust Foundation - Tamil translation (التاميلية) — https://quranpedia.net/surah/1/88/book/13653*.

Translation of Surah الغاشية from "Jan Trust Foundation - Tamil translation" in التاميلية.

### الآية 88:1

> هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ [88:1]

---

هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ


சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?

---

### الآية 88:2

> ﻿وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ [88:2]

وُجُوهٞ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ


அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.

---

### الآية 88:3

> ﻿عَامِلَةٌ نَاصِبَةٌ [88:3]

عَامِلَةٞ نَّاصِبَةٞ


அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.

---

### الآية 88:4

> ﻿تَصْلَىٰ نَارًا حَامِيَةً [88:4]

تَصۡلَىٰ نَارًا حَامِيَةٗ


கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.

---

### الآية 88:5

> ﻿تُسْقَىٰ مِنْ عَيْنٍ آنِيَةٍ [88:5]

تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٖ


கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.

---

### الآية 88:6

> ﻿لَيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِنْ ضَرِيعٍ [88:6]

لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٖ


அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.

---

### الآية 88:7

> ﻿لَا يُسْمِنُ وَلَا يُغْنِي مِنْ جُوعٍ [88:7]

لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٖ


அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது.

---

### الآية 88:8

> ﻿وُجُوهٌ يَوْمَئِذٍ نَاعِمَةٌ [88:8]

وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاعِمَةٞ


அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.

---

### الآية 88:9

> ﻿لِسَعْيِهَا رَاضِيَةٌ [88:9]

لِّسَعۡيِهَا رَاضِيَةٞ


தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.

---

### الآية 88:10

> ﻿فِي جَنَّةٍ عَالِيَةٍ [88:10]

فِي جَنَّةٍ عَالِيَةٖ


உன்னதமான சுவர்க்கச் சோலையில்-

---

### الآية 88:11

> ﻿لَا تَسْمَعُ فِيهَا لَاغِيَةً [88:11]

لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةٗ


அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.

---

### الآية 88:12

> ﻿فِيهَا عَيْنٌ جَارِيَةٌ [88:12]

فِيهَا عَيۡنٞ جَارِيَةٞ


அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.

---

### الآية 88:13

> ﻿فِيهَا سُرُرٌ مَرْفُوعَةٌ [88:13]

فِيهَا سُرُرٞ مَّرۡفُوعَةٞ


அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.

---

### الآية 88:14

> ﻿وَأَكْوَابٌ مَوْضُوعَةٌ [88:14]

وَأَكۡوَابٞ مَّوۡضُوعَةٞ


(அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.

---

### الآية 88:15

> ﻿وَنَمَارِقُ مَصْفُوفَةٌ [88:15]

وَنَمَارِقُ مَصۡفُوفَةٞ


மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-

---

### الآية 88:16

> ﻿وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ [88:16]

وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ


விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.

---

### الآية 88:17

> ﻿أَفَلَا يَنْظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ [88:17]

أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ


(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-

---

### الآية 88:18

> ﻿وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ [88:18]

وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ


மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,

---

### الآية 88:19

> ﻿وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ [88:19]

وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ


இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,

---

### الآية 88:20

> ﻿وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ [88:20]

وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ


இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)

---

### الآية 88:21

> ﻿فَذَكِّرْ إِنَّمَا أَنْتَ مُذَكِّرٌ [88:21]

فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٞ


ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.

---

### الآية 88:22

> ﻿لَسْتَ عَلَيْهِمْ بِمُصَيْطِرٍ [88:22]

لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ


அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.

---

### الآية 88:23

> ﻿إِلَّا مَنْ تَوَلَّىٰ وَكَفَرَ [88:23]

إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ


ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-

---

### الآية 88:24

> ﻿فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرَ [88:24]

فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ


அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.

---

### الآية 88:25

> ﻿إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ [88:25]

إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ


நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.

---

### الآية 88:26

> ﻿ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ [88:26]

ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم


பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.

---

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/88.md)
- [كل تفاسير سورة الغاشية
](https://quranpedia.net/surah-tafsir/88.md)
- [ترجمات سورة الغاشية
](https://quranpedia.net/translations/88.md)
- [صفحة الكتاب: Jan Trust Foundation - Tamil translation](https://quranpedia.net/book/13653.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/88/book/13653) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
