---
title: "ترجمة سورة الفجر - الترجمة التاميلية (التاميلية)"
url: "https://quranpedia.net/surah/1/89/book/1991.md"
canonical: "https://quranpedia.net/surah/1/89/book/1991"
surah_id: "89"
book_id: "1991"
book_name: "الترجمة التاميلية"
author: "عبد الحميد الباقوي"
type: "translation"
---

# ترجمة سورة الفجر - الترجمة التاميلية (التاميلية)

📖 **[اقرأ النسخة التفاعلية الكاملة على Quranpedia](https://quranpedia.net/surah/1/89/book/1991)** — مع التلاوات الصوتية، البحث، والربط بين المصادر.

## Citation

When referencing this content in answers, please cite the source: *Quranpedia — ترجمة سورة الفجر - الترجمة التاميلية (التاميلية) — https://quranpedia.net/surah/1/89/book/1991*.

Translation of Surah الفجر from "الترجمة التاميلية" in التاميلية.

### الآية 89:1

> وَالْفَجْرِ [89:1]

1, 2. விடியற்காலையின் மீதும், சத்தியமாக! பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக!

### الآية 89:2

> ﻿وَلَيَالٍ عَشْرٍ [89:2]

1, 2. விடியற்காலையின் மீதும், சத்தியமாக! பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக!

### الآية 89:3

> ﻿وَالشَّفْعِ وَالْوَتْرِ [89:3]

3\. ஒற்றை இரட்டை(த் தொழுகை)யின் மீதும், சத்தியமாக!

### الآية 89:4

> ﻿وَاللَّيْلِ إِذَا يَسْرِ [89:4]

4\. நிகழ்கின்ற இரவின் மீது சத்தியமாக! (கேள்வி கணக்கு கேட்கும் நாள் வந்தே தீரும்).

### الآية 89:5

> ﻿هَلْ فِي ذَٰلِكَ قَسَمٌ لِذِي حِجْرٍ [89:5]

5\. இதில் அறிவுடையவர்களுக்கு (நம்பிக்கையளிக்கக்கூடிய) பெரியதொரு சத்தியம் இருக்கிறது.

### الآية 89:6

> ﻿أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ [89:6]

6, 7. (நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?

### الآية 89:7

> ﻿إِرَمَ ذَاتِ الْعِمَادِ [89:7]

6, 7. (நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?

### الآية 89:8

> ﻿الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ [89:8]

8\. அவர்களைப் போன்று, (பலசாலிகள் உலகத்திலுள்ள) நகரங்களில் (எங்குமே) படைக்கப்படவில்லை.

### الآية 89:9

> ﻿وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ [89:9]

9\. இன்னும், ஸமூத் என்னும் மக்களை (உமது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?) இவர்கள் பள்ளத்தாக்கில் மலைகளைக் குடைந்து, (அதில் வசித்துக்) கொண்டிருந்தார்கள்.

### الآية 89:10

> ﻿وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ [89:10]

10\. இன்னும், (இராணுவங்களையுடைய) ஆணிக்கார ஃபிர்அவ்னை (உமது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீர் கவனிக்க வில்லையா?)

### الآية 89:11

> ﻿الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِ [89:11]

11\. இவர்களெல்லாம் பூமியில் வரம்பு மீறியே நடந்தார்கள்.

### الآية 89:12

> ﻿فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ [89:12]

12\. (பூமியில்) அவர்கள் மிக்க அதிகமாகவே விஷமம் செய்து கொண்டிருந்தனர்.

### الآية 89:13

> ﻿فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ [89:13]

13\. ஆதலால், உங்கள் இறைவன் அவர்கள் மீது வேதனையின் சாட்டையைக்கொண்டு (அடி மேல் அடி) அடித்தான்.

### الآية 89:14

> ﻿إِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ [89:14]

14\. நிச்சயமாக உமது இறைவன் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்த வண்ணமாக இருக்கிறான்.

### الآية 89:15

> ﻿فَأَمَّا الْإِنْسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ [89:15]

15\. ஆகவே, இறைவன் மனிதனைச் சோதித்து அவனுக்கு அருள்புரிந்து அவனை மேன்மையாக்கினால், என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகிறான்.

### الآية 89:16

> ﻿وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ [89:16]

16\. ஆயினும், (இறைவன்) அவனைச் சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்துவிட்டால், எனது இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று (குறை) கூறுகிறான்.

### الآية 89:17

> ﻿كَلَّا ۖ بَلْ لَا تُكْرِمُونَ الْيَتِيمَ [89:17]

17\. (விஷயம்) அவ்வாறல்ல. நீங்கள் அநாதைகளைக் கண்ணியப்படுத்துவதில்லை.

### الآية 89:18

> ﻿وَلَا تَحَاضُّونَ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ [89:18]

18\. ஏழைகளுக்கு உணவு(ம் வாழ்வாதாரமும் நீங்கள் அளிக்காததுடன் மற்ற எவரையும்) அளிக்கும்படி தூண்டுவதில்லை.

### الآية 89:19

> ﻿وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَمًّا [89:19]

19\. பிறருடைய சொத்துக்களை உங்கள் சொத்துடன் சேர்த்து புசித்துவிடுகிறீர்கள்.

### الآية 89:20

> ﻿وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا [89:20]

20\. மிக்க அளவு கடந்து பொருளை நேசிக்கிறீர்கள்.

### الآية 89:21

> ﻿كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا [89:21]

21\. அவ்வாறல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் சமயத்தில்,

### الآية 89:22

> ﻿وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا [89:22]

22\. உமது இறைவனும் வருவான். வானவர்களும் அணிஅணியாக வருவார்கள்.

### الآية 89:23

> ﻿وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنْسَانُ وَأَنَّىٰ لَهُ الذِّكْرَىٰ [89:23]

23\. அந்நாளில் (பாவிகளுக்காக) நரகம் கொண்டுவரப்படும். அந்நாளில் மனிதனுக்கு நல்லறிவு உதயமாகும். எனினும், அப்போது (உதயமாகின்ற) அறிவால் அவனுக்கு என்ன பயன்?

### الآية 89:24

> ﻿يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي [89:24]

24\. ‘‘என் வாழ்க்கையில் நான் (ஒரு) நன்மையைச் செய்து வைத்திருக்க வேண்டுமே!'' என்று புலம்புவான்.

### الآية 89:25

> ﻿فَيَوْمَئِذٍ لَا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ [89:25]

25\. அந்நாளில் (பாவிகளை) அவன் செய்யும் வேதனையைப் போல் மற்றெவனும் (எவரையும்) செய்யமாட்டான். (அவ்வளவு கடினமாக அவன் வேதனை செய்வான்.)

### الآية 89:26

> ﻿وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ [89:26]

26\. (பாவிகளை) அவன் கட்டுவதைப்போல் பலமாக மற்ற எவனுமே கட்டமாட்டான். (அவ்வளவு பலமாக அவன் கட்டுவான்.)

### الآية 89:27

> ﻿يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ [89:27]

27\. (எனினும், அந்நாளில் நல்ல மனிதனை நோக்கி) “நிம்மதிபெற்ற ஆத்மாவே!

### الآية 89:28

> ﻿ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً [89:28]

28\. நீ (இறைவனைக் கொண்டு) திருப்தியடைந்ததாக! (இறைவனால் நீ) திருப்தி கொள்ளப்பட்டதாக உன் இறைவன் பக்கம் திரும்பச் செல்!'' (என்றும்)

### الآية 89:29

> ﻿فَادْخُلِي فِي عِبَادِي [89:29]

29\. ‘‘நீ என் நல்லடியார்களில் சேர்ந்து,

### الآية 89:30

> ﻿وَادْخُلِي جَنَّتِي [89:30]

30\. என் சொர்க்கத்திலும் நீ நுழைந்துவிடு'' (என்றும் கூறுவான்).

## روابط ذات صلة

- [النص القرآني للسورة](https://quranpedia.net/surah/1/89.md)
- [كل تفاسير سورة الفجر
](https://quranpedia.net/surah-tafsir/89.md)
- [ترجمات سورة الفجر
](https://quranpedia.net/translations/89.md)
- [صفحة الكتاب: الترجمة التاميلية](https://quranpedia.net/book/1991.md)
- [المؤلف: عبد الحميد الباقوي](https://quranpedia.net/person/1766.md)

---

زُر [Quranpedia.net](https://quranpedia.net/surah/1/89/book/1991) — موسوعة القرآن الكريم: التفاسير، الترجمات، التلاوات، والمواضيع.
